ஸ்பெஷல் -1
Published:Updated:

காமெடி குண்டர்

காமெடி குண்டர்


காமெடி குண்டர்!
காமெடி குண்டர்
காமெடி குண்டர்
ஒவியங்கள்:ஹரன்
காமெடி குண்டர்
காமெடி குண்டர்

'மறப்போம்... ஆனா, அடிக்கடி நினைப்போம்' விருது! 'வன்னியர்களுக்கான இட

ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு நாம் செய்த உதவிகளைச் சிலர் மறந்துவிட்டார்கள். மறந்துவிட்டவர்களின் செயலை நாமும் மறப்போம்' என்று வசனம் தீட்டியுள்ள கருணாநிதிக்கு!

'எவ்ளோ தாங்கினாலும் அடிக்கிறாய்ங்கய்யா' விருது! முதலில் கரூர், இப்போது வேலூர் என்று போகிற இடம் எல்லாம் எதிர் கோஷ்டிகளின் எதிர்ப்பைச் சமாளிக்கும் தங்கபாலுவுக்கு!

'பிளானிங் பேட் பாய்' விருது! "காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்காக பாகிஸ்தான்தான் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி அளித்தது" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப்புக்கு!

'நோ... நோ... பிரதமர் பதவி பாவம்' விருது! "வருங்காலத்தில் பிரதமர் ஆவேனா என்று தெரியாது. எனக்குத் தலைவிதியில் நம்பிக்கை இல்லை" என்று நைஸாக நழுவும் ராகுல் காந்திக்கு!

காமெடி குண்டர்

'பாபா தாக்கரே' விருது! "பால் தாக்கரே எனக்குக் கடவுளைப் போன்றவர்" என்று பேசி, பல தரப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ரஜினிகாந்த்துக்கு!

'பந்தம் இல்லே ஒப்பந்தம்' விருது! "இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் நீடிக்கிறோம். மற்றபடி இந்தியாவுடன் ஒருபோதும் இணையவில்லை" என்று காஷ்மீர் சட்டசபையிலேயே பேசி சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு!

தே.மு.தி.க ஆபிஸ், நம்பர் - 6, துபாய் குறுக்குச் சந்து, துபாய்!

பஞ்ச் பாட்ஷா!

"தே.மு.தி.க-வின் துபாய் பிரிவு தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்" என்று அறிக்கைவிட்டுள்ள விஜயகாந்த்திடம், "கட்சி ஆபீஸ் அட்ரஸ் என்ன சார், நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய்க் குறுக்குச் சந்து, துபாய் பஸ் ஸ்டாண்ட், துபாயா?"

என்ன கொடுமை சார் இது?

"என் மனைவி ராப்ரிதேவி பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில்
போட்டியிடுகிறார். மக்கள் விருப்பப்படி
இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது!"

- லாலு பிரசாத் யாதவ்

கோயிந்து கொஸ்டீன்!

"நடனப் புயல்... நடனப் புயல்னு சொல்லி, இப்போ புயல் நடனம் ஆரம்பம் ஆயிடுச்சே?"

இந்த வார டவுட்!

"சென்னையில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு எதிர்க் கட்சிகள் சதிதான் காரணம்னு கருணாநிதி சொல்றாரே, அடுத்து டிரைவருக்கு அடி விழலை, ஆக்சிடென்ட்தான் நடந்துச்சுன்னு சொல்வாரோ?"

காமெடி குண்டர்
காமெடி குண்டர்