ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம்...

'' '10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்தால் துணைவேந்தர் பதவி கிடைத்துவிடுகிறது' என்று கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளது பற்றி...''

''துணைவேந்தர் பதவி அரசு நியமிப்பது கிடையாது. கவர்னர் நியமிப்பது. இதுபற்றி அவரிடமே கேளுங்கள்!''

சிறைத் துறை இயக்குநர் ஷியாம் சுந்தரிடம்...

''புழல் சிறையில் நடத்திய ரெய்டில் ஆபாச சி.டி., கஞ்சா, லஞ்சப் பணம், போன்றவை சிக்கி இருக்கின்றன. எப்படி இவ்வளவு சீர்கேடுகள் நிகழ்கின்றன?''

''தற்போது கண்டுபிடிக்கப்பட்டவை சிறைக்குவெளியில் இருந்து எடுக்கப்பட்டவை. சி.டி-க்களைப் பொறுத்தவரை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!''

பழ.நெடுமாறனிடம்...

''இலங்கை விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் குறை கூறுகிறார்கள் என்று கருணாநிதி வருத்தப்பட்டு இருக்கிறாரே?''

5 கேள்விகள்

''போர் நிறுத்தம் செய்யாவிட்டால்நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை மீறியது யார்?''

அசினிடம்...

''ஷாரூக்கான் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?''

''கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதான் கூறினோம். நடிக்க முடியாது என்று சொல்லவே இல்லை!''

நமீதாவிடம்...

'' 'அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்' என்ற நீங்கள் இப்போது மீண்டும் சாப்பிடத் தொடங்கிவிட்டீர்களாமே?''

''ஐயோ, நான்-வெஜ் சாப்பிடுறதே இல்லை மச்சான். அது தப்பு தப்பு!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்