ஸ்பெஷல் -1
Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

சென்ற இடம்
அறிவுமதி, கவிஞர்.

எட்எட்டு!

" 'சிறைச்சாலை' திரைப்படத்துக்கு உரையாடல், பாடல் எழுதும்போதே அந்தமான் சிறைச்சாலையைப் பார்க்க ஆசை. சமீபத்தில்தான் சென்றிருந்தேன். அந்தமான் சிறைச்சாலையில் நிற்கும்போது, சுதந்திரத்துக்குப் பாடுபட்ட மனிதர்களின் சுவாசங்கள் இன்னும் அந்தக் காற்றில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவே தோன்றியது. சிறைக்குள் ஒரு மரம் இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இருக்கும் அந்த மரம்தான் எல்லாவற்றுக்குமான சாட்சி. அந்த மரம் தன் குரலில் பேசுவதுபோல ஒளி-ஒலிக் காட்சி ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். அதுபோக, அந்தமான் பழங்குடி மக்களின் தோற்றமும் வாழ்க்கை முறையும் சங்க இலக்கிய ஆண்களையும் பெண்களையும் நேரில் கண்டதுபோலவே இருந்தது!"

பார்த்த படம்
விமல், நடிகர்.

எட்எட்டு!

"இரானியப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் மஜித் மஜிதியின் படங்கள், நடிப்பிலும் இயக்கத்திலும் பல பாடங்கள் சொல்லிக் கொடுக்கும். சமீபத்தில் பார்த்ததும் அவரோட Children of Heaven படம்தான். ஒரு குட்டிப் பொண்ணுக்கும் அவளுடைய சகோதரனுக்கும் இடையில், ஒரு ஷூவை கேரக்டர் ஆக்கி, அதைச் சுத்தியே படத்தை நகர்த்தி இருப்பாங்க. க்ளைமாக்ஸில் ஷூ பரிசு பெற அந்தப் பையன் ஓடி வரும்போது, மனசை அதிரடிக்கிற மாதிரி இதயத் துடிப்பு போல ஒரு பின்னணி இசை ஒலிக்கும். அது நம் உணர்வை வேறு எங்கோ அழைத்துச் செல்லும்!"

படித்த புத்தகம்
கண்ணா, ஓவியர்.

எட்எட்டு!

"ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதி வெளிவந்திருக்கும் The Grand Design புத்தகம். 400-க் கும் அதிகமான கோள்களைப்பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். 'பிரபஞ்சம் உருவாக தன்னியல்பான கூறுகள் இங்கு இருக்கின்றன. அதற்கு கடவுள் எல்லாம் தேவை இல்லை' என்ற அவரது கருத்து, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. எதிர்காலத்துக்குப் பயணித்து நான் செய்யும் ஏதோ ஒரு செயல் எனக்குப் பிடிக்கவில்லை எனில், என்னை நானே கொலை செய்யவும் முடியும் என்று, அறிவியல் விதிகளின்படி எளிமையாக நிறுவுகிறார். சினிமா 'டைம் மெஷின்' சமாசாரம்தான். இப்போது எனக்கு அருகிலும் இந்தப் புத்தகத்தைப் பிடித்திருக்கும் உங்கள் கைகளுக்கு அருகிலும்கூட, சில வேற்றுக் கிரக உயிர்கள் கடந்து சென்றுகொண்டு இருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு என அதிரவைக்கிறார் ஸ்டீஃபன்!"

சந்தித்த நபர்
சிவகாமி, நிறுவனத் தலைவர், சமூக சமத்துவப் படை.

எட்எட்டு!

"திண்டுக்கல்லில் ஓர் ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றிருந்தேன். செல்வமணி, பிரகாஷ் என்ற இரண்டு கல்லூரி மாணவர்களைச் சந்தித்தேன். ஆர்ப்பாட்டத்துக்கு தலையிலும் கையிலும் போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்திருந்தனர். அவர்களுக்குச் சொந்த ஊர் வத்தலகுண்டு. இறந்த தலித் ஒருவரின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில், வெடித்த வெடிகளில் ஒன்று ஆதிக்க சாதியினரின் வீட்டுக்குள் போய்விட்டது. அதனால், அந்த இரண்டு இளைஞர்களையும் கொடூரமாக வெட்டியுள்ளனர். ஒருவருக்கு ஒரு கை இல்லை. இன்னோர் இளைஞனுக்கு தலையில் வெட்டுக் காயம். இப்படி சாதிய வன்செயல்கள் நடக்கும் நாட்டில்தான் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் தேவை இல்லை என்று சிலர் பேசுகின்றனர்!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி
ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்.

எட்எட்டு!

"ஒரு என்.ஜி.ஓ. டெல்லியில் நடத்திய 'பெண் விவசாயிகளும் கூட்டு விவசாயமும்' என்னும் தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். பொதுவாகவே, விவசாயி என்றாலே ஆண் என்றே அறியப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பது அரிதிலும் அரிது. ஆனால், நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற விவசாய வேலைகளைச் செய்பவர்களாகப் பெண்களே இருக்கின்றனர். இந்த நிலையில், பெண் களுக்கு நிலங்களை வழங்குவது குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. அவற்றுள் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொருளியல் வளர்ச்சிக் கழக இயக்குநர் பீனா அகர்வால் மற்றும் நம்மாழ்வாரின் உரைகள் முக்கியமானவை. பெண்கள் கையில் நிலங்கள் இருந்தால், அதிக உற்பத்திக்காக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களைப் பாழ்படுத்த அனுமதித்து இருக்க மாட்டார்கள். இந்தக் கருத்தரங்கு, நிலம் - பெண் குறித்தஎன்னுடைய பெண்ணியப் புரிதலைப் பலப்படுத்தியது!"

பாதித்த சம்பவம்
வா.மு.கோமு, எழுத்தாளர்.

எட்எட்டு!

"சென்னிமலையில ஒரு துணிக்கடைக்குப் போயிருக்காரு எங்க ஊரு பார்ட்டி ஒருத்தர். கடை வாசல்ல சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே போயிருக்காரு. வாசல்ல நின்ன சைக்கிள்ல கீரை இருந்திருக்கு. இவர் கடைக்குள்ள இருந்தாலும், பார்வை முழுக்க வெளியேஇருந்த கீரைக் கட்டு மேலயே இருந்திருக்கு. திடீர்னு ஒரு மாடு வந்து கீரையைத் திங்கவும்,இவர் பதற்றப்பட்டு ஓடியாந்து இருக்காரு. ஓடியாந்த வேகத்துல, துணிக் கடை கண்ணாடிக் கதவுல மோதி, மூஞ்சி பூரா ரத்தம்... கண்ணாடி வேற உடைஞ்சுபோச்சாம். கடைக்காரரு காச்மூச்சுனு கத்த, 'கீரையும்போச்சு, ரத்தமும்போச்சு, எல்லாத்துக்கும் உன் கடை கண்ணாடிதான் காரணம்'னு இவர் கத்த... ஒரே பிரச்னை. கடைசியில கடைக்காரர்கிட்ட காசு வாங்கிட்டுதான் வந்திருக்காரு நம்ம ஆளு. எப்படிப் பாருங்க எங்க ஊரு ஆளுங்க!"

வாங்கிய பொருள்
பூஜா, நடிகை.

எட்எட்டு!

"மாசத்துல பாதி நாள் ஊர் சுத்திட்டே இருக்குற வேலை. ஒவ்வொரு ஊருக்கும் நாட்டுக்கும் போகும்போதும் அது என்ன இடம், அங்கே எப்படிப் போகணும், அங்கே என்ன ஸ்பெஷல் - இப்படி எல்லாத்தையும் இன்னொருத்தர்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. அதைவிட நாமே தெரிஞ்சுக்குவோம்னு நினைச்சு, கடைக்குப் போய் உலக மேப், இந்தியா மேப், இலங்கை மேப் வாங்கினேன்.நெட்ல பார்க்கலாம்னாலும்கூட, கையில் மேப்பை வெச்சுக்கிட்டு திருப்பித் திருப்பிப் பார்க்குறது மாதிரி வராதுல்ல! ஹவ் இஸ் இட்?"

கேட்ட இசை
சான்ட்ரா, டி.வி. நடிகை.

எட்எட்டு!

"மலையாளப் படம் 'நீலத்தாமரா'வில் வந்த 'அனுராக விலோச்சன ராவி' என்ற பாட்டு, எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு ஏழெட்டு தடவையாச்சும் கேட்பேன். அந்தப் பாட்டைப் பாடின ஸ்ரீகுமார், இசைத் துறைக்குப் புதுசு. ஆனா, அவ்வளவு ஸ்ருதி சுத்தமா பாடி இருந்தார். இந்தப் பாட்டைப் பாடினதுக்காக அவருக்கு விருதுகூடக் கிடைச்சிருக்கு!"

எட்எட்டு!
எட்எட்டு!