கூலித் தொழிலாளி ஆகிறார் என்பதை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள். மழை பொய்த்துப் போனதால் பூச் செடிகளுக்குக் காசு கொடுத்துத் தண்ணீர் லோடு அடிக்கும் அய்யாச்சாமி, 'அண்ணே, உன்னை வெய்ட்டா கவனிக்குறேன்' என்று வார்த்தையிலேயே வடை சுடும் லோக்கல் அரசியல்வாதி, கமிஷன் மண்டி நடத்தும் நியாயமான கணேஷ் அண்ணா என அனைத்துப் பாத்திரங்களிலும் இயல்பு மிளிர்கிறது. படத்தொகுப்பு, இசை, ஒளிப்பதிவு என டீம் வொர்க் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது!
தப்பு இல்லாமல் தப்பிக்க... http://thisisjuststupid.com/
முட்டாள்தனத்தை (stupidness) விலாவாரியாகப் பேசும் தளம். ஆப்பிள் ஐ-பேடில் இருக்கும் தேவையற்ற சாஃப்ட்வேர்கள், பேசும்போது உளறிய ஹாலிவுட் பிரபலங்கள், தவறாக விளம்பரம் செய்யப்பட்ட பொருட்கள் என அத்தனை தப்புகளையும் இங்கே துவைத்துத் தொங்கப் போடுகிறார்கள். போலீஸிடமே திருடி மாட்டிக்கொண்ட திருடன், அதிக பளு ஏற்றிச் சென்று மாட்டிக்கொள்ளும் கார் என இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு செய்தியும் சிரிக்கவைக்கிறது. கொஞ்சம் யோசிக்கவும்வைக்கிறது!
சினிமா... சினிமா! new.ajayanbala.blogspot.com
சினிமா விமர்சகரும் படைப்பாளியுமான அஜயன் பாலாவின் வலைப்பூ. கவிதைகளும் கட்டுரை களும் இலக்கியத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்கின்றன. குறிப்பாக, உலக சினிமா குறித்த கட்டுரைகள், சினிமா பிரியர்களுக்கான வேட்டை விருந்து. 'தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவுப் படங்களும் - ஒரு பார்வை' என்னும் கட்டுரை, தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் இருந்து வில்லன் பாத்திரங்களின் சித்திரிப்பைக் குறுக்குவெட்டாக ஆராய்கிறது. சிறுகதைகள், அனுபவப் பகிர்வுகள், கவிதைகள் எனத் தேர்ந்த வாசகர்களுக்கான வலைப்பூ!
'வ'-குவார்ட்டர் கட்டிங்
இசை:ஜி.வி.பிரகாஷ்குமார்வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ.99
'உன்னைக் கண் தேடுதே' பாடல் ஜி.வி.பிரகாஷ்குமார் - 'கானா' உலகநாதனின் குரல்களில் போதை நிரம்பித் ததும்பி வழிகிறது. 'தேடியே தேடியே' பாடல் ஆண்ட்ரியாவின் குரலில் குழந்தைக் குதூகலமும் மயிலிறகு மென்மையும் கூட்டணி. 'சவூதிக்கே நீதான் ஷேக்' அரபு ஷேக்குகள் மதுக் கோப்பைகளுடன் ஆடும் காட்சியைக் கற்பனை செய்யத் தூண்டும் பாடல். 'பேலன்ஸ் இல்லாம கால் பண்ணுவேன்... காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்' என 'சார்பு சார்பு ஜி' பாடலில் ஜோக்குகளாக அடுக்கியிருக்கிறார் பாடலாசிரியர் குமாரராஜா. டிஸ்கொதெ பீட்களும் டாஸ்மாக் பீட்டருமாக அதிரடிக்கிறது 'குவார்ட்டரு... குவார்ட்டரு!' கிளப் மிக்ஸ். குடிமகன்களுக்கு 'லார்ஜ்' உற்சாகம் அளிக்கும் ஆல்பம்!
|