ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்

''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்

''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
ப.திருமாவேலன், படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!''
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்

கொத்தடிமைகள் மீட்பு, காவல் நிலைய மரணங்கள் கண்டுபிடிப்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழகத்தில் ஆக்ரோஷக் குரல் கொடுத்து வரும் 'எவிடென்ஸ்' அமைப்பாளர் கதிர். இவர் தாக்கல் செய்துள்ள பல வழக்குகளில் போலீஸ் முழி பிதுங்கி நிற்கிறது. தென் மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த இளைஞர், இன்றைய நிலையில் குறிப்பிடத்தக்க மனித உரிமைப் போராளி!
'' 'எவ்விதம் உங்களை நடத்தினால் நீங்கள் துன்பப்படுவீர்களோ, அவ்விதம் மற்றவர்களை நீங்கள் நடத்தாதீர்கள்' என்கிறது மகாபாரதம். 'நீங்கள் வெறுப்பதை உங்களது அண்டை வீட்டுக்கு நீங்கள் செய்யாதீர்கள்' என்கிறது யூத வேதம். 'மனித உரிமைகளைப் புறக்கணிப்பதும் அவமதிப்பதும் காட்டுமிராண்டிச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன. இச்செயல்கள் மனித குலத்தின் மனச்சாட்சியையே அவமதித்துவிட்டன' என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அறிக்கையின் முதல் பக்கம்.

வேதம் சொன்னதையும் மதிக்காமல், சட்டம் சொல்வதையும் கேட்காமல், எதை இந்தச் சமூகம் நித்தமும் காலில் போட்டு மிதிக்கிறதோ, அதுதான் மனித உரிமை. சட்டம் கையில் இருப்பதால் திருடனைக்கூட அடித்துக் கொல்ல அதிகாரம் தரப்படவில்லை. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதால், மாற்றுக் கருத்தே வரவிடாமல் கருத்துரிமையை அடக்க அனுமதி தரப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்பு. நான்கு முறை முதல்வர், பண பலமும் அதிகார பலமும்கொண்ட முன்னாள் முதலமைச்சரைக்கூட அடித்துத் தூக்கிச் செல்ல முடியும். ஆனால், கொலை வழக்கில் கைதான ஒரு சாமியாரைத் தொட்டுக் கூட்டிச் செல்ல முடியுமா? மனிதனுக்கு மனிதம் மாறுகிறதே சட்டமும் நீதியும். இந்தக் கேள்விகளில் பிறந்ததுதான் என்னுடைய பயணம். உலகத்தின் முதல் மனித உரிமைப் போராளியான இயேசு, 'நீதியின் பால் பசித் தாகம் உள்ளோர் பேறு பெற்றோர்' என்றார். இன்று சில ஒழுங்குகளாவது மிச்சம் இருக்க அவர்களே காரணம்.

காட்டுமன்னார்குடிக்குப் பக்கத்தில் சிறு கிராமத்தில் பிறந்த நான், 13 வயதில் கானூர் என்ற கிராமத்தில் ஒரு பஞ்சாயத்தைப் பார்த்தேன். தலித் பெண் ஒருத்தியை ஒருவன் கற்பழித்துவிட்டதற்கான விசாரணை அது. முதலில் மறுத்தான் அவன். பிறகு ஒப்புக்கொண்டான். கடைசியாக அவனுக்குத் தண்டனை கொடுத்தார்கள். 'சரி சரி... போப்பா... அந்தப் பொண்ணுக்கு 80 ரூபா குடுத்திரு' என்ற தீர்ப்புடன் கலைந்தது பஞ்சாயத்து. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்குள் நுழையும்போதுதான் இந்தச் சம்பவத்தின் கொடூரம் என் மனதைத் தைத்தது. அந்தப் பெண்ணைக் கற்பழித்தவன் ஒரு தனிமனிதன் அல்ல... அந்தப் பஞ்சாயத்து... இந்தச் சமூகம் என்று உணர்ந்தேன். தீண்டாமை போன்ற விவரங்கள் தெரிய ஆரம்பித்தபோதுதான் எனக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகமானது. கல்லூரிப் படிப்பும் முடித்தேன்.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்க நிறுவனமான ஃபயர் லைட்ஸ் மீடியா தேடிக்கொண்டு இருந்தது. ஆசியக் கண்டத்தில் இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். ஐந்து கண்டங்களில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பல்கேரியாவில் இருந்து வந்த யுவான் என்ற ஜிப்சி தனது கதையைச் சொல்லும்போது அனைவரும் அழுதோம். அவன் ஒருநாள் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தான். ஒருவரின் பர்ஸ் திருடுபோய்விட்டது. அப்போது எல்லாருமே இவன்தான் திருடியிருப்பான் என்று நினைத்து, இவனையே பார்த்தார்களாம். அந்த அரை மணி நேர பஸ் பயணத்தை மிகக் கொடூரமான நரகம் என்று வர்ணித்தவன், தான் இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னதாகவே இறங்கி ஓடினானாம். கொஞ்சம் அசிங்கமாக, கறுப்பாக இருந்தாலே அவன் திருடனாகத்தான் இருப்பான் என்று நினைக்கக்கூடிய மனோபாவம் இன்றும் இருப்பதுதானே. அதில் இருந்துதான் மனித உரிமை இயக்கத்துக்காக என்னை நான் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். டர்பனில் நடந்த மாநாட்டுக்கு என்னை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். 'இந்தியாவில் எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், அதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை' என்றார்கள். இதை மனதில்வைத்துதான் 'எவிடென்ஸ்' ஆரம்பித்தேன். அந்த உற்சாகத்துடன் மதுரை வந்தேன்.

''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்

மக்கள் கண்காணிப்பகத்தில் சில காலம் இணைந்து பணியாற்றினேன். ஒருநாள் தற்செயலாக மாலைப் பத்திரிகையில் ஒரு செய்தி. காவல் நிலையத்தில் ஒருவர் இறந்துபோனதாகவும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினரே எழுதிக்கொடுத்து விட்டார்கள் என்றும் செய்தி. அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கிற அந்தக் கிராமத்துக்குப் போனேன். பிணத்தை அடக்கம் செய்வதற்காகக் குழி தோண்டிக்கொண்டு இருந்தார்கள். 'போஸ்ட்மார்ட்டம் பண்ணாமல் பிணத்தை அடக்கம் பண்ணக் கூடாது' என்று எவ்வ ளவோ சொல்லியும் ஊர்க்காரர்கள் கேட்கவில்லை. 'இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது' என்றேன். 'அவரே செத்துட் டார். அப்புறம் என்ன?' என்று எனக்குச் சமாதானம் சொன்னார்கள் அந்த அப்பாவிகள். அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. அந்தக் குழிக்குள் நானே போய் உட்கார்ந்துகொண்டேன். அதற்குப் பிறகுதான் நான் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருப்பதாக நினைத்தார்கள். அவர்களிடம் கையெழுத்து வாங்கி போலீஸ், ஆர்.டி.ஓ-வுக்குத் தகவல் சொல்லி, என நள்ளிரவுஆனது. இரவு 12 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யவைத்து அது இயற்கை மரணம் அல்ல என்று நிரூபித்தோம்.

பள்ளிப்பாளையத்தில் 58 குடும்பங்கள் கொத்தடிமையாக இருந்தன. கிழிந்த லுங்கி, சட்டையுடன் மூன்று நாட்கள் அவர்களுடன் தங்கி வாக்குமூலங்கள் வாங்கி கலெக்டரிடம் கொடுத்தேன். அவர் ஆர்.டிஓ-வுடன் என்னையும் அந்த இடத்துக்கு அனுப்பிவைத்தார். விசைத்தறி வைத்திருப்பவர்கள் 400 பேர் கூடி எங்களை வளைத்துவிட்டார்கள். ஆர்.டி.ஒ-வைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். என்னை அடித்து, சட்டையைக் கிழித்து பிரச்னை அதிகமானது. ஒருவன் பெட்ரோல் கேனைத் தூக்கிக் கொண்டுவந்து என் மீது ஊற்ற முயற்சிக்கும்போது போலீஸ் வந்துவிட்டது. அன்று கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தால், அதிகபட்ச விபரீதத்தை அன்றே சந்தித்திருப்பேன். உணர்ச்சியும் உயிரோட்ட முமான இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்தச் சில ஆண்டுகளிலேயே 800-க்கும் மேற்பட்ட மனித உரிமைப் பிரச்னைகளில் நான் நேரடியாகத் தலையிட்டு இருக்கிறேன். 350 தலித் மரணங்களின் உண்மைக் காரணங்களை உலகுக்குச் சொல்லப் போராடி வருகிறேன்.

''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்

'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்' என்று பெரிய மனிதர்கள் சொல்வார்கள். அப்படி இருக்க முடியாது என்று சொல்பவர்களே மனித உரிமைப் போராளிகள். இரண்டாம் உலகப் போர்க் கொடுமைகள் நடந்து முடிந்ததும், 'கடந்த காலப் பயங்கரங்களை மூடி மறைத்துத் திரை போட்டுக்கொள்ள வேண்டும்' என்று சர்ச்சில் சொன்னபோது, அமெரிக்கத் தத்துவவாதி ஜார்ஜ் சான்டாயனா சொன்னான், 'பழையதை மறப்பவர்கள் அதை மீண்டும் செய்யக்கூடியவர்கள்' என்று. எந்த அநியாயம் நடந்தாலும் அதற்குப் பரிகாரம் காண வேண்டும். அதில் மிக முக்கியமானது மனிதனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது. கொடுங்கோன்மை மனப்பான்மையும் ஒருவரை ஒருவர் அடக்கியாளும் போக்கும் மனித இயல்பின் உள்ளார்ந்த ஒரு பகுதி. இதை மாற்றியாக வேண்டும்.

படபடப்பு இல்லாத நாடு அமைதியாக இருப்பதாக அர்த்தம் இல்லை. நீதியுள்ள நாடுதான் அமைதியானது. பஞ்சமனோரமா என்ற மணிப்பூர் பெண்ணை ராணுவ வீரன் ஒருவனே கற்பழித்தபோது, அனைத்து மணிப்பூர் பெண்களும் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு ரோட்டுக்கு வந்தார்களே, என்ன காரணம்? மானத்தைவிட மேலானது மனித உரிமை என்பதால் அல்லவா?பர்மாவில் ஆங்-சாங்-சூகி 20 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பர்மாவின் ராணுவ ஆட்சிக்கு எதிராக தனியரு பெண்ணாக இன்று உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறார். அவர் சொன்னார், 'பயத்தை அடித்து நொறுக்குங்கள்'. இதுதான் மனித உரிமை ஆர்வலர்களின் அரிச்சுவடி. 39 வயதில் முடிந்து போன மால்கம் எக்ஸின் வார்த்தை, இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் வேத வாக்காக இருக்க வேண்டும். 'எதற்கும் நிற்காதவன் எல்லாவற்றிலும் வீழ்ந்துவிடுவான்' என்றார்.

அப்படியானால் எல்லாவற்றுக்கும் மற்றவர் கஷ்டத்துக்கும் நிற்பவனுக்கு என்ன பெயர்? எங்கெல்லாம் தனிமனிதனது சுதந்திரம் பறிபோகிறதோ, அங்கெல்லாம் குரல் கொடுக்கும் மனித உரிமையாளனே அவன். பெரும்பாலும் மருத்துவமனைகளில், பிணவறை வாசல்களில், காவல் நிலையங்களில் என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் காலங்கள் கழியலாம். 'செத்த பிணங்களுக்காகப் போராடுபவர்கள்' என்று பலர் கிண்டலும் செய்யலாம். அவர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான், 'ஊருக்கு உழைத்திடல் யோகம். அதிகாரவர்க்கத்துக்கு எதிராக உழைத்திடல் இன்னும் யோகம்!' ''

 
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்
''எனக்கு மனித உரிமை பிடிக்கும்!'' - இந்த வாரம் : 'எவிடென்ஸ்' கதிர்