தங்கபாலுவிடம்...
"தமிழக காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்கிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?"
"தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை நண்பர் இளங்கோவனுக்கு யார், எப்போது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மாநிலத் தலைவரை நியமிப்பதற்கும் இதுபற்றி கருத்து சொல்வதற் கும் அன்னை சோனியாவைத் தவிர மற்றவர்களுக்குத் தகுதி இல்லை!"
கொளத்தூர் மணியிடம்...
"இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?"
"1987-ல் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முதன்மையான அம்சமே 'வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்' என்பதுதான். ஆனால், அதற்கே காங்கிரஸ் அரசு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட வில்லை. அமைதிப் படையின் அட்டூழியங்கள், புலிகளுக் குச் செய்த துரோகங்கள், இறுதிப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழர்களைக் கொல்ல உதவியது, இதைத்தான் தியாகங்கள் என்கிறாரோ?"
|