ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

கு.ப.ரா. கதைகள் பதிப்பு: அ.சதீஷ்
வெளியீடு: அடையாளம். 1205/1 கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் - 621310. பக்கம்: 696 விலை ரூ.450

விகடன் வரவேற்பறை

தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்தவர்களில் கு.ப.ராஜ கோபாலனை யாரும் புறம் தள்ள முடியாது. பெரும்பாலும் அகம் சார்ந்த உணர்வுகளையே எழுதியவர். இதில் கு.ப.ரா-வின் 100 சிறுகதைகளுடன் ஒரு முற்றுப்பெறாத நாவலும் தொகுக்கப்பட்டுள்ளது. படைப்பிலக்கிய முன்னோடியான கு.ப.ரா-வின் படைப்புக்கள் ஆய்வுப்பதிப்பாக வெளிவருவது தமிழுக்கு நல்லது. இதற்காக உழைத்த சதீஷ் பாராட்டப்பட வேண்டியவர். பாதுகாக்க வேண்டிய ஆவணப் பதிப்பு!


மகன் இயக்கம்: எஸ்.பகுருதீன்
30, சலாகுதீன் அயூப் தெரு, வெளிப்பட்டினம், ராமநாதபுரம்.
விகடன் வரவேற்பறை

ஒன்றுக்கும் உதவாத மகன், தந்தையின் இழப்புக்குப் பிறகு தன் குடும்பத்துக்குப் பொறுப்பு ஏற்கிறான். ஒருவனைப் பக்குவப்படுத்துகிற மாற்றங்களை இயல்பாகச் சொல்லிச் செல்கிறது கதை. 20 நிமிடங்களில் பார்ப்பவரின் மனதில் மெல்லிய கனத்தை ஏற்றிவிடப் பார்க்கிறார் இயக்குநர் பகுருதீன். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து ஒரு நம்பிக்கைக் கீற்று. வரவேற்போம்!


தமிழன் தொலைக்காட்சி
new.,tamilantelevision.blogspot.com
விகடன் வரவேற்பறை

தமிழன் தொலைக்காட்சியின் வலைப்பூ. உடனடிச் செய்திகள் விரைந்து வலையேற்றப்படுவதால் உடனடியாகச் சமீபத்திய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், செய்திகளுக்கான வீடியோவும் இணைக்கப்பட்டு இருப்பதால் தொலைக்காட்சியில் செய்தி பார்த்த அனுபவம் கிடைக்கிறது. பழைய செய்திகளைப் படிப்பதற்கு வசதியாக அட்டவணைப் படுத்திவைத்திருக்கிறார்கள். இந்த வலைப்பூவில் பதிவுசெய்துகொண்டால், உங்கள் மின்னஞ்சலுக்கு தமிழன் தொலைக்காட்சி செய்திகளை அனுப்பிவைக்கும்!


ரேனிகுண்டா இசை: கணேஷ் ராகவேந்திரா
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை: ரூ.99
விகடன் வரவேற்பறை

புதிய இசை அமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் இசையில் மெல்லிசையாய் வழிகிறது ரேனிகுண்டாவின் பாடல்கள். யுகபாரதியின் 'மழைபெய்யும்' பாடல் மெல்லிய சாறலாய் நனைக்கிறது. 'மாட்டுத்தாவணி மெரண்டு போகுதே' என்று நா.முத்துக்குமாரிடம் இருந்து ஒரு குத்துப்பாடல். அந்தப் பாடலுக்கு சிம்புவின் குரல் கூடுதல் துள்ளல். 'கண்ணே கண்மணியே' பாடலில் தலை கோதும் தோழியின் விரல்களாக வருடுகிறது ஸ்ரேயா கோஷலின் குரல். 'வாழ்க்கை யாரிடமும்' பாடலில் அப்பாவை நினைவுபடுத்துகிறார் விஜய் யேசுதாஸ். 'விழிகளிலே' பாடலில் வாழ்வையும் காதலையும் இசையால் கொண்டாடியிருக்கிறார்கள். பிறைசூடனின் 'கந்தர்வனின் கோட்டை' பாடல் காம உற்சவம்!


விளையாடுகளம்!
http://new.learninggamesforkids.com

விகடன் வரவேற்பறை

உங்கள் குழந்தை தீராத விளையாட்டுப் பிள்ளையா? இந்த வெப்சைட் உங்கள் குழந்தைக்கு பெஸ்ட் சாய்ஸ். விளையாட்டு மூலம் கல்வி என்பதுதான் வெப்சைட்டின் ஐடியா. கார்ட்டூன் மூலம் வாய்ப்பாடு சொல்லித் தருவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஜாலி கிளாஸ். ஞாபக சக்தி, உடல்நலம், கணிதம், அறிவியல், பொதுஅறிவு எனப் பல விஷயங்களை சிம்பிள் விளையாட்டுகளாக அறிமுகப்படுத்துகிறார்கள். தவிர, கல்வி சம்பந்தமான அனிமேஷன் வீடியோக்கள், சுற்றுச்சூழல் குறித்த பாடல்களும் உண்டு. குழந்தைகளுக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டிய வெப்சைட் இது!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை