Published:Updated:

தங்க ஷு யாருக்கு?

தங்க ஷு யாருக்கு?


தங்க ஷு யாருக்கு?
தங்க ஷு யாருக்கு?
தங்க ஷு யாருக்கு?
சார்லஸ்,எம்.குமார்
தங்க ஷு யாருக்கு?

க்ளைமாக்ஸ் திருப்பத்தில் திகுதிகுத்துக் கிடக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்துப்

போட்டிகள்!

ஆச்சர்ய அதிர்ச்சியாக அரை இறுதிகளையேனும் எட்டிப்பிடிக்கும் எனக் கணிக்கப்பட்ட 'அண்ணாத்தே' அணிகளுக்கு அல்வா கொடுத்தன கறுப்புக் குதிரை அணிகள். அரை இறுதி வரையிலான கலவர நிலவரத் துளிகள் இங்கே...

மரண அடி வாங்கி, தொடரில் இருந்து வெளியே வந்து விழுந்திருக்கிறது அர்ஜென்டினா அணி. அனைத்து அணிப் பயிற்சியாளர்களுக்கும், 'நீங்கள் அதைச் செய்திருக்கக் கூடாது, இதைச் செய்திருக்கக் கூடாது' என்று அறிவுரைகள் கூறி வந்த அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் மரடோனா, தனது அணி 4-0 என்கிற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடையும் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்!

தங்க ஷு யாருக்கு?

கிட்டத்தட்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பில்ட்-அப்புடன் நடந்த ஜெர்மனி - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான கால் இறுதிப் போட்டி துவங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்தது ஜெர்மனி. சரசரவென நான்கு கோல்கள் வாங்கி சரணாகதித் தோல்வி அடைந்ததும், கதறி அழுத மரடோனாவை ஆற்றித் தேற்ற அவரது மகள்கள் ஜெனைனா, டால்மாவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. 'குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியிடம் குத்து வாங்கியதைப்போல் உணர்கிறேன்!' எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் மரடோனா. இப்போது அவர் தலைக்கு மேல் கத்தி. அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து எந்த நேரமும் அவர் நீக்கப்படலாம்!

தங்க ஷு யாருக்கு?

மெஸ்ஸி, காகா, ரொனால்டோ, ரூனே என இந்த உலகக் கோப்பையின் ஸ்டார் பிளேயர்கள் என்று கருதப்பட்ட நால்வருமே எந்தப் பெரிய அதிசயங்களும் நிகழ்த்தவில்லை. இதில் மெஸ்ஸியும் ரூனேவும் தங்கள் அணிகளுக்காக ஒரு கோல்கூட அடிக்கவில்லை என்பது அவர்களது ரசிகர்களுக்கு அவமான அதிர்ச்சி!

ஜெர்மன் அணியின் கேப்டன் மைக்கேல் பலாக் திடீரெனக் காயமடைந்ததால் ஆரம்பத்திலேயே கொஞ்சம் ஏமாந்துதான் போனார்கள் ரசிகர்கள். ஆனால், பலாக் விலகல் காரணமாகத் திடீர் கேப்டன் வாய்ப்பு பெற்ற ஃபிலிப் லாம், அணி வீரர்களை ஒன்று திரட்டி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகிறார். 'சிறந்த வீரர்கள் வெற்றிபெறுவது இல்லை. சிறந்த அணிதான் வெற்றிபெறும்!' என்பதுதான் ஃபிலிப் லாமின் வேதம்!

ஹாலந்துக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தின் ஆரம்பத் தருணங்களில் பிரேசில் அணியின் ஹீரோவாக இருந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே வில்லனாக மாறியவர் ஃபிலிப் மெலோ. ஹாலந்துக்கு எதிராக பிரேசில் முதல் கோல் அடிக்கக் காரணமாக இருந்த மெலோ, அடுத்த சில நிமிடங்களிலேயே 'சேம் சைடு கோல்' அடித்து ஹாலந்து அணிக்கு உதவினார். அடுத்தும் அடங்காதவர், அர்ஜென் ராபன் என்னும் ஹாலந்து வீரரைக் கீழே தள்ளிஷூ காலால் மிதித்தார். இதனால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளி யேற்றப்பட்டார். இதனால், ஆட்டத்தின் இறுதி 25 நிமிடங்களுக்கு 10 வீரர்களுடனேயே விளையாடியது பிரேசில். தவறு மேல் தவறு செய்த மெலோ மீது பிரேசில் ரசிகர்கள் செம கடுப்பில்!

'பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் காகாவுக்கு முழு உடல் தகுதி இல்லாதபோதும் தொடர்ந்து விளையாடவைத்தார், அமைதியான தற்காப்பு ஆட்டம் ஆடும் வழக்கத்தைக்கொண்ட பிரேசில் அணியை எதிர் அணி வீரர்களைத் தாக்கி ஆடும் ஸ்டைலுக்கு வம்படி யாக மாற்றினார்!' என அணியின் பயிற்சியாளர் டுங்கா மீது குற்றச் சாட்டுகளைச் சுமத்தி கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்!

உருகுவே வீரர் சாரஸ்ஸின் கையை 'கடவுளின் கை' என்று கொண்டாடுகிறார்கள் உருகுவே மக்கள். கால் இறுதிப் போட்டியின்போது, கானா அணி வீரர் அடித்த பந்து நேராக கோல்வலைக் குள் விழச் சென்றது. யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்கிற நிலையில், திடீரெனப் பாய்ந்து வந்த சாரஸ் கையால் பந்தைத் தடுத்தார். அவர் கையால் தடுக்கவில்லை என்றால், அது நிச்சயம் கோல்தான். சாரஸ் கையால் தடுத்ததால் கானாவுக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்புகொடுக் கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை வீணடித்தார் கானா வீரர். இதன் பிறகு, இரு அணி களுமே கோல் அடிக்காததால் பெனால்ட்டிஷூட் அவுட்டில் 5-3 என கோல் முன்னணியில் வெற்றிபெற்றது உருகுவே அணி. ஆனால், கையால் பந்தைத் தடுத்ததால், சாரஸ§க்கு அடுத்த மூன்று ஆட்டங்கள் விளையாடத் தடை விதித்திருக்கிறது ஃபிஃபா!

பராகுவே அணிக்கு எதிராக டேவிட் வில்லா அடித்த க்ளைமாக்ஸ் கோலால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஸ்பெயின். இந்த ஆண்டு உலகக் கோப்பையில் தங்கஷூ வைக் கைப்பற்றும் போட்டியில் டேவிட் வில்லா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு, ஜெர்மனி யின் மிரோஸ்லோவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் இருவரும்தான் கடும் போட்டி!

உலகக் கோப்பையில் இருந்து பிரேசில் வெளியேறினாலும், காகாவின் மவுசு குறையவே இல்லை. லீக் பந்தயங்களில் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வரும் காகாவை, 700 கோடி ரூபாய் கொடுத்து இழுக்க முயற்சி செய்துவருகிறது செல்ஸி அணி!

தங்க ஷு யாருக்கு?

நடுவர்களின் தவறான தீர்ப்புகள் இந்த உலகக் கோப் பையை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இங்கி லாந்து, மெக்ஸிகோ அணிகளின் தோல்விக்கு நடுவர்களின் தவறான தீர்ப்புகளே காரணம் என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகி இருக் கிறது. ஃபிஃபாவும் அதனை ஒப்புக் கொண்டது. ஆனால் நடுவர்களோ, 'பிளேயர்கள் 100 சதவிகிதம் சரியாக இருப்பது இல்லை. நடுவர் களிடம் மட்டும் எப்படி 100 சதவிகிதத்தை எதிர்பார்க்கிறார் கள்?' என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்!

கால்பந்து என்றாலே தென் அமெரிக்க நாடுகள்தான் என்கிற நிலை மாறி, ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இப்போது. இந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளில் ஜெர்மனி, ஸ்பெயின், ஹாலந்து என மூன்றுமே ஐரோப்பிய நாடுகள்தான்!

தங்க ஷு யாருக்கு?
தங்க ஷு யாருக்கு?