ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

சூஃபி கதைகள் தமிழில்: சஃபி, வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29

சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 பக்கம்: 415 விலை:

விகடன் வரவேற்பறை

250

வாழ்க்கைபற்றிய குறுக்கு விசாரணையாக இந்த நூலைக் கருதலாம். சூஃபி ஞானிகள் பற்றியும், அவர்களின் கதைகள்பற்றியும் துண்டுதுண்டாக நிறையப் படித்திருக்கிறோம். மொத்தமாக, 190 சூஃபி கதைகளை ஒரே புத்தகத்தில் படிக்கும்போது, அது வேறொரு அலைவரிசையைத் தருகிறது. ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து, ஏதோ ஒரு கதையைப் படித்துவிட முடியும் என்பதை இதன் சிறப்பாகவே கூறலாம். தேனி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் சஃபி மொழிபெயர்த்த இந்த சூஃபி கதைகளும், சூஃபி ஞானிகள் பற்றிய ஆழமான முன்னுரையும் தமிழ்ச் சூழலில் புதிதும், பாராட்டப்பட வேண்டியதும் ஆகும்!

நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா! www.mynoteit.com

குப்பில் நோட்ஸ் எடுத்துவிட்டு, அப்போதே கடாசிவிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற தளம்! தேதி வாரியாக, பாட வாரியாக இந்தத் தளத்தில் உங்கள் பாடம் சம்பந்தமான குறிப்புகளைத் தினமும் பதிந்துகொள்ளலாம். உங்களது வகுப்பறை நண்பர்களையும் குரூப் சேர்த்துக்கொண்டு, ஆன் லைனிலேயே குரூப் ஸ்டடி போடலாம். வெளியூர் செல்லும்போது புத்தகச் சுமை குறைப்பது தளத்தின் ப்ளஸ்!

தி போஸ்ட்மேன்
இயக்கம்: மனோகர்

விகடன் வரவேற்பறை

சிறந்த குறும்படத்துக்கான தேசிய விருது அங்கீகாரம் பெற்ற படம். 'சார் போஸ்ட்' என்ற குரலுடன் நம் வீட்டு வாசலில் சைக்கிள் மணி அடித்த போஸ்ட்மேன்கள் வழக்கொழிந்துபோனதைப் பற்றிய கதை. மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் போஸ்ட்மேனையே நம்பியிருக்கும் ஒரு கிராமத்தில், அவரது முக்கியத்துவம் இன்றியமையாதது. தொலைபேசிகளும் பின்பு அலைபேசிகளும் வந்த பிறகு போஸ்ட்மேன்கள் செல்லாக் காசாகிவிட்டனர். இதை அழகான காட்சிகளோடு விவரிக்கிறது இந்தக் குறும்படம். தரமான சினிமா அளவுக்கு அபிநந்தனின் ஒளிப்பதிவு அபாரம்!

காட்சி
www.kaattchi.blogspot.com

'கற்றது தமிழ்' இயக்குநர் ராம் மற்றும் நண்பர்கள் இயக்கும் வலைப்பூ. தமிழியம், தலித்தியம், ஈழ ஆதரவு, சாதி எதிர்ப்பு, பெண்ணியம் என முற்போக்கு அரசியலைப் பேசுகின்றன பல கட்டுரைகள். தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இயங்கும் தமிழ் இயக்கங்களை 'தமிழ் இயக்கங்கள் ஒரு அறிமுகம்' என்னும் தலைப்பிலான பிரிவு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துகிறது. 'இறுதி யுத்தத்தில் தப்பித்தவரின் வாக்குமூலம்' என்ற தலைப்பில் தமிழ் - ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள கட்டுரை, இறுதிப் போரின் துயரத்தை அழுத்தமாகச் சொல்கிறது!

உத்தமபுத்திரன் இசை: விஜய் ஆண்டனி
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை: ` 99

'நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு', 'டக்குன்னு டக்குன்னு டக்குன்னு' என்று ரிப்பீட் பீட்களால் இளசுகளை ஈர்க்கும் இசை 'உஸ்சுமு லாரெஸ்சே' பாடலில். விஜய் ஆண்டனி, ஜானகி ஐயர் குரல்களில் மின்சார உற்சாகம். கொஞ்சம் 'அக்கட சாயல்' அடித்தாலும் 'கண் இரண்டில் மோதி' பாடல் கொஞ்சும் மெலடி. 'இடிச்ச பச்சரிசி, புடிச்ச மாவிளக்கு' பாடல் தாளம் போடத் தூண்டுகிறது. 'தூறல் போடும் மேகம் நீ' பாடல் முழுக்க 'நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்... நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்' என்று பரவும் ஏக்நாத்தின் காதல் ஒன் லைனர்கள் சுவாரஸ்யம். உற்சாகத் தத்துவம் கொப்பளிக்கும் ஃபாஸ்ட் பீட் பாடல் 'உலகம் உனக்கு - கவலை எதுக்கு'. அழுத்த முத்திரை பதிக்காத ஆல்பம்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை