ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

''லஞ்சம் - ஊழல் என்ன வித்தியாசம்?''

''500 ரூபாய் என்றால் லஞ்சம். 500 கோடி என்றால் ஊழல். இன்னொரு முக்கியமான வித்தியாசம்... லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கி இந்தியன் தாத்தா வரை டார்கெட் என்னவோ 500 ரூபாய் லஞ்சப் பார்ட்டிகள்தான்!''

- இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.


''விலைவாசி உயர்வைக் குறைக்க என்ன செய்யலாம்?''

''விலைவாசித் துறை என்று ஒரு துறையை உருவாக்கி, அதற்கு ஆற்காடு வீராசாமியை அமைச்சர் ஆக்கினால் போதும்!''

- சு.ஸ்ரீநாத், சென்னை-61.


''ஏன் ஒரு எழுத்தாளரின் படைப்புக்களைச் சக படைப் பாளிகள் ஒப்புக்கொள்வது இல்லை?''

''பிரான்ஸைச் சேர்ந்த எழுத்தாளர் ஆண்ரே ழீட் தனது படைப்புகள் குறித்து ஒருமுறை கூறினார், 'பல லட்சம் பேர்களில் சில ஆயிரம் பேர்கள் ழீட் எழுதியதில் சில நூல்களையாவது படித்திருப்பார்கள். இந்த சில ஆயிரம் பேர்களில் சில நூறு ஆசாமிகளாவது ழீட் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பார்கள். அந்த சில நூறு ஆசாமிகளில் ஒருவர் நிச்சயமாக ழீட் சொல்வது சரி என்று எண்ணுவார். அந்த ஒருவர்... ழீட்தான்!'

வாசகர்களே இப்படி என்றால் சக எழுத்தாளர்கள்?''

- பிரியதர்ஷன், சேலம்.


'' 'அந்தக் கால சினிமா மாதிரி இப்ப இல்லை' என்கிற புலம்பல்கள் எப்போதும் இருக்கின்றனவே?''

''அது தவிர்க்க முடியாது. டி.ஆர்.மகாலிங்கத்தின் ரசிகர்கள், எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ரஜினியை. இப்படி யோசித்துப் பாருங்கள். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலை இப்போது ரீ-மிக்ஸ் செய்ய முடியும். ஆனால், தியாகராஜ பாகவதர் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?''

- கி.கண்ணகி, தஞ்சாவூர்.


'' 'மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்' என்பதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?''

''திருமாவளவனைக் கேட்டுச் சொல்கிறேனே!''

- பிரியம்வதா, மதுரை-4.


''தமிழக எம்.பி-க்கள் ராஜபக்ஷேவின் விருந்தில் கலந்துகொண்டார்களாமே?''

''எங்காவது தமிழனின் எலும்புகள் தென் பட்டனவாமா?''

- கே.பாஸ்கரன், தாளந்திருவாசல்.

எழுதலாம் எல்லோரும்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!