சினிமா
Published:Updated:

நோட்டீஸ் போர்டு!

நோட்டீஸ் போர்டு!

நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!

"அடுக்கு மொழியில் ஏமாற்றாதீர்கள்!"

நோட்டீஸ் போர்டு!

இனத்துக்காக உயிர் கொடுத்த தியாகி முத்துக்குமார் பற்றிய ஆவணப் பட வெளியீட்டு விழா சென்னை ஃபிலிம் சேம்பரில் நடந்தது. பிரகதீஸ்வரன் என்ற இளைஞர் எடுத்த ஆவணப் படம், முத்துக்குமாரின் சொந்த ஊர் தொடங்கி, அவர் பணிபுரிந்த பத்திரிகை, டி.வி. தொடர், நடித்த குறும்படம் எனப் பலவற்றையும் ஆவணப்படுத்தி இருக்கிறது. ப்ளஸ் டூ வரை மட்டுமேபடித் திருந்தாலும், சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றுக்கொண்ட முத்துக்குமார், மிகச் சிறப்பாக ஆங்கிலம் பேசவும், எழுதவும் செய்வார் என்பது உள்பட முத்துக்குமாரின் பல பரிமாணங்களை ஆவணமாக்கி இருக்கிறார்கள். 'முத்துக்குமார் ஏற்றிவைத்த தீபத்தை எரியவிடாமல் அணைத்த ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களை இந்த ஆவணப் படத்தில் சேர்த்திருக்க வேண்டாம்' என்பது பார்வையாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தது. அமீரின் பேச்சில் காரம். "அடுக்குமொழியில் எதையாவது பேசி ஏமாற்றும் அரசியலை இவ்வளவு வருடங்களா£கப் பார்த்து விட்டோம். இந்த உணர்ச்சி அரசியலைக் கை விட்டு, அறிவுபூர்வமாக எதையாவது செய்ய முடியுமா எனப் பார்ப்போம்" என்றார் கோபமாக!

நினைவோ ஒரு பறவை!

நோட்டீஸ் போர்டு!

லயோலா கல்லூரியில் அன்று ஒருநாள் வி.ஐ.பி-க்களின் சங்கமம். கடந்த 28-ம் தேதி லயோலாவின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடக்க, கல்லூரி வளாகம் எங்கும் கலர்ஃபுல், பவர்ஃபுல் மனிதர்கள். ப.சிதம்பரம், சூர்யா, மாறன் பிரதர்ஸ், ராதாரவி, பிரபு, 'ஹிண்டு' ராம், பொள்ளாச்சி மகாலிங்கம், எக்கச்சக்க போலீஸ் ஆபீஸர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-கள், தொழில் அதிபர்கள் என்ற அந்தக் கூட்டத்தில் அதிகம் இருந்தது நீதிபதிகள்தான். நீதியரசர் சந்துரு உள்பட பல நீதிபதிகளைப் பார்க்க முடிந்தது!

மோகன்லால் மீது பொறாமைப்பட்ட ரஜினி, சிரஞ்சீவி!

நோட்டீஸ் போர்டு!

ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், அம்பரீஷ், அர்ஜுன் உள்ளிட்ட 16 ஹீரோக்கள். ராதிகாவில் தொடங்கி குஷ்பு வரை 12 ஹீரோயின்கள் என தென்னிந்திய திரையுலகின் '80-களின் கிளப்' இரண்டாவது ஆண்டாக கூடிக் குதூகலித்திருக்கிறது.

நினைவுகளைத் தூண்டினால் ஆனந்தமாகப் பேசுகிறார் சுஹாசினி. "சீனியர், ஜூனியர், பெரியவர், சின்னவர்னு பந்தாவோ ஃபார்மாலிட்டியோ இந்த கிளப்புக்குக் கிடையாது. போன வருஷம்விளையாட்டா ஆரம்பிச்ச பழக்கத்துல இந்த வருஷம் இன்னும் கலர் சேர்ந்திருக்கு. அர்ஜுன், குஷ்பு, ஷோபனா, ரம்யா கிருஷ்ணன்லாம் கிளப்பின் புது உறுப்பினர்கள். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கூடியவர்கள் மறு நாள் காலையில்தான் கலைந்தார்கள். மகள்திருமண வேலைகள் இருந்தாலும், 'நானும் கண்டிப்பா வரு வேன்'னு சொல்லிட்டு வந்தார் ரஜினி. அதேபோலத் தான் சிரஞ்சீவியும் மோகன்லாலும். பாங்காக் படப்பிடிப்பை கேன்சல் செய்துட்டு வந்தார் மோகன் லால். அன்னிக்கு வந்தவங்கள்ல அவர் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, அங்கே இருந்த 12 ஹீரோயின் களுடனும் ஜோடியாக நடித்திருக்கும் ஒரே ஹீரோ அவர்தான். போட்டோ எடுக்குறதுக்காக அவரைச் சுத்தி 12 ஹீரோயின்களும் அசெம்பிள் ஆனோம். பாதி ஷூட்லயே ரஜினியும் சிரஞ்சீவியும் பொய் பொறாமை காட்டிக் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. 'நாங்களும் போஸ் கொடுப்போம்'னு கூட்டத்தில் புகுந்து தள்ளுமுள்ளு தகராறு பண்ணி ஒரே ஜாலி கேலிதான்.கமல் கொடைக்கானல் ஷூட்டிங்கில், மம்மூட்டி ரம்ஜான் நோன்பில், ஸ்ரீதேவி ஹைதராபாத்தில் இருந்ததால் வர முடியலை. அடுத்த தடவை கண்டிப்பா மூணு பேரும் ஆஜராவோம்னு சொல்லி இருக்காங்க.

அன்னிக்கு ராத்திரி முழுக்க டான்ஸ், நாங்களே தயாரித்த வீடியோ காட்சிகள்னு செம கலாட்டா. டான்ஸ்னா சும்மா வந்து நின்னுட்டுப் போறது இல்லை. ஷோபனா ஏற்கெனவே கம்போஸ் செய்த ஸ்டெப்களுக்கு டான்ஸ் ஆடணும். கிருஷ்ணன் வேஷத்தில் அர்ஜுன். அவரைச் சுற்றும் கோபியர்களாக நாங்கள். செம குறும்பா டாப்லெஸ்ஸா வந்து நின்னு அசத்தினார் அர்ஜுன்.

போன வருஷம் வந்துட்டு இந்த வருஷம் வராம மிஸ் ஆன ஒரே நபர் விஷ்ணுவர்தன். ப்ச்ச்... இறந்து போன அவருக்கு அஞ்சலியாக அவரைப்பத்தின ஒரு குறும்படத்தை ஸ்க்ரீன் பண்ணோம். 'உங்க 80-களின் டீம் மாதிரி எங்க 90-களின் டீம் இவ்வளவு ஒற்றுமையா இல்லையே'ன்னு ஆதங்கப்பட்டாங்க குஷ்புவும் ரம்யா கிருஷ்ணனும்!" என்று முடிக்கும்போது சுஹாசினி கண்களில் சந்தோஷ மின்னல்!

நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!