ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி

'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி

'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது!
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி

''டாஸ்மாக் மேட்டர்ல கலைஞர் சார் பாஸ் மார்க்னு அவரோட எதிரிங்ககூட ஏத்துப்பாங்க!

அதுவும் இந்தத் தீபாவளிக்குத் தீர்த்தம் சேல்ஸ் ஆனதைப் பார்த்தா, எனக்கே கிர்ருங்குது. முந்தின நாளும் தீபாவளி அன்னிக்கும் சேர்த்துக் கணக்குப் பார்த்தா, 200 கோடி ரூபா சேர்ந்திருக்கு, டாஸ்மாக் கல்லாவுல.

விழா எடுப்போம்ல!''

ஜெகத்ரட்சகன்: ''சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே சக்கர வியூகம் அமைப்பவனே! டாஸ்மாக் விற்பனையிலும் பாஸ் மார்க் வாங்குபவனே! கல்லக்குடி நாயகனே... இன்று உன் சாதனை மூலம் நீ 'கள்'ளக்குடி நாயகன்ஆனாய்! ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு வள்ளுவர் கோட்டம் வாருங்கள்... காது வலிக்க வலிக்கக் கவிதைகள் பாடக் கவிஞர்கள் தயார். அன்று விற்பனை இன்னும் கூடும் உஷார்!''

வைரமுத்து:

''காவிரி நதி பாய்ந்த தீரத்தில் குடிநீருக்குத்தான் கட்டுப்பாடே தவிர, குடிமகன்களுக்கு இல்லை தட்டுப்பாடு. துவரம் பருப்புக்குத்தான் தட்டுப்பாடே தவிர, வறுத்த கடலைக்கு இல்லை கட்டுப்பாடு. செவிக்கு உணவில்லாதபோது இனி இதுவே ஈயப்படும். ஆங்... அன்றே எழுதிவிட்டேன். 'சரக்கு வெச்சிருக்கேன். இறக்கி வெச்சிருக்கேன். வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வெச்சிருக்கேன்!' ''

சோனியா காந்தி: ''மை கிரேட் ஃபாதர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் அனுபவத்துக்குக் கிடைத்த வெற்றி இது. ஐக்கிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணிக்கே கிடைத்த வெற்றி. தமிழகத்தில் ஆட்சியில்தான் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு தரவில்லை. அட்லீஸ்ட், இந்த வெற்றியிலாவது பங்கு கொடுக்க வேண்டும்!''

விஜயகாந்த்: ''இதெல்லாம் ஒரு சாதனையாங்க? இந்தக் கருணாநிதி 200 கோடிக்குச் சரக்கு வித்ததைச் சாதனையாச் சொல்லிக்கிடுறார். இன்னும் நிறையப் பண்ணலாம். ஆனா, அவரால முடியலை. எனக்கென்னவோ வழக்கம் போல கலைஞர் இதுலேயும் பொய்க் கணக்கு காட்டறார்னுதான் தோணுது. என்கிட்ட ஆட்சியைக் குடுத்துப் பாருங்க. ரேஷன் கடைக்குள்ளேயே டாஸ்மாக்கைக் கொண்டுவந்துடுவேன். ரேஷன் சாமானை வீட்டுக்குக் கொடுத்தனுப்பும்போது சரக்கும் வந்துடும். சந்தோஷம்தானே?!''

சாலமன் பாப்பையா: ''பிராந்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆஃப் பாயிலா, ஆம்லெட்டா?''ன்னு ஒரு பட்டிமன்றம் நடத்தினா, பாட்டிலெல்லாம் பத்திக்குமய்யா! அடுத்த ஊர்ல விஸ்கிக்கு ஏற்றது பூண்டு ஊறுகாயா? கொய்யாப் பழமான்னு வைங்க! சரக்கு தீர்ற வரைக்கும் தலைப்பும் தீராதுய்யா!''

ராமதாஸ்: ''நான் இப்ப கலைஞருக்கு ஆதரவாக் கருத்து சொல்லணுமா, எதிராக் கருத்து சொல்லணுமான்னு முதல்ல நல்லா யோசிச்சுக்கிறேன். ஆங்... இப்பத் தெளிவா ஆகிட்டேன். அரசை நான் இப்ப ஆதரிச்சா கணும். 'மது உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு'ன்னு எழுதியிருக்கிறதை அழிச்சுட்டு, 'மது அரசுக்கும், அரசியல்வாதிக்கும், ஆட்சியாளர் களுக்கும், நல்லது'ன்னு எழுதிப் போடுங்க!''

'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி
'சுர்'ருங்குது... 'கிர்'ருங்குது... 'விர்'ருங்குது! - ஜாலிவாலி