ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி

டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி

டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி
டாக்டர் நாராயணரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி
டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி
டூயட் கிளினிக்
10:7 பெண்கள் இன் டிமாண்ட்
டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி
டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி

கேஷ் எம்.பி.பி.எஸ்., முடித்திருந்தான். மேட்ரிமோனியல் வெப்சைட்டுகளை மேய்ந்து, தனக்குப் பெண் வேண்டும் என விண்ணப்பித்தான். 'தான் ஒரு டாக்டர்... தன்னைத் திருமணம் செய்துகொள்ள பெண்கள் க்யூவில் நிற்பார்கள்' என்பது அவன் நினைப்பு. 13 பெண்கள்தான் விண்ணப்பித்து இருந் தார்கள்.

அதில் ஒரு பெண் 'எம்.பி.ஏ.படித்தவரைவிட அதிக வருமானம் வருமா?' என்று கேட்டிருந்தாள்.இன்னொரு பெண், 'சினிமா நடிகர் மாதிரி அழகாக இருப்பீர்களா?' என்றாள். அடுத்தஅப்ளிகேஷன், 'திருமணத்துக்குப் பின்னால் தனிக்குடித்தனம்' என்று கண்டிஷன் போட்டது. வேறு ஒரு பெண், 'எனக்கு மாசம் 15,000 ரூபாய் பியூட்டி பார்லருக்குசெலவாகும். தாக்குப்பிடிப்பாயா?' என்றாள். 'ஆண்மைஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் தரணும், தாலி கட்டிக்க மாட்டேன்... சம்மதமா?' என்றுபட்டியல் சமர்ப்பித்தார் இன்னொருவர். இதை பார்த்த மகேஷின் பெற்றோர், 'இன்டர்நெட்... மேட்ரிமோனியல்னு போனா இப்படித்தான். கல்யாண புரோக்கர் மூலமா பெண் பார்ப்போம்' என்று செயலில் இறங்கினார்கள்.

'பெண்ணுக்கு உங்களால் எவ்வளவு வரதட்சணை தர முடியுமோ, அதுக்குத் தகுந்த மாதிரி பெண் கிடைக்கும் வொர்க்கிங் கேர்ள் என்றால் 10 லட்சம் ரொக்கம், ஒரு காரும் பெண்ணுக்குத் தரணும்' என்றார் புரோக்கர்.'

-நீங்கள் மேலே படித்தது... 2030-ல் இந்தியாவில் வரப்போகும் நிலைமை. இன்றைய கற்பனை, நாளை நிஜமாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் என்கிற விகிதத்தில் ஆண்- பெண் உள்ளனர் என்றும் பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதனால், ஆண்கள் திரு மணம் பண்ணிக்கொள்ள பெண்கள்கிடைக் காத நிலைகூட ஏற்படலாம்.

நம் சமூகத்தில் பெண் குழந்தைகளைச் சுமையாக நினைப்பது, கருவிலேயே அழிப் பது, பெண் சிசுக் கொலை போன்றவை அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தைகளைச் சுமையாக நினைக்கும் மூடச் செயல் ஒழியும்போதுதான் இந்த சமூகக் கொடுமை நீங்கும். 'ஓர் ஆணுக்கு உயிர் தந்தது பெண். சுகம் தருவது பெண்' என்கிற எண்ணம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும்.

ஆணுக்கு நிகராகப் பெண்களும் சாதிக்கவும், பணிபுரியவும் பொருள் ஈட்ட வும் தொடங்கிவிட்ட இந்த நாளிலும், இப்படி ஒரு நிலைமையா என்கிற பெரும் கேள்வி எழுகிறது?

யார் விடை சொல்வார்களோ?

டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி

டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி
டூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி