ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந.முத்துசாமி
வெளியீடு:க்ரியா, பிளாட் 3, ஹெச்-18, சௌத் அவென்யூ, திருவான்மியூர், சென்னை-41.
பக்கம்: 296, விலை ரூ.360

விகடன் வரவேற்பறை

தமிழ் சிறுகதைச் சூழலைச் செழுமைப்படுத்தியதில் முத்துசாமியின் பங்கு அபரிமிதமானது. குறைவாக எழுதி, நிறைவாக உருவெடுத்தவரின் புதிய கதைகள் இடம் பெற்றுள்ள தொகுப்பு இது. மிகவும் போற்றப்பட்ட அவரின் முந்திய கதைகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கும் பொருந்திப் போகும் முத்துசாமியின் எழுத்தை புதிய எழுத்துக்காரர்கள் படிக்க வேண்டும்!


சாவி
இயக்கம்: சு.ஸ்ரீராமசந்தோஷ்
பிளாட் 15, வீட்டு எண் 2/6, வெங்கடேஸ்வரா நகர்,
வளசரவாக்கம், சென்னை-87.
விகடன் வரவேற்பறை

மாற்றுச் சாவி செய்கிறவனின் தொலைந்துபோன வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரின் முழுநாளின் துயரம், தனிமை, சோர்வு முதலியவற்றை ஸ்ரீராமசந்தோஷ் படம் பிடித்திருக்கும் விதம் அருமை. கருத்தை நேர்த்தியுடன் சொல்லியிருக்கும் விதத்தில் இயக்குநர் திறமை கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய சித்திரம்!


ஆன்லைன் அகராதி!
new.thefreedictionary.com
விகடன் வரவேற்பறை

ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் ப்ளஸ் உச்சரிப்பு சொல்லித் தரும் வெப்சைட். அது போக மருத்துவம், சட்டம், பொருளாதாரம் என ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தும் வார்த்தைகளுக்குத் தனியாக அர்த்தம் கொடுக்கிறார்கள். ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி எனப் பல நாட்டு மொழிகளின் வார்த்தைகளுக்கும் அர்த்தம் இங்கே கிடைக்கும். ஆங்கில வார்த்தைகள் சம்பந்தமாக தினமும் சிறு போட்டிகள் நடத்தி சுலபமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள்!


ஜக்குபாய் ,இசை: ரஃபி
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ.99
விகடன் வரவேற்பறை

அறிமுக இசையமைப்பாளர் ரஃபி மேற்கத்திய பாணியில் பயணித்திருக்கிறார். கபிலனின் காதல் வரிகளுக்கு சங்கர் மகாதேவன்- சின்மயி குரல்களில் 'ஆப்பிள் லாப்டாப்...' பாடல் சுலபமாக மனதில் ஜன்னல் ஸீட் பிடித்துவிடுகிறது. காதல் மதியின் 'துறு துறு கண்களே...' பாடலுக்கு மகேஸ்வரி ராணியின் அறிமுகக் குரலும் ப்ளஸ் மெலடி மெட்டும் ஒன்ஸ்மோர் கேட்கவைக்கின்றன. 'ஏழு வண்ணத்தில்...' பாடலின் மெட்டமைப்பில் இளையராஜாவின் சாயல். சுனிதா சாரதி குரலில் 'வா... தினம் வா...' ராப் ரவுசு. தயிர் சாதத்துக்கு சிக்கன் தொக்கு கணக்காக எம்.எஸ்.வி-யின் அந்நாளைய ஹிட் 'அன்புள்ள மான் விழியே...' பாடலை ரீ-மிக்ஸி பாடியிருக்கிறார் ரஃபி. 'அச்சம் மடம் நாணம்...' பாடலில் சுசித்ராவின் குரல் வசீகரிக்கிறது!


மனித உரிமைக் களம்
new.humanrightsindia.blogspot.com
விகடன் வரவேற்பறை

'ஒவ்வொரு மனிதரும் உரிமை உடையவரே' என்று சொல்லும் இந்த வலைப்பூ இந்தியாவில் உள்ள மனித உரிமைப் பிரச்னைகள் குறித்துக் கவனம் குவிக்கிறது. தொழுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள் குறித்துப் பேசும் கட்டுரை அவசியமான ஒன்று. மும்பைத் தாக்குதல் குறித்த ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் கட்டுரையும் எழுத்தாளர் அருந்ததிராயின் கட்டுரையும் பிரச்னையின் மறு பக்கத்தைப் பேசுகிறது!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை