"நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். டிஸ்கோ டான்ஸ், பரதநாட் டியம் ரெண்டு மட்டும்தான் இருக்கும்னு நினைச்சுதான் நான் டான்ஸ் கத்துக்க வந்தேன். ஆனா, ஜாஸ், ஹிப் ஹாப், பாலே, சல்சானு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. நீங்க ஹிப் ஹாப் நல்லா ஆடுறீங்க. அது எனக்குப் பிடிக்கும். எப்படி அவ்வளவு ஈஸியா ஆடுறீங்க?" என்று சின்ன வெட்கத்துடனேயே கேட்டார் பிருந்தா.
"இப்போ டிரெண்டுக்கு சினிமாவில் நிறைய ஹிப் ஹாப்தான் யூஸ் பண்றாங்க. ஆனா, எனக்குப் பிடிச்சது ஜாஸ். அது ஆடுறப்போ, மழை நேரத்தில் ரயில் ஜன்னலோரம் உக்காந்து போற மாதிரி இருக்கும். எந்த டான்ஸும் ஈஸியா ஆட முடியாதுங்க. நாங்களும் நிறைய பிராக்டீஸ் பண்ணிதான் ஆடுவோம். சினிமாவில் பார்க் கும்போது, ஈஸியா இருக்கும். இப்போ எந்த டான்ஸ்ல உங்களுக்கு என்ன சந்தேகம்னு சொல்லுங்க. பிராக்டிக்கலா க்ளியர் பண்ணிருவோம்!" என்று பிருந்தா நோக்கிக் கை நீட்டினார் பரத். கொஞ்சம் தயக்கத்துடனேயே, ஆனால் இறுகப் பற்றி எழுந்தார் பிருந்தா.
கால்களை அடியெடுத்து வைத்துப் பின்னிப் பின்னி நடக்கும் ஆட்டத்தில், தன் வேகத்துக்கு ஈடுகொடுத்த பிருந்தாவை ஆச்சர் யமாகப் பார்த்தார் பரத். சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டு இருந்த போது, பிருந்தாவை அலேக் என்று தலைக்கு மேல் தூக்கி விட்டார். அதை எதிர்பார்க்காத பிருந்தா, அதிர்ச்சியில் வீல் என்று அலறிச் சிரித்தார்.
|