சினிமா
Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்


வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

அலைபேசித் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்தபடி இருந்தாலும், குறிப்பிட்ட

இடங்களில் சுவரில் இணைக்கப்பட்ட தொலைபேசியின் வசதியை மறுக்க முடியாது. இதைக் கருத்தில்கொண்டு கூகுள் தனது 'கூகுள் வாய்ஸ்' (http://voice.google.com) தொழில்நுட்பத்தின் பலத்தில், பொது தொலைபேசி பூத்களை நிறுவத் தொடங்கி இருப்பது இந்த வாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இணைய இண்டஸ்ட்ரி நிகழ்வு. இந்தத் தொலைபேசி சேவை இலவசம் என்பது அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டி யது. ஜி-மெயில் போன்ற பல சேவைகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வாய்ஸ் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும்போது, அவர்கள் கூகுளையும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும் என்பதால், அவர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் தனது வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது கூகுளின் திட்டம்.

சற்று ஆழமாக இதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை இணையத்தில் இணைக்க தரை வழித் தொலைபேசி (landline) இணைப்பு தேவைப்பட்டது. இப்போது தொலைபேசுவதற்கு இணையம் தேவைப்படுகிறது.

வருங்காலத் தொழில்நுட்பம்

இந்த வார ஃபேஸ்புக் உலகின் முக்கிய நிகழ்வு... Places (http://new.facebook.com/places/). ஃபேஸ்புக் பயனீட்டாளராக இருந்தால், இதுவரை நீங்கள் யார், எப்போது, என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டுமே உங்கள் நட்பு வட்டத் தில் தெரிவித்தபடி வந்திருக்கிறீர்கள். இப்போது 'எங்கே' என்பதையும் இதில் சேர்த்துக்கொள்ள முடியும். இதன் சாதக, பாதகங்களைப் பார்க்கும் முன்னால், சமூக வலைதளங்களில் இருக்கும் Tagging என்ற பழக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

மனிதன் ஒரு சமூக மிருகமே (Man is a social animal) என்பது பிரபல சொலவடை. தனித் தீவுகளாக மனிதர்களால் வாழ முடியாது. அதே நேரம், மற்றவர்களுடன் குழுவாக வாழும்போதும், தனக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டாலும், குழுக்களுடன் தகவலைப் பரிமாறிக்கொள்வது அவசியமான பழக்கம். தெரு நாய்கள் தங்களது எல்லைகளைத் தங்களது 'நம்பர் ஒன்'னைப் பயன் படுத்திக் குறியிட்டு வைத்துக்கொண்டாலும், இரவில் ஒரு நாய் ஊளையிட்டால், அருகில் இருக்கும் பக்கத்துத் தெரு நாய் உறவினர்களும் சேர்ந்து ஊளையிடுவ தைப் பார்த்திருப்பீர்கள். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக் கிறது.

500 மில்லியன்களுக்கும் அதிகமான பயனீட்டாளர் களைக்கொண்ட ஃபேஸ்புக் தளத்தில் உங்களது எண்ணச் சிதறல்களின் விவரிப்புகளைச் சுருக்க மாகவோ, மிக விரிவாகவோ பகிர்ந்துகொள்ள முடியும். அதுபோலவே, புகைப்படங்கள், வீடியோக் கள் போன்றவற்றையும் பகிரலாம். ஆனால், நீங்கள் உங்களுக்கான பக்கத்தில் இவற்றைக் கொடுத்துக்கொண்டே வருவது, உங்களது டைரியை வீட்டுக்கு வெளியே தினமும் வைத்துவிட்டுச் செல்வதுபோல. யாராவது வந்து அதைத் திறந்து படிக்கலாம்; படித்து தனது கருத்துக்களை எழுதிவைக்கலாம்; படிக்காமலேயும் போகலாம்.

உங்களது தகவல்கள் நிச்சயம் மற்றவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அவர்களது பின்னூட்டங்கள் உங்களுக்குத் தேவை என்றால் என்ன செய்வீர்கள்? குறிப்பிட்ட நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பிவைப்பீர்கள். அது அவர்களுக்குப் பிடித்த தாக இருந்தால், அதற்குப் பின்னூட்டம் கொடுப்ப துடன், அவர்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பவும் செய்யலாம். சமூக வலை தளங்களில் இதைச் செய்வதற்குப் பெயர் Tagging.

வருங்காலத் தொழில்நுட்பம்

சரி, இதுவரை தகவல்களைப் பரிமாற்றம் மட்டுமே செய்ய முடிந்த சமூக வலைதளங்கள் இப்போது நீங்கள் புவிப் பந்தில் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டு கின்றன. இதற்கு ஒரு முக்கியக் காரணம், உள்ளூர்/ லோக்கல் வியாபாரங்களின் விளம்பர வருமானம். இப்போதைய இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நீங்கள் இணையத்தில் இணைக் கப்பட்டு இருக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கி றீர்கள் என்பதைத் தோராயமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, விகடன்.காம் வாசகர் முகிலன் தனது சென்னை அலுவலகத்தில் இருந்து ஃபேஸ்புக் தளம் சென்றால், ஃபேஸ்புக்குக்கு அவர் சென்னையில் இருந்து ப்ரவுசுகிறார் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், தி.நகர் பத்மநாபன் சாலையில், மாயாண்டி மிலிட்டரி விலாஸில் நான்கு நண்பர்களுடன் மதிய உணவில் இருக்கிறார் என்பது முகிலன் சொன்னால் மட்டுமே சாத்தியம். அவரை எப்படியாவது இந்த விவரத்தைக் கொடுக்க வைத்துவிட்டால், அதே தெருவில் இருக்கும் மற்ற பிசினஸ்களின் விளம்பரங்களை அவருக்குக் காட்டி னால், அது மிகவும் வீரியமிக்கதாக இருக்கும் என்பது சமூக வலைதளங்களின், அதுவும் குறிப்பாக, ஃபேஸ்புக்கின் எண்ணம் + திட்டம்!

ஆனால், இதில்தான் சிக்கல் தொடங்குகிறது. தான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் முகிலனுக்குப் பிரச்னை இல்லாது இருக்கலாம். ஆனால், அவர் தன்னுடன் இருப்பதாக Tagging செய்யும் அவரது நண்பருக்கு அதில் விருப்பம் இல்லையென்றால்?

வருங்காலத் தொழில்நுட்பம்

உதாரணமாக, அவருடன் உணவருந்திய கபிலன் பணி முடிந்து மாலையில் வீட்டுக்குச் சென்று, மனைவி காலையில் கட்டிக் கொடுத்த தயிர்சாதத்தை தான் ரொம்பவும் விரும்பிச் சாப்பிட்டதாகப் புகழ்ந்துவைக்க, ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து விவரம் தெரிந்துவைத்திருக்கும் கபிலனின் மனைவி... இது எங்கே சென்று முடியும் என்று விளக்கத் தேவை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், ஃபேஸ்புக் போன்ற தளங்களின் உள்ளூர் (Local) தொழில்நுட்பங்களின் பல கோணங்களைப் பார்த்துவிட்ட பின்னர் பயன்படுத்துவது சிறந்தது. நான் இப்போதைக்கு Privacy Settings-ல், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை எனக் குறித்து வைத்திருக்கிறேன். இந்தத் தொடரின் வாசர்களுக்கு எனது ஆலோசனையும் அதுதான்!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
LOG OFF