'எவனாவது காது குத்தாதவன் இருப்பான்... போய் அவன்கிட்டே சொல்லு!' இந்த
ஹைதர் கால டயலாக் இப்போது சென்னையில் ரீ-மிக்ஸ் ரவுண்ட் அடிக்கிறது. ஆண்களுக்கு காது வளையம், பெண்களுக்கு மூக்குத்தி என சென்னை இப்போது ஆன்டிக் ஃபேஷனுக்கு (பழங்காலத்து பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது) திரும்பிக் கொண்டு இருக்கிறது!
மூக்கு குத்திக்கொள்ளூம் 'பியர்சிங்' (piercing) கலாசாரம் மீண்டும் சென்னைப் பெண்களிடம் தொற்றிக் கொண்டு இருக்கிறது. நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் ஸ்வேதா ஆச்சர்யமாக இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள் கிறார். "போன வருஷம்கூட 'மூக்கு குத்திக்கிறீங்களா?'ன்னு கேட்டா, பொண்ணுங்க அலறி அடிச்சி ஓடினாங்க. மாடர்ன் ஆடைகளுக்கு மூக்குத்தி செட் ஆகாதுன்னு அப்போ ஒரு நினைப்பு இருந்தது. ஆனா, என்ன ஆச்சுன்னு தெரியலை. இப்போ அவங்களே ஆர்வமா தேடி வந்து மூக்கு குத்திக்கிட்டுப் போறாங்க. மூக்குத்தின்னா வழக்கமான தங்கம், கல் மூக்குத்தி இல்லை. ஸ்டெட், ரிங்னு பல வடிவங்களில் விதவிதமான பொருட்களை மூக்கில் குத்திக்குறாங்க. தங்கம், வைரம், மெட்டல்னு நம்ம
|