ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சூர்யாவின் நாயகிகளிலேயே அனுஷ்காதான் அதிக உயரம் (5 அடி 10 அங்குலம்). அவரைவிட 4 இஞ்ச் உயரம் குறைவான சூர்யாவை, அனுஷ்காவின் உயரத்துக்கு மேட்ச் செய்யப் பல டிரிக்குகளைக் கையாண்டு வருகிறது 'சிங்கம்' யூனிட். பெண் சிங்கம்!

இன்பாக்ஸ்

இரவில் ரெக்கார்டிங்கின்போது சகாக்கள் யாரும் தூங்கிவிட்டால், தன் கைப்பட கிரீன் டீ தயார்செய்து தருவது ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கம். இத்ற்காகவே ஃபாரீன் டூர் போகும்போது விதவிதமான ருசிகளில் டீ பாக்கெட்டுகளை வாங்கி வருவாராம். ஸ்ட்ரோம் இன் எ டீ கப்!

இன்பாக்ஸ்

'மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் யாருக்கு?' என்ற சர்ச்சை முடிந்தது. தன் அம்மா கேத்தரீனுக்குதான் எஸ்டேட் உரிமை என்று உயில் எழுதியிருக்கிறார். 79 வயதாகும் கேத்தரீனுக்குப் பிறகு, எஸ்டேட் ஜாக்சனின் குழந்தைகளுக்குப் போகும். அம்மான்னா சும்மா இல்லடா!

இன்பாக்ஸ்

விஜய் யேசுதாஸின் பெண் குழந்தை அமய்யாவின் பிறந்த நாளுக்குக் குடும்பத்துடன் வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். தலைவருக்குக் குழந்தை மனசு!

விதவிதமான கார்களை வாங்குவதுதான் கோலிவுட்டில் இப்போது ஃபேஷன். லேட்டஸ்ட்டாக சினேகா தன் பிறந்த நாளன்று 50 லட்ச ரூபாய்க்கு ஆடி ஏ 6 காரை வாங்கி இருக்கிறார். சினேகா சிரிப்பே காஸ்ட்லிதான்!

இன்பாக்ஸ்

பிரபல ஹாலிவுட் பாடகி கம் நடிகை மிலி சைரஸ் தன் டிவிட்டர் அக்கவுன்ட்டை டெலிட் செய்துவிட்டார். 'கம்ப்யூட்டர் முன் அமர்ந்ததும் என் கன்ட்ரோல் இல்லாமலேயே, என் அந்தரங்க வாழ்க்கைபற்றிச் சொல்லிவிடுகிறேன். அதனால்தான்...' என்று காரணம் சொல்கிறார். மிலி மனசு கிளி மாதிரிப்பா!

இன்பாக்ஸ்

தீபாவளி ரிலீஸ் ஹிந்திப் படங்களில் அதிக எதிர்பார்ப்பைத் தூண்டியிருப்பது 'ப்ளு'. கடலுக்கு அடியில் இருக்கும் புதையலைத் தேடிப் போகும் மூன்று நண்பர்களின் கதை. அக்ஷய்குமார், சஞ்சய் தத், சயீத்கான் ஆகியோர் இருந்தாலும், லாரா தத்தாவும், கேத்தரீனா கைஃப்பும்தான் பேசப்படுகின்றனர். ம்... பசங்களை யாருதான் கண்டுக்குறா?!

சென்னையை மறந்துவிட்டு மும்பை பறந் தாலும், சென்னையில் உள்ள ஐந்து பள்ளி மாணவிகளைத் தத்தெடுத்து, அவர்களது கல்விக்கான செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளாராம் அசின். கல்பனாவை நம்பினோர் கைவிடப்படார்!

சிம்பு தனது 25-வது படத்தை, தானே இயக்குகிறார். பிரியங்கா சோப்ராவிடமும் தீபிகா படுகோனிடமும் பேசி இருக்கிறாராம். இது வாலிப வயசு!

இன்பாக்ஸ்

அடுத்து ஒரு சரித்திரப் படம் பண்ணுகிறார் அமிதாப். மௌரியப் பேரரசர் அசோகராக நடிக்கப் போகிறாராம் தலைவர். மனைவியாக தபு. ஆறடி அசோகர்!

இன்பாக்ஸ்

இவ்வளவு காலம் அமுல் பேபியாக வளையவந்த ப்ரீத்தி ஜிந்தாவை 'மெய்ன் அவுர் மிஸஸ் கன்னா' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைத்திருக்கிறார்கள். 'அயிட்டம் கேர்ள்' அளவுக்கு ஆடியிருக்கிறாராம். ஃப்ரீத்தி ஜிந்தாபாத்!

இன்பாக்ஸ்

'திறமையை வெளிப்படுத்தும் கதைகளில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால், இதுவரை யாருமே நான் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை' என்று புலம்புகிறார் இலியானா. இடுப்பைப் பார்த்தீங்களே... நடிப்பைப் பார்த்தீங்களா?

சத்தம் போடாமல் அடுத்த பட ஷூட்டிங்குக்காக விக்ரம், ஸ்வாதியைக் கூட்டிக்கொண்டு லடாக் பறந்துவிட்டார் இயக்குநர் செல்வராகவன். 25 நாட்கள் முதல்கட்ட ஷெட்யூல் முடிந்த பிறகுதான் படம் பற்றிய அறிவிப்பே வருமாம். படத்தில் இரண்டாவது ஹீரோயினும் உண்டு. வேறு யார்.. நம்ம ஆன்ட்ரியாதான். ஆயிரத்தில் ஒருவனைக் கண்ணுல காட்டுங்கப்பா!

திகில், ஆக்ஷன் படங்களின் மன்னன் ராம்கோபால் வர்மா 'ஈரம்' படம் பார்த்து அசந்துவிட்டாராம். விரைவில் ஈரத்தை வர்மா ஹிந்தியில் ரீ-மேக்கலாம். காரம் இப்போ ஈரம் ஆச்சு!

இன்பாக்ஸ்

பாலிவுட் கோரியோகிராஃபர் சிமி குப்தாவுக்கு இங்கிலாந்து அரசியிடம் இருந்து அழைப்பு. பக்கிங்ஹாம் அரண்மனையில் பாங்க்ரா டான்ஸ் ஆட வேண்டுமாம். ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இங்கிலாந்துக்குச் செல்வதை ஒட்டி இந்த ஏற்பாடு. கெத்தா ஆடு குப்தா!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்