"சுயநலவாதியின் அடையாளம் என்ன?"
"அவன், 'உன் வீட்டுக்கு நான் வந்தால் நீ என்ன கொடுப்பாய்? என் வீட்டுக்கு நீ வந்தால் என்ன கொண்டு வருவாய்?' என்று கேட்பவனாக இருப்பான்!"
\ கி.மனோகரன், பொள்ளாச்சி.
"இந்தியாவில் சினிமா, சிற்பம், ஓவியம், இலக்கியம் எல்லாமும் வியாபாரமயமாகி வருகிறதே?"
"ஜப்பான் சென்று வந்த எழுத்தாளர் ஒருவர் இப்படி எழுதி இருந்தார்-'வியாபாரம்கூட கலையம்சமாக உள்ளது ஜப்பானில். கலைகூட வியாபாரமாகிவிட்டது இந்தியாவில்!' அட்சர சுத்த வரிகள் இவை!"
\ ஜி.மாலா கோபாலன், திருவாரூர்.
"பிரம்மச்சாரி, சம்சாரி என்ன வித்தியாசம்?"
"எல்லா பெண்களும் அழகிகள் என்று நினைப்பவன் பிரம்மச்சாரி. 'தன் மனைவியைத் தவிர' என்று நினைப்பவன் சம்சாரி!"
- ஜி.கே.நிதி, வந்தவாசி.
"திருப்பதியில் 15 ஆண்டுகளாக போலி லட்டு தயாரித்து விற்றார்களாமே... இத்தனை வருடங்களாகவா யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?"
"ஒருவேளை லட்டை சதுரமாகவோ, காரமாகவோ செய்து விற்றிருந்தால் உடனடியாகக் கண்டுபிடித்து இருப்பார்களோ?"
- ஏ.எஸ்.யோகானந்தம், கோபி.
"துன்பம், துயரங்களின்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி' என்று மனம் சஞ்சலத்தில் மேலும் சோர்வுறுகிறதே?"
|