சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'பா' படத்துக்குப் பிறகு, மீண்டும் பால்கி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அமிதாப். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம், இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை மெர்ரில் ஸ்ட்ரீப்பும் நடிக்க வருகிறார். இந்திய - பிரிட்டிஷ் காதல் கதையாம் இது. 'வாம்மா துரையம்மா!'

இன்பாக்ஸ்

'ஸ்லம்டாக் மில்லியனர்' கூட்டணியின் அடுத்த படம் ரெடி. படத்தின் பெயர் '127 பிஷீuக்ஷீs'. அமெரிக்க மலையேற்ற வீரரான அரோன் ரால்ஸ்டோனின் வாழ்க்கையைத் திகில் திடுக் திருப்பங்களோடு படமாக்கி இருக்கிறார் இயக்குநர் டேனி பாயல். நவம்பர் மாதம் ரிலீஸ். ரஹ்மான் மியூஸிக், திரும்ப ஆஸ்கர் மேஜிக் கொடுக்குமா?

அமெரிக்காவில் 24X7 பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பும் புதிய எஃப்.எம். ஸ்டேஷன் ஒன்று உதயமாகி இருக்கிறது. Radio DesiBeat என்ற இந்த ரேடியோவின் உருவாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பெரிய பங்கு உண்டு. அமெரிக்காவிலும் இனி அதிரடி பீட்!

வரலாறு ஆச்சர்யங்களால் நிரம்பியது. ஜீன் பால் முல்டர்ஸ் என்கிற பத்திரிகையாளர், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹிட்லரின் தம்பி, ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹிட்லரின் மாமா இருவரிடமும் மரபணுப் பரிசோதனை செய்தார். ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்க, ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது உலகம். லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர், ஒரு யூத வம்சத்தவர் என்றால் என்ன சொல்வது? என்ன கொடுமை ஹிட்லர்!

இன்பாக்ஸ்

'அடுத்த மல்லிகா ஷெராவத்' என்ற பில்டப்புடன் பாலிவுட்டில் களம் இறங்கி இருக்கிறார் ஷீனா நாயர். முகவெட்டு, உடல் கட்டு என ஒல்லி கில்லியாக இருப்பதால், ஷீனா வீட்டு வாசலில் காத்துஇருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். மல்லி ரெக்கார்டெல்லாம் போட்டுத் தாக்கு கண்ணு!

இன்பாக்ஸ்

இன்னொரு ரியாலிட்டி ஷோவில் ராக்கி சாவந்த். இந்த முறை ஆடிப் பாடாமல், பிரச்னைகளோடு வருபவர்களுக்குத் தீர்வு சொல்லப்போகிறாராம் 'ராக்கி கா இன்சாஃப்' நிகழ்ச்சியில். 'ராஜ் தாக்கரேவைவிட, நான் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கெட்டிக்காரி!' என்று இப்போதே பப்ளிசிட்டி திரி கிள்ளுகிறார் ராக்கி. ஹாக்கி மட்டையோட வந்துறப் போறாங்க ஆளுங்க!

டேவிட் பெக்காமுக்கு இது சோதனைக் காலம். காயத்தால், கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. தொடரில் இங்கிலாந்து அணியின் படுதோல்விக்குப் பிறகு, அணியில் இளமையேற்ற முடிவு செய்த பயிற்சியாளர் கேபலோ, 'வயதாகிவிட்டதால் பெக்காமை இனி தேர்வு செய்ய முடியாது!' என்று அறிவித்து இருக்கிறார். இதற்கு இங்கிலாந்து முழுக்க எதிர்ப்புக் கிளம்ப, இப்போது கேபலோ... கோபத்திலும், பெக்காம்... சோகத்திலும். 'பெக் அடிக்கப் போயிராதீங்க பெக்காம்!'

இன்பாக்ஸ்

பெண்கள் நடமாடும் நகைக் கடைகளாக வந்தாலும், நகை விளம்பரங்கள் ஆண்களை ஈர்த்தால்தான் பர்ஸ் திறக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டன விளம்பர நிறுவனங்கள். அதனால்தான்... விஜய், விக்ரம், மாதவன், சரத் என ஹீரோக்களை நகை விளம்பரத் தூதுவர்கள் ஆக்கினார்கள். இதில் லேட்டஸ்ட் என்ட்ரி சச்சின். இந்தியாவின் பிரபல நகைக் கடையின் விளம்பரத் தூதுவராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாம். தங்க வேட்டையும் ஆரம்பம்!

இந்தியா, இன்டர்போல் போலீஸ் மூலமாக தாவூத் இப்ராஹிமைத் தேடுவது பழைய கதை. இன்டர்போல் தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 656 பேர். பயங்கரவாத நடவடிக்கைகள், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்தது, சிறார்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக இந்தியாவைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 656 பேரை 'தேடப்படும் குற்றவாளி'களாக அறிவித்துஇருக்கிறது இன்டர்போல். அவ்வளவுதானா?!

இன்பாக்ஸ்

திருநங்கை 'லிவிங் ஸ்மைல்' வித்யா, அவரது வாழ்க்கை வரலாற்றை 'நான் வித்யா' என்று புத்தகமாக எழுதி இருந்தார். அந்தப் புத்தகம் தற்போது சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரி மூன்றாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்துக்கும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் பாடத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்மைல் வித்யா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்