அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்க வர்றவங்கள் எல்லாம் அழுவாங்களே... அந்தக் கண்ணீரைத் துடைக்க இந்தத் துணியெல்லாம் கொடுப்பேன்!"
"இதோ எங்களிடம் ஒரு தானியம் உண்டு. ஒற்றை வைக்கோலும் உண்டு. தானியத்தை விதைக்க ஒரு நிலத்தை யாராவது காட்டுங்களேன். வயல்களின் திசைகளைக் காட்டுங்களேன்" என்று ஒருகோமாளி கெஞ்ச...
"தானியத்துக்குள் போராளிகள் வாழ்ந்ததாகஒரு பழங்கதை உண்டு. அதைப் பார்த்துப் பயந்தஎதிரா ளிகள், எங்கள் தானியங்கள் அனைத்தையும் கள வாடிப்போனார்கள். இந்த ஒரு தானியம் இன்றி, வேறு தானியம் எங்களுக்கு இல்லை. இதை விதைக்க நிலம் தாருங்களேன்" என்று அடுத்த கோமாளி அலறித் துடிக்க...
அழுகையை அடக்கி... நாக்கை மடக்கி... தானியத்துக்கு ஒரு கோமாளி சல்யூட் வைக்கிறான்."ஒரு நாள் இந்தத் தானியத்தை நாங்கள் விதைப்போம். அது வயலாகி நிரம்பி வழியும். அதை உலகம் எங்கும் விதைப்போம்" நம்பிக்கையுடன் முடிகிறது முருக பூபதியின் 'மிருக விதூஷகம்' நாடகம்!
நவீன நாடக உலகில், முருக பூபதி முக்கியமான வர். 'மரண வீட்டின் குறிப்புகள்', 'குற்றம்பற்றிய உடல்', 'வனத்தாதி' என்று அவரது நாடகங்கள் நவீன ஆட்களால் அதிகம் கவனிக்கப்பட்டவை. சிறுவர்களுக்காக அவர் தயாரித்துள்ள 34 நாடகங் கள் தென் மாவட்டங்களின் பல பள்ளிகளில் அரங்கேறியவை. பொதுவாக, எல்லாவற்றையும் புனைவுகளாகவே சொல்லிப்போகும் அவர், மிகப் பெரிய அரசியலை முன்வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
"இன்றைய போர்ச் சூழல் இப்படி ஒரு நாடகத்தைத் தயாரிக்கவைத்தது. கூப்பிடு தூரத்தில் நம்மு டைய இனக் குழுவைக் கருவறுக்கும் போர் நடந்து கொண்டு இருந்தபோது, அதை கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோலத்தான் நாம் பார்த்தோம். மனிதம் மரத்துப்போகும். அதைவிடத் தடித்தும் போனது நமக்கு. ஆனால், அந்த மக்களுக்கோ நிலம்என்ற ஒன்றே இல்லை. அவை முன்பு பதுங்கு குழிகளாக இருந்தன. இன்று மரணக் குழிகளாக மாறின. அந்த நிலத்தில் எதை விதைப்பது என்பதற்கான கேள்வி தான் இந்த நாடகம்.
|