Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ரேஸ¨க்கு 'பை...பை' சொல்லிவிட்டு வந்துவிட்டார் அஜீத். வெங்கட்பிரபு இயக்க இருக்கும் அஜீத்தின் 50-வது படத்தின் பெயர் 'மங்காத்தா- உள்ளே வெளியே'. அஜீத்துடன் நாகார்ஜுனாவும் நடிக்க இருக்கிறார். ஹீரோயின்... அழகு அனுஷ்கா. தல கௌம்பிருச்சு!

'7-ம் அறிவு' படத்தில் சூர்யா ரத்த தானம் கொடுப்பதுபோல ஒரு ஸீன். 'ஏன் நடிக்க வேண்டும்? உண்மையாகவே ரத்த தானம் செய்கிறேனே' என்றுஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ரத்த தானம் செய்திருக்கிறார் சூர்யா. இதுதான் செவன்த் சென்ஸ்!

இன்பாக்ஸ்

உலகக் கோப்பைப் போட்டிகளை ரசிக்கப் போன பாரீஸ் ஹில்டனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தென் ஆப்பிரிக்க போலீஸ். பாரீஸ் ஹில்டனின் பைக்குள் மரிஜுவானா என்கிற போதைப் பொருள் இருந்தது அரெஸ்ட்டுக்குக் காரணம். போதை பேதை!

இன்பாக்ஸ்

மல்லிகா ஷெராவத் என்றாலே காஸ்ட்லி என்று அர்த்தம். சமீபத்தில் தங்க நகைக் கடை நிறுவனம் ஒன்று, தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஷெராவத்தை அணுகியது. 90 செகண்ட் விளம்பரத்துக்கு மல்லிகா கேட்ட தொகை... ஜஸ்ட் 10 கோடி ரூபாய்.. கோடி லேடி!

இன்பாக்ஸ்

விக்ரம், ராணா என யாருமே சரிப்பட்டு வராததால், மீண்டும் தம்பி தனுஷை வைத்தே, 'இதுமாலை நேரத்து மயக்கம்' படத்தைத் துவக்கிவிட்டார் செல்வராகவன். ஹீரோயின்... அதே அதே ஆண்ட்ரியா.இதுவும் மயக்கம்தான்!

இன்பாக்ஸ்

தொடர்ந்து மூன்று சாம்பியன் பட்டங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும் சாய்னா நெய்வாலுக்கு டி.எஸ்.பி. பதவி கொடுத்து கௌரவித்திருக்கிறது ஹரியானா அரசு. அழகு போலீஸ்!

ஐரோப்பாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ரையன் ஏர் விமான நிறுவனம் 'விமானத்தில் நின்றுகொண்டே பயணம் செய்யும் வசதி'யை அறிமுகம் செய்கிறது. 'சீட்டுகளைக் குறைப்பதால் செலவும் குறையும். சிறிய தூரப் பயணங்களுக்கு டிக்கெட் வெறும் 272 ரூபாய்தான்' என அதிரவைக்கிறது ரையன் ஏர். ஃபுட்போர்டு அடிக்கலாமா?

இதுவரை இந்தியாவில் ட்விட்டரில் அமிதாப்தான் ஹிட். முதல் நாளிலேயே 37 ஆயிரம் பேர் அவரை ஃபாலோ செய்தார்கள். இப்போது அமிதாப்பை மிஞ்சிவிட்டார் அமீர் கான். அவர் ட்விட்டரில் சேர்ந்த 12 மணி நேரத்தில், சுமார் 50 ஆயிரம் பேர் ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி சார் எப்போ வர்றீங்க?

விவேக் ஓபராய், கரண் ஜோஹர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்திருக்கிறது மும்பை போலீஸ். ஷாரூக்கானுக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பும் குறைந்திருக்கிறது. 'தங்களோடு போலீஸ் வருவது, நடிகர்களுக்கு 'ஸ்டேட்டஸ் சிம்பல்' போல் ஆகிவிட்டது. நடிகர்களின் கௌரவத்துக்காக போலீஸாரை வீணடிக்க முடியாது' என்று காட்டம் காட்டியிருக்கிறது காவல் துறை. அப்படிப் போடு அரிவாளை!

இன்பாக்ஸ்

அதிகாரிகளை வேலை வாங்குவதில் ஆரம்பித்து, மீடியாவைச் சமாளிப்பது வரை ஜூனியர்களுக்கு வகுப்பு எடுக்க இருக்கிறார்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கமல்நாத் போன்ற சீனியர் அமைச்சர்கள். கிளாஸ§க்குப் போகப்போகும் ஜூனியர் அமைச்சர்களில் மு.க.அழகிரியும் ஒருவர். மாண்புமிகு மாணவன்!

இன்பாக்ஸ்

'பூக்கடை' என்ற பெயரில் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் மணிரத்னம். பெங்களூரில் படித்துக்கொண்டு இருக்கும் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்தான் ஹீரோ. வாரிசே வருக!

இன்பாக்ஸ்

1990-களில் இருந்த தனது பழைய ஹேர்ஸ்டைலையே கொஞ்சம் மாடர்னாக மாற்றி, புது ஸ்டைலுடன் களம் இறங்கியிருக்கிறார் சச்சின். விம்பிள்டன் போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த சச்சின், இந்தப் புதிய-பழைய ஹேர்ஸ்டைலுடன் மைதானத்துக்குள் வர... ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். அடியோ, முடியோ, சச்சின்தான் மாஸ்டர்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்