ஸ்பெஷல் -1
Published:Updated:

இந்தியாவுக்கு மரியாதை!

இந்தியாவுக்கு மரியாதை!

இந்தியாவுக்கு மரியாதை!
இந்தியாவுக்கு மரியாதை!
இந்தியாவுக்கு மரியாதை!
சார்லஸ்
இந்தியாவுக்கு மரியாதை!

ஊழல் சர்ச்சைகள், சர்வதேச விளையாட்டு வீரர்களின் கடைசி நேர விலகல்கள்,

சொதப்பலான ஏற்பாடுகள் என்ற எல்லா சர்ச்சைகளையும் பின்னுக்குத் தள்ளி, இந்திய வீரர்களின் தங்க வேட்டையால் தலை நிமிர்ந்து இருக்கிறது டெல்லி காமென்வெல்த் போட்டிகள் 2010.

தொடர் சர்ச்சைகளால், இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அளவுக்குத் திறமை கிடையாது எனப் பல நாடுகள் கலாய்த்தன. ஆனால், இந்தியத் தன்மையுடனான பிரமாண்ட கலர் ஃபுல் துவக்க விழா, அந்தச் சர்ச்சைகளைத் துடைத்து எறிவதாக அமைந்தது. அன்று முதல் இந்திய இமேஜுக்கு ஏறுமுகம்தான்!

காமன்வெல்த் போட்டிகளில் கலக்கி எடுத்தார் ஈழத் தமிழர் ஒருவர். ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக் அணிக்காகக் களம் இறங்கிய பிரஷாந்த் செல்லத்துரை, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவருடைய குடும்பம் 1983-ம் ஆண்டு இலங்கை இனக் கலவரத்தின்போது ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தது!

இந்தியாவுக்கு மரியாதை!

துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கங்களைத் தடதடவென குவித்த ககன் நரங், சென்னையில் பிறந்தவர். 'இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று முதலில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் ககன். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதுதான், ககனின் கனலுக்குக் காரணம். அடித்துப் பிடித்துச் சமாளித்து, அவரைக் களம் இறக்கினார்கள். மீண்டும் தன் திறமையை நிரூபித்துவிட்டார். இனி, அவருக்கு உரிய மரியாதை செய்வது அரசின் கைகளில்!

இந்தியாவுக்கு மரியாதை!

இப்போதுதான் முதல் முறையாக டென்னிஸ் போட்டி காமன்வெல்த் விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டது. சோம் தேவ் தேவ்வர்மன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்ல, இரட் டையரில் பூபதி - பயஸ் ஜோடி வெண்கலம், பெண்கள் பிரிவில் சானியா மிர்சா - ருஷ்மி சக்ர வர்த்தி இணை வெண்கலம், ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா வெள்ளி என இந்தியர்கள் ஒட்டுமொத்த கௌரவங்களை வாரிக் குவித்தனர்!

இந்தியாவுக்கு மரியாதை!

துப்பாக்கி சுடுதலில் இரட்டைத் தங்கம் வென்ற அனிஸா சயீத், மும்பை - புனே ரயில்பாதை யில் டிக்கெட் கலெக்டராகப்பணி புரிந்தவர். திருமணமானதால் ஃபரிதாபாத்துக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டுப்பார்த்தார். அசைந்து கொடுக்கவில்லை, இந்தியன் ரயில்வே. சலித்துப் போய் வேலையையே விட்டுவிட்டார் அனிஸா. 'மீண்டும் எங்களோடு சேர்ந்து வேலை பாருங்கள்!' என்று அனிஸாவை அழைக்கிறது, இந்திய ரயில்வே!

வில் வித்தையில் தங்கம் வென்ற 16 வயதான தீபிகா குமாரி, கிரிக்கெட் கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியைத் சேர்ந்தவர். தீபிகா வின் அப்பா ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர். சின்ன வயதில் மரத்தில் தொங்கும் மாங்காய் களைச் சொல்லி அடிப்பதில் தீபிகா கில்லி. ஓர் ஆர்வத்தில்வில் வித்தையில் சேர்ந்திருக்கிறார். 'என் மகள் ஒருநாள் சாதிப்பாள் என்று தெரியும். அதனால்தான் எங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, மகளை உற்சாகப்படுத்தி னோம்!' என்று நெகிழ்கிறார் அந்த ஏழைத் தந்தை!

வில் வித்தைப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரும் ஒருவர். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டி களில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்கிற பெருமை யைப் பெற்றார் ஸ்ரீதர். இவர் பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்!

பாகிஸ்தானின் வீரர் அசார் உசேனை 11-0 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார், மல்யுத்த வீரர் ராஜேந் தர் குமார். இவர் முதல் சுற்றில் வெறும் 46 விநாடிகளில் இலங்கை வீரரைத் தோற்கடித்தவர்!

பெண்கள் மல்யுத்தப் பிரி வில் தங்கம் வென்றிருக்கும் கீத்தா சிங் போக்ரா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கீத்தா வுக்கு மொத்தம் ஐந்து சகோதரி கள். அனைவருமே மல்யுத்தவீரர் கள்தான். 'எங்களுக்குப் பயிற்சி கொடுக்க எங்கள் ஊரில் பெண்கள் யாருமே முன்வரவில்லை. என் அப்பாவும் மாமாவும்தான் எங்களுடன் பயிற்சிக்காக மோதுவார்கள்!" என்றார் கீத்தா!

இந்தியாவுக்கு மரியாதை!
இந்தியாவுக்கு மரியாதை!