''நான் ஒரு போட்டோகிராபர். சுமார் 12 வருடங்களுக்கு முன் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பி.டி.உஷா வந்திருந்தார். அப்போதுதான்
நான் போட்டோகிராபி கற்றுக்கொண்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு என் கையில் கேமராவைக் கொடுத்து அனுப்பிவிட்டார் என் குருநாதர். சேலை கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து போட்டோ எடுத்தேன்.
ஸ்டேஜ் முழுவதையும் கவர் செய்ய வேண்டுமென்று எண்ணி, ஒரு சேர் மீது நான் ஏறி போட்டோ எடுத்துவிட்டு இறங்கும்போது, புடவை தடுக்கி கீழே விழ இருந்தேன். நல்லவேளை சமாளித்துவிட்டேன். (கிராமத்தில் இருந்து வந்த புதிது என்பதால் புடவை மட்டுமே கட்டுவது என் பழக்கம்!) நிகழ்ச்சி முடிந்ததும் என்னை அருகில் அழைத்த பி.டி.உஷா ஆங்கிலத்தில், 'நீங்கள் மாடர்ன் டிரெஸ் போட்டுக் கொள்ளலாமே!' என்றார். 'ஓ.கே. மேடம். சூப்பர் மேடம். யெஸ் மேடம்!' என்று சிரித்துச் சமாளித்தேன். அப்போது என் குருநாதர் எடுத்த போட்டோதான் இது!''
- ஆர்.தனலட்சுமி, பல்லடம்.
|