சினிமா
Published:Updated:

வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!

வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!


"வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!"
வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!
வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!
சார்லஸ்
என்.விவேக்
வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் என்ற உலகசாதனை படைத்த

முரளிதரனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், சென்னையில் பாராட்டு விழா!

"அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் என்ன விலை கொடுத்தாவது முரளிதரனை சென் னைக்கு வாங்கிவிடுவோம். அவர் சென்னைக்குச் சொந்தமானவர்!" என்று முரளியைப் புகழ்ந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி வி.பி. சந்திரசேகர். முரளிதரனிடம் பேசியதில் இருந்து...

"800 விக்கெட் மைல்கல்லுக்கு எட்டு விக்கெட்டுகள் வேண்டும் என்கிற நிலையில், 'இதுதான் எனது கடைசிப் போட்டி!' என்று தைரியமாக அறிவித்தீர்கள். ஒருவேளை எட்டு விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் போயிருந்தால்?"

"தன்னம்பிக்கைதான் எனது ஒரே தைரியம். 18 வருடங்களாக கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தால், கடைசிப் போட்டியில் எட்டு விக்கெட்கள் எடுத்துவிட முடியும் என்று உறுதியாக நம்பினேன். கடைசிப் போட்டி சம்பிரதாயமாக இல்லாமல் சவாலாக இருக்கட்டுமே என்றுதான் அப்படி அறி வித்தேன். சவாலில் ஜெயித்தது கேரியருக்கான உச்சகட்ட சந்தோஷம்தானே!"

வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!

"உங்கள் சாதனையை யார் முறியடிப்பார்கள்?"

"ஹர்பஜன்சிங்குக்கு மட்டுமே அதற்கான வாய்ப்புகள் அதிகம். 30 வயதான அவர், இப்போது வரை 355 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இன்னும் எட்டு ஆண்டுகள் அவர் இதே முறையில் பந்து வீசினால், அவரால் எனது சாதனையை முறியடிக்க முடியும்!"

"யாருடைய விக்கெட்டை எடுக்கும்போது பெருமையாக நினைப்பீர்கள்?"

"சச்சின் மற்றும் லாராவின் விக்கெட்டுகள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்!"

"யாருக்கு பந்து வீச நீங்கள் பயந்திருக்கிறீர்கள்?"

"யாருக்கும் எப்போதும் பயந்தது இல்லை. ஆனால், ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃப்ளவருக்கு எப்படிப் பந்து வீசினாலும் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என விளாசிவிடுவார். அவரை அடிக்கவிடாமல் பந்து வீசுவது எனக்குச் சிரமமாகவே இருந்தது!"

"ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம்?"

"சிறு துளிகூட ஈகோ இருக்கக் கூடாது. ஈகோவால் திறமையான விளையாட்டு வீரர்கள் காணா மல் போனதை அனுபவபூர்வமாகப் பார்த்து இருக்கிறேன்.

வாழ்க்கையில் ஜெயிக்கும்போது, கால் எப்போதும் தரையில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த வெற்றியை நீண்ட காலம் தக்கவைக்க முடியும்!"

வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!
வாழ்க்கை சம்பிரதாயமல்ல... சவால்!