Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

எட்டு வி.ஐ.பி-க்கள் எட்டு விஷயங்கள்பற்றி வாராவாரம் பேச இருக்கிறார்கள்.

இந்த வாரம் எட்டுத் திக்கு விஷயங்கள்...

பார்த்த படம்

ஹாரிஸ் ஜெயராஜ்,இசையமைப்பாளர்

எட்எட்டு!

"சமீபத்தில் பார்த்த படம் 'கராத்தே கிட்'. ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் இமேஜ் எதுவும் பார்க்காமல் வயதில் முதிர்ந்தவராக, ஒரு சிறுவனுக்கு வழிவிட்டு நடித்திருக்கிறார். விடாமுயற்சி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை இந்தப் படம் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். சிறுவன் ஜேடன் ஸ்மித்தின் நடிப்பு அவனது அப்பா வில்ஸ்மித் தையே மிஞ்சிவிட்டது. ரொம்ப நாள் கழித்து நான் பார்த்த நெகிழ்ச்சியான படம் அது. அதை உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்!"

படித்த புத்தகம்

தமிழச்சி தங்கபாண்டியன்,கவிஞர்

எட்எட்டு!

"இலங்கையில் நடந்திருக்கும் தமிழினப் படுகொலைகளைத் தேதி வாரியாக ஆவணப்படுத்துகிறது 'தமிழினப் படுகொலைகள் 1956-2008' புத்தகம். 'மனிதம் பதிப்பக'த்தின் இந்த நூல், வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அணுகாமல், நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் துல்லியமான தரவுகளுடன் தொகுக்கப்பட்டு இருக்கிறது. சிங்களப் பேரினவாதிகளை உலகத்தின் முன் அம்பலப்படுத்த இம்மாதிரியான நூல்கள் நிச்சயம் உதவக்கூடியவை!"

சென்ற இடம்

ஷில்பா,காம்பியர்

எட்எட்டு!

"உத்ராஞ்சல் மாநிலத்தில் இருக்கிற ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவுக்குச் சமீபத்தில் சென்றேன். அங்கே இருந்து 'ஆழி'க்குச் சென்றேன். இந்த 'ஆழி'யில் 2,500 முதல் 3,050 மீட்டர் உயரம்கொண்ட பனி மலைகள் இருக்கின்றன. அங்கே பயிற்சி இல்லைன்னாலும் பனிச்சறுக்கு விளையாடலாம். மூன்று கி.மீ. நீளத்துக்கு ரோப் காரில் ஆல்ஃபைன் மலைக் காடுகளையும், பனி மலைகளையும் சுற்றி வருவது பிரமாதமான அனுபவம். அடுத்த சம்மர் ட்ரிப்பும் 'ஆழி'தான்!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி

மஹதி,பின்னணிப் பாடகி

எட்எட்டு!

"சமீபத்தில் கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போயிருந்தேன். பிலடெல்ஃபியாவில் 'தமிழர்கள் அறக்கட்டளை' நடத்திய 'சங்கமம்' இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கே காலையில் இருந்து மாலை வரை லஷ்மன்-ஸ்ருதி, க்ருஷ், மாலதி, டி.எம்.எஸ். செல்வக்குமார் ஆகியோரோடு கச்சேரி நடத்தியது மறக்க முடியாத அனுபவம். மொத்த நிகழ்ச்சியும் முடியும் வரை அரங்கம் நிறைந்தே இருந்தது. தமிழகத்தில் இருந்து வரும் கலைஞர்களை அமெரிக்கத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்!"

பாதித்த சம்பவம்

ஆதவன் தீட்சண்யா,எழுத்தாளர்

எட்எட்டு!

"வறுமையால் வீழ்த்தப்பட்ட இரண்டு கவிஞர்களைச் சமீபத்தில் சந்தித்தேன். 'பவித்ரன் தீக்குண்ணி' என்னும் மலையாளக் கவிஞரின் கவிதை நூல் விமர்சனக் கூட்டம் சேலத்தில் நடந்தது. தீக்குண்ணியின் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. அப்பா, மனநோயாளி. கேபிளுக்குக் குழி வெட்டும் வேலை பார்த்த தீக்குண்ணியின் கவிதைகள் புத்தகமாக வெளிவரக் காரணமாக இருந்தவர் அலமேலு என்ற தமிழ்ப் பெண். தீக்குண்ணியுடன் வேலை பார்த்த அலமேலு, 'ஏதோ எழுதறே... எல்லாத்தையும் சேர்த்துவெச்சு புஸ்தகமாப் போடு' என்று ஊக்குவித்திருக்கிறார். இப்போது தீக்குண்ணி, மலையாளத்தில் ஒரு முக்கியக் கவிஞர். இப்போது வருமானத்துக்காக நிகழ்ச்சிகளுக்குப் பந்தல் போட்டுக்கொண்டு இருக்கிறார் தீக்குண்ணி. அவரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கவிஞர் என்.டி.ராஜ்குமார். கணியான் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அஞ்சல் துறையில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை தற்காலிகக் கடைநிலை ஊழியராகப் பணியாற்றும் என்.டி.ராஜ்குமாரின் ஒருநாள் சம்பளம் 47 ரூபாய். நிகழ்ச்சி நடக்கும்போதே, 'மூன்றாவது படிக்கும் தன் மகனுக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட முடியுமா?' என்கிற கவலையில் அழுதுகொண்டு இருந்தார். அந்த அழுகை என்ன அவ்வளவு வலிமையானதா, 'செம்மொழியான தமிழ் மொழியைத்' தாண்டி நம் செவிகளில் விழுவதற்கு?"

கேட்ட இசை

ஜனனி அய்யர்,நடிகை

எட்எட்டு!

" 'மதராசப்பட்டணம்' படத்தில் 'பூக்கள் பூக்கும் தருணம்'னு ஒரு பாட்டு. செமத்தியா இருக்கு. ராத்திரி தூங்குறதுலேர்ந்து, காலையில் கண் விழிக்கிற வரைக்கும் இந்தப் பாட்டுதான் இப்போ என் ஃபேவரைட்!"

சந்தித்த நபர்

கொளத்தூர் மணி,பெரியார் திராவிடர் கழகம்

எட்எட்டு!

"கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மேக்ஸ்பெக்ஸ்டர் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வந்திருக்கிறார். அப்போது 'பெரியார் பஸ்ஸ்டாண்ட்' என்ற பெயரைக் கேள்விப்பட்டவர், 'யார் இந்த பெரியார்?' என்று விசாரித்திருக்கிறார். 'சாமி இல்லைன்னு சொன்னவர்' என்று பலர் பெரியாரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 'சாமி இல்லைன்னு சொன்னதுக்காகவா ஒருவர் பெயரில் பஸ் ஸ்டாண்ட் வைத்திருக்கிறார்கள்?' என்று அவருக்கு ஒரே ஆச்சர்யம். கலிஃபோர்னியா சென்ற மேக்ஸ், பெரியாரைப் படிப்பதற்காகவே தமிழ் படித்திருக்கிறார். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த மேக்ஸ்பெக்ஸ்டரைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாத
இனிய அனுபவம்!"

வாங்கிய பொருள்

சாய்னா நெய்வால்,விளையாட்டு வீராங்கனை

எட்எட்டு!

"இந்தோனேஷியாவில் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதுமே ஷாப்பிங் கிளம்பிவிட்டேன். தொடர்ந்து, மூன்று சாம்பியன் பட்டங்கள் ஜெயித்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஷாப்பிங்கில் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கொடுத்து ஸ்லீவ்லெஸ் கோல்டன் டாப்ஸ் ஒன்று வாங்கினேன். மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் வந்து இறங்கும்போது, அதைத்தான் உடுத்தியிருந்தேன்!"

எட்எட்டு!
எட்எட்டு!