ஸ்பெஷல் -1
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'சச்சின் எப்போது எல்லாம் சீக்கிரம் அவுட் ஆகிறாரோ அப்போதெல்லாம் இந்திய பங்குச் சந்தை சுமார் 20 சதவிகிதம் இறங்குகிறது' என்று ஆச்சர்யத் தகவல் அளித்திருக்கிறது, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம். 'எப்படி... அப்படி?' என்று கேட்டால், 'சச்சின் அவுட் ஆனால், முதலீட்டாளர்களின் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் இந்தச் சரிவு!' என்று வருகிறது பதில். கேயாஸ் தியரி உண்மைதானோ?!

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்துக்கு 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நண்பேன்டா' என்று இரண்டு தலைப்புகள் சாய்ஸில் இருக்கின்றன. எதை ஃபிக்ஸ் செய்வது என்பதில் ஏக குழப்பமாம். ஆனால், படத்தின் பஞ்ச் லைன் இப்பவே ரெடி. 'ஓ.கே... ஓ.கே' என்பதுதான் அது. ஃபுல்லா கல்லா கட்டுங்க பாஸ்!

தமிழக இலவசத் திட்ட ஜுரம் பீகார் வரை எகிறி விட்டது. 'தேர்தலில் ஜெயித்தால், இளைஞர்களுக்கு இலவச மோட்டார் பைக்!' என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார் லாலு. 'ம்க்கும்... அந்த பைக்கை விற்றுதான் பெட்ரோல் வாங்க முடியும்!' என்று கடுப்பு காண்பித்து இருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். டாப் கியர் தட்டுங்க லாலு!

இந்தியர்களின் சாதுர்யம் மீது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதீத நம்பிக்கை. அமெரிக்க அதிபரின் பிரத்யேக ஆலோசனை கவுன்சிலில் ஃப்ரூக் கத்வாய், சுனில் பூரி ஆகிய இந்தியர்களைத் தொடர்ந்து, பெப்ஸி சி.இ.ஓ. இந்திரா நூயியை தேசியப் பொருளாதார கவுன்சிலின் தலைவர் ஆக்கும் திட்டத்தில் இருக்கிறார். இந்ந்ந்ந்ந்ந்ந்தியா!

ஜூஜூ விளம்பரப் புகழ் பிரகாஷ் வர்மா, கேரள சுற்றுலாக் கழகத்துக்காக ஒரு விளம்பரப் படத்தை இயக்கி இருக்கிறார். அதில், ரம்மியமான வனப் பிரதேசத்தில் சர்வதேச மாடல் மிரியம் இலோரா, யானையின் துதிக்கையில் ஓய்வெடுக்கும் காட்சி... சிம்ப்ளி சூப்பர்ப். 'கேரளா உங்களுக்காகக் காத்திருக்கிறது!' என்ற வாசகத்துடன் முடியும் அந்த விளம்பரத்துக்கு செம ரெஸ்பான்ஸ். கடவுள் ஆசிர்வதிப்பார்!

இன்பாக்ஸ்

பல மொழி கிளி இப்போது ஜெனிலியாதான். தெலுங்கு 'பொம்மரில்லு', தமிழ் 'சந்தோஷ் சுப்ரமணியம்', இந்தி 'இட்ஸ் மை லைஃப்' என ஒரே படத்தின் மூன்று வெர்ஷன்களிலும் நடித்தவர், இப்போது தெலுங்கில் ஹிட்டடித்த 'ரெடி', அதன் தமிழ் ரீ-மேக் 'உத்தமபுத்திரன்' ஆகிய படத்திலும் ஹீரோயின். "தொடர்ந்து நடித்த கேரக்டரிலேயே வேறு வேறு மொழிகளில் நடிக்கும்போது அதனை இன்னும் மெருகேற்ற முடிகிறது!" என்கிறார். ரீ-மேக் குயின்!

இன்பாக்ஸ்

அது என்ன மாயமோ, மந்திரமோ தமிழில் கவர்ச்சி என்றால் சிணுங்கும் நடிகைகள், தெலுங்கில் மட்டும் சிக்ஸர் அடிக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர். நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'பிருந்தாவனம்' படத்தில், கூட்டணி அமைத்து கவர்ச்சித் திருவிழா நடத்தியிருக்கிறார்கள் சமந்தாவும் காஜல் அகர்வாலும். தமிழன் பாவம்ல!

'தேர்தல் பிரசாரத்தை நாம்தான் முதலில் துவக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன். கன்னியாகுமரியில் துவங்குவதாக இருந்த அவரது பிரசாரம் இப்போது கிருஷ்ணகிரிக்கு மாறிவிட்டது. பா.ம.க பலமாக இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறாராம் விஜயகாந்த். பாகிஸ்தானுக்குப் பதிலா இப்போ பா.ம.க!

இன்பாக்ஸ்

'வான்டட்', 'டபாங்க்' என அடுத்தடுத்த படங்கள் ஹிட் என்பதால், உச்சத்தில் இருக்கிறது சல்மான் கான் மார்க்கெட். மாஸ் கலெக்ஷன் மாஸ்டர் என்பதால் அமீர் கான், ஷாரூக் கானைவிட அதிக சம்பளம் பெறுகிறார் சல்மான். அசினுடன் சல்மான் நடித்து வெளி வர இருக்கும் 'ரெடி' படத்தில் அவருக்கு `21 கோடி சம்பளமாம். அது போக ஓவர்சீஸ் ரைட்ஸிலும் பங்கு உண்டு. கோடி பாடி!

இன்பாக்ஸ்

'சத்தம் போடாதே' படத்தில் 'பேசுகிறேன்... பேசுகிறேன்' பாடலைப் பாடிய நேஹா பேசின் 'டாபா' என்கிற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார். ஆங்கிலம், இந்தி பாடல்களுடன் இதில் தமிழ்ப் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாடல் பெண்ணின் உடல் அழகை வர்ணிக்கும் பாடல் என்பதால், தன்னையே மாடலாக்கி வீடியோ எடுத்திருக்கிறார் நேஹா. ஆஹா ஆல்பமாக இருக்கும்டோய்!

இன்பாக்ஸ்

புலிகள் மீதான தடையை நீட்டிப்பது குறித்து, கடந்த வாரம் சென்னையில் தீர்ப்பாயக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ தவிர, போர் சமயத்தில் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் என யாருமே கலந்துகொள்ளவில்லை. 'அந்த நேரத்தில் தலைவர் ஊட்டியில் கலந்தாய்வுக் கூட்டத்தில் இருந்தார்!' என்று தகவல் தெரிவித்து இருக்கிறார்கள் சிறுத்தைகள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

'தி ரோபாட்' (இந்தி 'எந்திரன்') புரொமோஷனுக்காக மும்பை சென்ற ரஜினி, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவைச் சந்தித்து இருக்கிறார். "பால் தாக்கரே எனக்குக் கடவுள் மாதிரி. எனது பெற்றோர் மராத்தியர்கள். எனக்கு மராத்தியப் படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது!" என்று தன் விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார். அப்போ தமிழுக்கு 'டாட்'ஆ?

இன்பாக்ஸ்

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் கரண் ஜோஹர் டிசைன் செய்த ஆடைகளுடன் வந்து கலக்கினார்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார்ட்ஸ். அமிதாப், ஷாரூக், ஹிருத்திக் ரோஷன் என மூவரும் கறுப்பு ஆடையில் ராம்ப் வாக் வந்ததோடு மேடையிலேயே சின்ன டான்ஸும் போட ஃபேஷன் ஷோ கொஞ்ச நேரத்துக்கு டான்ஸ் ஷோவாக மாறிப்போனது! ரஜினியையும் ஆட்டத்துல சேர்த்திருக்கலாம்ல!

இன்பாக்ஸ்

உலகின் 'மோஸ்ட் எலிஜிபிள் சிங்கிள் வுமன்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார், ஹாலிவுட் நடிகையும் இயக்குநருமான ஜெனிஃபர் ஆனிஸ்டன். ஜேம்ஸ் பாண்ட் நாயகி ஹாலே பெர்ரியைத் தோற்கடித்து, முதல் இடம் பிடித்திருக்கும் ஆனிஸ்டன், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இனிமேலும் சிங்கிளா இருக்க விடுவாங்களா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்