" 'விரைவில் மதுவிலக்கை நிறைவேற்றுவேன்' என்று கருணாநிதி அறிவித்தார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையின்போது கருணாநிதி இதனை அறிவிப்பார் என்றும் சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் நடப்பதைப்போலத் தெரியவில்லையே?"
"உஷ், 'அடக்கமாக' அரசு கேபிள் டி.வி. செயல்படுவதைப்போல, 'அடக்கமாக' மதுவிலக்கும் அமலுக்கு வந்திருக்கலாம். டோன்ட் டிஸ்டர்ப்!"
- எஸ்.மணிமேகலை, ராமநாதபுரம்.
"இந்தியாவில் விலைவாசி உயர்வு யாரைப் பாதிப்பது இல்லை?"
" 'தீராத பக்கங்கள்' என்ற வலைப்பூவில் மாதவராஜ் என்னும் பதிவர், நாடாளுமன்ற கேன்டீனில் விற்கப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை வெளியிட்டு இருந்தார். அந்தப் பட்டியல் இதுதான். டீ- ரூ.1. சூப் - ரூ 5.50. பருப்பு - ரூ.1.50. சப்பாத்தி - ரூ.1.00. சாதம் - ரூ.2.00. தோசை - ரூ.4.00. வெஜ் புலாவ் - ரூ.8.00. தக்காளி சாதம்-ரூ.7.00. மீன் குழம்பு-ரூ.13.00. கோழி-ரூ.24.50. இப்போது புரிகிறதா, யாரை விலைவாசி உயர்வு பாதிப்பது இல்லை என்று. பாவம், இந்த விலை வாசியையும்கூடத் தாங்க முடியவில்லை என்றுதான் அவர்களுக்கு இப்போது சம்பளம் உயர்த்தப் பட்டது!"
- எஸ்.நாகவள்ளி, மதுரை.
"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விஜயகாந்த்துக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரே?"
"இளங்கோவனின் ராசியே அப்படித்தான். ஆளும் கட்சிக் கூட்டணியில் அவர் கட்சி இருக்கும். அவர் எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருப்பார். முன்னே அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோது, அவர் தி.மு.க \ வுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது எதிர்க் கட்சிகளுடன் நெருக்கமாக இருக்கிறார்!"
- எஸ்.கே.ரித்திகா, சென்னை-91.
|