ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அமீர் கான், சல்மான் கானைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுடன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் அசின். 'லகான்' இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் படம் என்பதால் கதை கேட்காமலேயே 'ஓ.கே' சொல்லியிருக்கிறாராம் அசின். கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து!

எப்போதும் பார்ட்டி, டிஸ்கோ என்று வலம் வந்துகொண்டு இருந்த நடிகை பாரீஸ் ஹில்டன், இனிமேல் பார்ட்டி களுக்குப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார். பார்ட்டிக்கு வருபவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்களாம். உங்களைவிடவா?

இப்போதெல்லாம் அமிதாப் ஆக்ஷன்தான். பிக்பாஸ் சீஸன் - 3 ஆரம்பமே செம ஹிட். பிக் பாஸ்-2ஐ ஹாட் கேக் ஷில்பா ஷெட்டி தொகுத்து வழங்கியதைவிட, இப்போது இரண்டு மடங்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இந்த அதிரடியில் அக்ஷய்குமார், கிரண் பேடி புரொகிராம்கள் இருக்கிற இடமே தெரியவில்லை. ஓ.கே. சீஸன் -3க்கு அமிதாப்புக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 120 கோடி. பிரிச்சு மேயுற பாஸ்!

பிங்க்' என்றால் த்ரிஷாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். ஹேண்ட் பேக், கண்ணாடி, செல்போன் என அனைத்தையுமே பிங்க் கலரில் வைத்திருக்கிறார்.
கிளாமர் பிங்கி!

இன்பாக்ஸ்

சானியா மிர்சா ஷூ காதலி. அதிலும் கறுப்பென்றால் அத்தனை இஷ்டமாம். வீட்டில் இப்பவே 300 கறுப்பு ஷூ மினுமினுக்கின்றனவாம். ஷூ... ஷூ!

ஒரே சமயத்தில் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் ராம் கோபால் வர்மாவின் 'ரக்தா சரித்ரா' படத்தில் என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய். விஷ்ணு ஓபராய்!

இன்பாக்ஸ்

கிராமங்களைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார் வைகோ. நவம்பரில் கிராம உலா ஆரம்பிக்குமாம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒருநாள் தங்கி மக்களுடன் உறவாடுவது கேம் பிளான். புயல் கிளம்புது... புயல் கிளம்புது...

இன்பாக்ஸ்

வீட்டில் வளர்க்க சிங்கத்தைவிட, அழகான மிருகம் எதுவும் இல்லை என்று வீட்டில் இருப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஹர்பஜன் சிங் பிஸி. ஹம்மர் கார் வாங்கிய பிறகு ஹர்பஜனின் அடுத்த டார்கெட் சிங்கக்குட்டி. ஹர்பஜன் சிங்கம்!

உலகத் தமிழர்களை டிசம்பர் மாதம் தஞ்சாவூரில் திரட்டவிருக்கிறார் பழ.நெடுமாறன். ஈழ முழக்கம்தான் பிரதான நோக்கமாம். அனைத்து அயல்நாடுகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டு இருக்கிறார் நெடுமாறன். அனுப்ப வேண்டியவர்களுக்கும் அனுப்புங்கய்யா!

இன்பாக்ஸ்

சினிமா இல்லாத ஜாலி கேலி கலாட்டா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி, சேனலுக்குப் புது ரத்தம் பாய்ச்சவிருக்கிறார்கள் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர். ஆபரேஷனுக்குத் தலைமை சௌம்யா அன்புமணி. பேஷன்ட் பத்திரம்!

இன்பாக்ஸ்

ஐ.நா.சபையின் நல்லெண்ணத் தூதுவரான ஏஞ்சலினா ஜோலி, கடந்த வாரம் டமாஸ்கஸில் இராக் அகதிகளைச் சந்தித்துத் திரும்பிய பிறகு அங்குள்ளவர்களின் மனநிலையில் மகிழ்ச்சி முன்னேற்றமாம். ஹூம்ம்... தமிழ்நாட்லயும் நிறைய அகதிகள் முகாமும் நடிகர் நடிகைகளும் இருக்காங்க!

இன்பாக்ஸ்

டூ-பீஸ் செக்ஸி பெண்களின் கிளாமர் காலண்டரை வருடா வருடம் வெளியிட்டு, இளைஞர்களைச் சூடேற்றுவது கிங்ஃபிஷரின் வழக்கம். இந்த வருடம் அதிரடியாக அந்த காலண்டர் தயாராவதை அப்படியே 'மேக்கிங் ஆஃப் கிங்ஃபிஷர் காலண்டர்' என்கிற பெயரில் கிளுகிளு ரியாலிட்டி ஷோவாக எடுத்து டி.வி-யில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். மீன் பிடிச்சதைக் காட்டப் போறீங்க!

இன்பாக்ஸ்

த்ரிஷா, ஷாலினி, ரம்யா கிருஷ்ணன், மாடல் அழகிகள் பலரும் கலந்துகொண்ட சமீபத்திய ஃபேஷன் பார்ட்டி ஒன்றில் அனைவரையும் அசத்தி மயக்கியது சோனியா அகர்வால்தானாம். ஹூம்ம்... இளமை இன்னும் ஊஞ்சலாடுகிறதுதான்!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்