''நாங்கள் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். திடீர் பிரபலம் ஆகும்போது எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்குத் தெரியாது!''
- நோபல் பரிசு விஞ்ஞானி ராமகிருஷ்ணன்
''ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது!''
- ஜெயலலிதா
''மேற்கு வங்கத்தைவிட்டு புத்ததேவ் வெளியேறும்போதுஎல்லாம் வன்முறை நடக்கிறது. இதற்காக அவரைக் கைது செய்ய வேண்டும்!''
- மம்தா பானர்ஜி
''இலங்கைத் தமிழர் பிரச்னை ஏதோ தி.மு.க - காங்கிரஸ் கட்சிகள் மட்டும் சம்பந்தப்பட்டது போல நடந்துகொள்கின்றனர். இலங்கை சென்ற எம்.பி-க்கள் குழுவை யார் நியமித்தார்கள்?''
- வெங்கையா நாயுடு
''ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்துக்கு, என் பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!''