ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
2024?
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

''பதில் சொல்ல முடியாத கேள்வி உண்டா?''

''அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசியதற்காகக் கைது செய்யப்பட்ட இராக் பத்திரிகையாளர் அல் ஜெய்தி இப்போது விடுதலை ஆகியிருக்கிறார். தனது செயல்பாடு குறித்து அல்ஜெய்தி, கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு வரி, 'என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது, நான் வீசி எறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளைத் தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?'''

-கி.காமாட்சி, பொள்ளாச்சி.

''சென்ற நூற்றாண்டில் இருந்து இந்த நூற்றாண்டு எங்கு வேறுபடுகிறது?''

'' '20-ம் நூற்றாண்டின் அடிப்படை அடையாள ஆவணம் பிறப்புச் சான்றிதழ் என்றால், 21-ம் நூற்றாண்டின் அடிப்படை அடையாள ஆவணம் பாஸ்போர்ட்' என்றார் பெனடிக்ட் ஆண்டர்சன் என்னும் தத்துவ அறிஞர். எல்லா தேசங்களுக்கும் எல்லைக் கோடுகள் இருக்கின்றன என்றாலும், எல்லா தேச மக்களும் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது இந்த நூற்றாண்டின் மகத்தான மாற்றம்!''

-கிருஷ்ணபாரதி, கோயம்புத்தூர்.

'' 'வீட்டில் இவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதே' என்று எப்போது தெரியவரும்?''

''டி.வி. ரிப்பேர் ஆகும்போது!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''2024-ல் தி.மு.க-வின் முப்பெரும் விழா எப்படி நடக்கும்?''

''ஸ்டாலினுக்கு கலைஞர் விருது, உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டாலின் விருது. கபிலன் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடக்கும் அபாயமும் உண்டு!''

''சிம்பிளா ஒரு தத்துவம், ப்ளீஸ்?''

''வெற்றி என்பது சம்பவம், தோல்வி என்பது அனுபவம்!''

- வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.

'' 'பிரதமரையே என்னால் பத்து நிமிடத்தில் தொடர்பு கொண்டுவிட முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவைத்தான் தொடர்புகொள்ள முடியவில்லை' என்று அலுத்துக்கொள்கிறாரே ராமதாஸ்?''

''அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின்போது மற்ற தலைவர்கள் எல்லாம் அண்ணா சிலைகளைத் தேடிப் போய் மாலை போட்டார்கள். ஆனால், ஜெயலலிதாவோ கொடநாடு வீட்டுக்கு அண்ணா படத்தை வரவழைத்து மாலை போட்டார். அண்ணாவைவிட ராமதாஸ் பெரியவரா என்ன?''

- பி.ராஜன், கோயம்புத்தூர்

''பகவத் கீதை இந்தக் காலத்துக்கும் பொருந்துமா?''

''ஏன் பொருந்தாது? ஓட்டு போட பணம் வாங்கும்போது கீதையின் இந்த வாக்கியத்தை நினைத்துப் பாருங்கள், 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது!' ''

-எஸ்.தாமரை, திருச்சி-2.

எழுதலாம் எல்லோரும்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!