சினிமா
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

இந்திய விடுதலை வெற்றி - மௌலானா அபுல்கலாம் ஆஸாத்
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி-10.
பக்கம்: 332 விலை: ரூ.230

மௌலானா அபுல்கலாம் ஆஸாத் எழுதிய 'India Wins Freedom' என்ற பிரசித்திபெற்ற புத்தகத்தின் தமிழாக்கம். விடுதலைப் போராட்ட வரலாற்றுடன், காங்கிரஸ் கட்சியில் நிலவிய பல்வேறு போக்குகள் குறித்தும், இரண்டாம் உலகப் போர் குறித்தும், தேசத் தலைவர்களுக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகளின் பின்னணி குறித்தும், நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்தியா கடந்து வந்த பாதை குறித்து அறிந்துகொள்ள ஓர் ஆவணம்!

என்ன தகவல் தேவை இந்தத் திருநாட்டில்?
new.rightact2005.blogspot.com

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அடிப்படைத் தகவல்கள் அடங்கிய வலைப்பூ. தமிழகம், புதுவையில் அமைந்துள்ள தகவல் ஆணையத்தின் இணையங்களுக்கான சுட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன. போபால் குற்றவாளி ஆண்டர்சன் தப்பிய விவகாரத்தில், சி.பி.ஐ. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்க மறுப்பு தெரிவிப்பது, குஜராத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி அமித் ஜித்வா அரசியல்வாதிகளால் கொலை செய்யப்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வெற்றிகண்ட முக்கியமான வழக்கு விவரங்கள் எனப் பல கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை!

விகடன் வரவேற்பறை

உங்களுக்கு மேலே என்ன நட்சத்திரம்?
new.neave.com/planetarium/

நட்சத்திரங்களைக் கண்டு ரசித்திருப்பீர்கள். அதை வைத்து திசை, காலம், பருவநிலை கணிக்கத் தெரியுமா? நட்சத்திரக் கூட்டங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? அதைக் கற்றுத் தருகிறது இத்தளம். நீங்கள் இருக்கும் இடம், காலம், அட்சரேகை, தீர்க்க ரேகை (இவற்றை இணையத்தில் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!) கொடுத்தால் போதும். உங்கள் தலைக்கு மேல் என்னென்ன நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கும், அவற்றின் பெயர்கள், அவற்றை எப்படி அடையாளம் காண்பது என்றெல்லாம் கற்றுத் தருகிறது. ஒவ்வொரு நாளும் தலைக்கு மேல் நட்சத்திரக் கூட்டம் எப்படி இடம்பெயரும் என்பதையும் காட்டுகிறார்கள்!

அட்சயம் இயக்கம் - பி.என்.கணபதி

பல காலம் வீட்டில் ஒரு பாத்திரமாக வாழ்ந்து வரும் மரம்தான் 'அட்சயம்'. தான் வாங்கிய புதிய காரை நிறுத்துவதற்காக வீட்டு வாசலில் இருக்கும் மரத்தை வெட்ட நினைக்கிறார் குடும்பத் தலைவர். தன் நண்பனான மரத்தை வெட்டக் கூடாது என்று பிடிவாதமாகத் தடுக்கிறது அவருடைய குழந்தை. இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகிறார் குடும்பத் தலைவி. இந்த மூன்றே கேரக்டர்களைவைத்து உணர்வுபூர்வமாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். நடக்கும் பெரும்பாலான சம்பவங்களை இலைகளின் ஊடாகக் காட்டும் ராஜ் பாபுவின் ஒளிப்பதிவு கதைக்குக் கனம் ஏற்றுகிறது. க்ளைமாக்ஸுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்!

துரோகி - இசை: செல்வகணேஷ்வெளியீடு: சோனி மியூஸிக்விலை: ரூ.99

விகடன் வரவேற்பறை

தியேட்டர் குதூகலத்தை மட்டும் மனதில் வைத்திருப்பார்கள் போல. ஆடும் நடிகையின் இடுப்பு ஒடிப்புகளுக்கு 'ஹோம் வொர்க்' வைக்கும் சமாசாரங்கள் நிறைந்த 'சமசமசம யமயமயம' பாடலுக்கு சிம்புவும் குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். கொஞ்சல் துள்ளல் பாடலான 'அடி குட்டிமா'வில் சுசித்ரா கார்த்திக், மாயா ஸ்ரீசரண் குரல்களில் ஐஸ்க்ரீம் குளிர். உணர்ச்சி உருவேற்றும் 'சம்பவாமி யுகே யுகே' பாடலைக் கரை சேர்க்க, ஷங்கர் மகாதேவன் குரல் மட்டும் 'ஒன் மேன் ஆர்மி'யாகப் போராடுகிறது. குட்டி சுட்டிகளுக்கென 'வாலாட்டும் ரவுடிக் கூட்டம்' பாடல். அதில் ஒலிக்கும் குழந்தைகளின் குரலுக்குப் போட்டியாக சௌமியா ராவ், மாயா ஸ்ரீசரண் குரல்களில் குதூகலம். 'துரோகி' தீம் மியூஸிக் ஈர்க்கிறது!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை