சினிமா
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

திருமாவளவனிடம்...

"காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று ராமதாஸ் கூறி இருக்கிறாரே?"

"சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜயகாந்த்கூட, தன் தலைமையில் தனி அணி என்கிறார். பா.ம.க. தலைமையில் தனி அணி அமைக்கும் நம் பிக்கை ராமதாஸுக்கு இல்லையா? கடந்த தேர்தலில் காங்கிரஸ் அணியால்தான் ஈழத் தமிழினத் துக்கு அழிவு என பா.ம.க இடம்பெற்றிருந்த அ.தி.மு.க. அணி கூறியது. காங்கிரசின் இனத் துரோகம் இப்போது துடைக்கப்பட்டுவிட்டதா? பா.ம.க-வின் எந்த முடிவையும் வலிந்து ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர் கள் இதில் மௌனம் கலைக்க வேண்டும்!"

ஜி.கே.மணியிடம்...

5 கேள்விகள்

" 'மதுவிலக்கு குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்றுதான் சொன்னேனே தவிர, எத்தனை நாட்களில் என்று சொன்னேனா?' என்கிறாரே கருணாநிதி?"

"ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய நாள் கிழமை பார்க்க வேண்டியது இல்லை. மதுவிலக்கு அவசியம் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்பதை வற்புறுத்தி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்!"

கம்பம் செல்வேந்திரனிடம்...

"'ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் எந்தத் திட்டத்தையும் கருணாநிதி முன்வைக்கவில்லை' என்கிறாரே விஜயகாந்த்?"

"ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவந்த வேலை நியமன தடைச் சட்டத்தை நீக்கி பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது தி.மு.க. அரசு. திரைப்படங்களில் யாரோ எழுதிக் கொடுக்கும் புள்ளி விவரத்தை மனப்பாடம் செய்து பேசி பழக்கப்பட்ட விஜயகாந்த், எத்தனை இளைஞர்கள் இந்த அரசின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு பேசினால் நல்லது. பாவம் தேர்தல் காய்ச்சலில் புலம்புகிறார். அவரை விட்டுவிடுங்கள்!"

ரோஜாவிடம்...

"ஜெகன்மோகன் ரெட்டி தனிக் கட்சி ஆரம்பித்தால், ஆதாயம் பெறலாம் என்ற நோக்கில்தான், அவருக்கு தானாகச் சென்று ஆதரவு தருவதாகக் கூறுகிறார்களே?"

"ஆதாயம் பெற நினைத்து இருந்தால், சினிமாவிலேயே இருந்திருப்பேனே? ராஜசேகர ரெட்டி இறந்த சமயத்தில், அவரது இறப்பை சகிக்காத தொண்டர்கள் பலர் உயிர் இழந்தனர். அந்தக் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது ஜெகன் மோகன் ரெட்டியின் கடமை. இந்த விஷயத்தில் ஜெகனுக்கு ஆதரவு தருவதில், எந்த உள்நோக்கமும் இல்லை!"

5 கேள்விகள்

அசினிடம்...

"ஷாகித் கபூருடன், விளம்பரப் பட ஷூட்டிங் ஒன்றில் நீங்கள் நெருங்கிப் பழகியதால், பிரியங்கா சோப்ராவுக்கும் உங்களுக்கும் கடுமையான வாக்கு வாதமாமே?"

"ஷாகித் கபூருடன் விளம்பரப் படத்தில் நான் நடித்தது, படப் பிடிப்புத் தளத்துக்கு பிரியங்கா வந்தது அனைத்தும் உண்மை. ஆனால், நீங்கள் சொல்வதுபோல் வாக்குவாதம் எதுவும் நடக்க வில்லை. பிரியங்கா, எனக்கு நல்ல அறிமுகம். தனது நண்பருடன் சேர்ந்து நடிப்பதற்கு எல்லாம் கோபப்படக்கூடியவர் அல்ல பிரியங்கா!"

5 கேள்விகள்
5 கேள்விகள்