Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

முறிமருந்து எஸ்.செந்தில்குமார்
பதிப்பகம்: தோழமை வெளியீடு, 5டி, , பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர், சென்னை-78. பக்கம்: 384 விலை: ரூ.250

விகடன் வரவேற்பறை

கிராமங்கள் என்றாலே வெள்ளந்தி மனிதர்கள், ஓடோடி வந்து உதவுபவர்கள், அன்பான எளிய மக்கள் என்பதாக பல பத்தாண்டுகளாக உருவாகி நிலைபெற்றிருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறது 'முறிமருந்து' நாவல். நவீன வாழ்க்கையில் நகரம், கிராமம் இரண்டின் மனித மனங்களும் குரோதமும், வன்மமும் நிறைந்ததாய் மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாய் சுயநலத்தின் திரண்ட வடிவமாக மாறிவிட்ட இன்றைய உறவுக்கூடு எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதையும், உறவுகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் வாழவிடாமல் ஊரைவிட்டே துரத்தி அடிப்பதையும் அழுத்திச் சொல்கிற கதை. கிராமத்தின் காதல், காமம் பற்றிய வர்ணனைகளும், உரையாடல்களும் வெளிப்படையும், ரசனையுமானவை. நான்கு பாகங்களாக விரியும் நாவலில் வாசிப்பு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவு என்பதைத் தாண்டி பேசுபொருள் முக்கியமானது!

அரிது அரிது இசை: தமன்.எஸ்
வெளியீடு: 5 ஸ்டார் ஆடியோ விலை ரூ.50

விகடன் வரவேற்பறை

சமீபத்தில் இத்தனை ஆங்கில வார்த்தைகளோடு எந்தத் தமிழ் பட இசை ஆல்பமும் வந்தது இல்லை. இரண்டு பாடல்களைத் தவிர, பிற அத்தனையிலும் ஆங்கிலமே ஆளுமை செலுத்துகிறது. 'ஊ... லலா..லி' பாடலில் 'நடிக்காதடா.. பிடிக்காதுடா', 'சிரிக்காதடா.. வேணான்டா' என்று ஒற்றைச் சொல் பெண் குரல் அதட்டல்கள் சுவாரஸ்யம். தமிங்கிலீஷ் எஸ்.எம்.எஸ் பாணியில் பாடல் நெடுக கருத்துச் சொல்லி செல்கிறது 'தினம் ஒரு முறை' பாடல். மென்தென்றல் மெலடியாக காது மடல் வருடுகிறது 'மிஸ்ஸிங் சம்திங்' பாடல். போர் வலி சொல்லும் வரிகள் நிரம்பிய 'உன் உயிரைக் கொல்லும் உரிமை' பாடலில் ஆதங்க- ஆறுதல் தொனி சரிவிகிதக் கலவை!

நண்பா இயக்கம்: வி.ரோஹின்

விகடன் வரவேற்பறை

'யார் முதல் ரேங்க் வாங்குவது?' என்கிற ஈகோவோடு மோதும் இரண்டு பள்ளி மாணவர்களைப் பற்றிய குறும்படம். சதா சாப்பிட்டு கிரிக்கெட் விளையாடும் ஒருவன், விழுந்து விழுந்து படிக்கும் இன்னொருவன் என இரண்டு கேரக்டர்களும் வசீகரிக்கிறது. விளையாட்டு பீரியடில் ரகசியமாக படிப்பது, சாமியிடம் அப்ளிகேஷன் போடுவது என சிறுவர்களின் உலகத்தை ஜாலியாக, நுணுக்கமாக சித்திரித்திருக்கிறார்கள். சாமி யாருக்கு கை கொடுத்தது என்பதும், அதற்கான காரணமும் அழகு. ஜாலியான படைப்பு!

கலர் காதல்! new.colourlovers.com

விகடன் வரவேற்பறை

கலர்ஃபுல் வெப்சைட் இது. நிறங்களின் பெயர்கள், அவற்றின் குண நலன்கள் ஆகியவை ஆரம்ப கட்ட குறிப்புகள். உங்கள் உடம்புக்கு, உயரத்துக்கு ஏற்ற மாதிரி எந்தக் கலரில் உடைகள் உடுத்த வேண்டும், திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு எந்த கலரில் உடை உடுத்தக் கூடாது என்றெல்லாம் விளக்குகிறார்கள். கலர் ஃபேஷன், கலர் சைக்காலஜி குறித்த விளக்கங்களும் உண்டு!

சட்டம் நம் கையில் new.lawforums.blogspot.com

விகடன் வரவேற்பறை

சாமானிய மக்களை அதட்டி மிரட்டும் சட்டத்தின் நுணுக்கங்களை தோளில் கைபோட்டு தோழமையோடு சட்டம்பற்றி சொல்லித்தரும் வலைப்பூ. 'லீகல் நோட்டீஸ் என்றாலே வழக்கறிஞர்கள் மூலமாக அனுப்பப்படுவதுதான் என்று நினைப்பது தவறு' என்று சொல்லும் ஒரு பதிவு, நுகர்வோர் பாது காப்புச்சட்டம் என்றால் என்ன, நுகர்வோர் நீதி மன்றங்களின் அமைப்பும் செயல்பாடுகள், கல்விக் கடன், பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதில் உள்ள சிக்கல்கள் எனச் சராசரி மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு சட்டரீதியான தீர்வுகள் சொல்லும் வலைப்பூ!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை