Published:Updated:

நோட்டீஸ் போர்டு!

நோட்டீஸ் போர்டு!

நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
ரைட்டர்
படங்கள்: என்.விவேக்,கே.கார்த்திகேயன்,வீ.நாகமணி
நோட்டீஸ் போர்டு!

அரவிந்தன் வந்திருக்காக!

நோட்டீஸ் போர்டு!

கனிமொழியின் கணவர் அரவிந் தன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார் என்பது இந்த வாரத்தின் முக்கியமான செய்தி. மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி நடிக்கும் 'வம்சம்' பட இசை வெளியீட்டு விழாவுக்குத் திடீரென வந்தார். முன் வரிசையில் இரண்டு நாற்காலிகள் காலியாக இருந்தன. அதில் உட்காரப்போனவரிடம், 'இது ரிசர்வ் பண்ணின சீட்' என்று சொல்லி விட்டார் டாக்டர் கமலா செல்வராஜ். அரவிந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த வரிசையில் இருந்த தமிழச்சி தங்கபாண்டியன் எழுந்து கை கொடுத்து, இருக்கையை ஏற்பாடு செய்துகொடுத்தார்.

அடிக்கடி வந்து போங்க பாஸ§... இல்லைன்னா முகம் மறந்துபோகும்!

உடைப்புக் கழகம்!

நோட்டீஸ் போர்டு!

பெரியார் தனது காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தார். ஆனால், அவரது பெருந்தொண்டர்கள் கார் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடர் கழகத்துக்கும் அதில் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கும் நடக்கும் யுத்தத் தில் பாவம், கார்கள் பழிவாங்கப்படுகின்றன. வீரமணியை திருவாரூர் தங்கராசு தரக்குறைவாகப் பேசினார் என்று மறுநாளே அவரது வீட்டில் இருந்த கார் தாக்கப்பட்டது. அதற்குப் பதிலடியாக வீரமணி வீட்டில் இருந்த காரை இன்னொரு பிரிவினர் தாக்கியதாகக் காவல் துறை கூறுகிறது.

இரண்டு பேருமே ஆகிற காரியங் களைப் பார்க்கலாம்!

பூகம்பம் அறிய...

நோட்டீஸ் போர்டு!

நிலநடுக்கத்தை முன் கூட்டியே உணர முடியும் என்று சொல்லி, அதற்கான கண்டுபிடிப்பைச் செய்திருக் கிறார் தமிழக மின் வாரிய ஊழியரான நீலகண்டன்.

ஒரு கட்டடத்தின் அஸ்திவாரம் தோண்டப்படும்போதே, இவர் கண்டுபிடித்திருக்கும் கருவியைவைத்துக் கட்ட வேண்டுமாம். நிலநடுக்கம் ஏற்படும்போது, அந்தக் கருவி அத்தனை அசைவையும் தாங்கி அது அதிருமே தவிர, கட்டடத்துக்கு எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்தாது என்கிறார் நீலகண்டன். இவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குத் தனது கண்டுபிடிப்புபற்றி எழுதினாராம். பதில் இல்லை. முதல்வர் கருணாநிதிக்கும் எழுதியிருக்கிறார். இது வரை பதில் இல்லை. தன்னுடைய புவியியல் அறிவை மூலதனமாகக்கொண்டு இவர் செய்திருக்கும் கண்டுபிடிப்பை இந்தத் துறை சார்ந்த அறிஞர்களின் பரிசீலனைக்காவது அரசு முன் வைக்கலாமே!

சோ சொன்ன காரணம்!

நோட்டீஸ் போர்டு!

எழுத்தாளர் பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும், பத்திரிகையாளர் சோ வந்து சந்தித்து அவருக்கு ஆறுதல் சொன்னார். இதை மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இரா.செழியனிடம் சொன்னபோது, "நீங்க கல்லடி வாங்கறதுக்குக் காரணமே சோ தானே. அவர்தானே வந்து உங்களைப் பார்க்கணும்" என்றாராம். துக்ளக்கில் கருப்பையா தொடர்ந்து தி.மு.க-வை விமர்சித்து எழுதி வருவதைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார் செழியன்.

இந்தத் தகவல் சோ கவனத்துக்குப் போனது. "அவரு எழுதுறாரு... டைப் பண்றவரு டைப் பண்றாரு. இதுக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்?" என்று கிண்டல் அடித்தாராம் சோ!

பழைய கம்பீரத்தில் புதிய மேலவை!

நோட்டீஸ் போர்டு!

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், பழைய சட்டசபைக்குள் இருந்த ஆசனங்களை என்ன செய்யலாம் என்று யோசித்த முதல்வர் கருணாநிதி, புதிதாக அமைக்க இருக்கும் மேலவையில் அதைப் பொறுத்திவிடலாம் என்று கூறிவிட்டாராம். 'பாரம்பர்யம் மிக்க இந்த நாற்காலிகளைப் புதிய மேலவையில் போட்டால் கம்பீரமாக இருக்கும்' என்பது அவர் எண்ணம்!

திலகவதி ஐ.பி.எஸ்.,

நோட்டீஸ் போர்டு!

தமிழகக் காவல் துறை டி.ஜி.பி ஆகி இருக்கிறார் திலகவதி. இந்தப் பொறுப்புக்கு வரும் முதல் தமிழ்ப் பெண் இவர்!

"இன்றும் பெண் சிசுக் கொலைகளில் முன்னணியில் இருக்கிற, கல்வி அறிவில் பின் தங்கியிருக்கும் தர்மபுரி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள கிராமத்தின் அடிமட்டக் குடும்பத்தில் பிறந்தேன். ஐ.பி.எஸ். தேர்வானேன். என்ன விதமான பணிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அவற்றைச் சாத்தியப்படுத்த முடியாத நிலையில் என் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த உயரத்தை அடைய நான் நிறைய தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தன. என்ன அந்தத் தடைகள் என்று கேட்டால், ப்ளீஸ்... அவை எல்லாம் 'ஆஃப் தி ரெக்கார்ட்' " என்கிறார் திலகவதி!

 

இதைப் படிக்காதீங்க!

மார்க் நடிகை வாங்கிய பணத்தைத் திருப்பித் தரச் சொல்லி, ஒரு தயாரிப்பாளர் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆட்சி மேலிடம் வரை விஷயம் போனதாம். அமைதியாகிவிட்டார் தயாரிப்பாளர்!

'100 இடங்களைக் கேட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்' என்று கதர்க் கட்சியின் டெல்லி மேலிடம் முடிவு எடுத்துள்ளதைக்கேள்விப் பட்டுக் கொதிப்பில் இருக்கிறாராம் தலைவர்!

அண்ணன் அமெரிக்கா சென்றபோது, அவர் தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளர் சர்ச்சைக்கு உரியவராக இருந்ததால், அங்கே இருந்து வேறு விடுதிக்கு மாறச் சொன்னார்களாம். மீறி, அங்கேயே அவர் தங்கியிருந்ததற்கு விளக்கம் கேட்டிருக்கிறதாம் மத்திய உள் துறை!

'உன்னாலதான் எனக்கு இந்தக் கெட்ட பெயர்' என்று சாராய ஆலையை முன்வைத்து சின்னம்மாவுடன் பாய்ந்தாராம் அம்மா. இருவருக்கும் சில நாட்களாக லடாய்!

நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!