ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!

கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!

கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
சார்லஸ், படங்கள்: என்.விவேக்
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!

கூவம் அழகாக இருக்கிறது என்றால், நம்புவீர்களா?

ஆனால், உண்மை!

பளபளக்கும் கறுப்புப் போர்வையாக நீளும் கூவத்தைக் கிழித்து குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டு இருக்கின்றன சில படகுகள். 'ஐய்யே... கூவமா?' என்று முகம் சுளிக்கும் அந்த நதிதான் மெட்ராஸ் போட் கிளப்பின் பயிற்சிக் களம். தமிழகப் படகுப் போட்டி (ரோயிங்) வீரர்கள் இங்கேதான் உருவாகிறார்கள்.

கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!

அத்தனை அதிகாலையில் டி-ஷர்ட், ஷார்ட்ஸோடு டீன் ஏஜ் பையன்களும் பெண்களும் 50 கிலோ போட்டைத் தோளில் சுமந்துகொண்டு ஆற்றுக்குள் இறங்கும் அழகு... அசத்தல்! தமிழகத்தின் மிக காஸ்ட்லி ஏரியாவான அடையாறு போட் கிளப்பின் லேண்ட்மார்க், இந்த போட் கிளப்தான். இந்த ஏரியாவில் இடம் கிடைத்தால், வீடு வாங்கப் பதிவு செய்து காத்திருக்கும் வி.வி.ஐ.பி-க்கள் - நடிகர் சூர்யா உட்பட - 150 பேருக்கும் மேல். ஒரு கிரவுண்டு, கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள்.

மேட்டருக்கு வாருங்கள். ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான்!

படகைத் தண்ணீரில் பதித்து துடுப்புகளைச் சுழற்றிய சில நொடிகளிலேயே 200 மீட்டர் தூரத்தைத் தாண்டுகிறார் தேசிய கோல்டு மெடலிஸ்ட் சங்கவி. ''ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தை மிகக் குறைந்த விநாடிகளில் தாண்டுவதுதான் ரேஸ். ஸ்பெஷல் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட துடுப்புகளைப் பயன்படுத்துவோம். ஒரு போட் ப்ளஸ் துடுப்புகளின் விலை 2 லட்சம் ரூபாய். ஓட்டுறப்போ சரியான திசையில் போறோமான்னு தெரியாது. சரியான திசையில்தான் படகைச் செலுத்துறோமான்னு தெரிஞ்சுக்க 'ரெடர்'னு ஒரு கருவியை ஷூவில் இணைச்சிருப்பாங்க. அது வழிகாட்டுறபடி படகைச் செலுத்துவோம். இந்த ரேஸ்ல கஷ்டமான சவாலே படகை பேலன்ஸ் செய்வதில்தான் இருக்கு!'' என்கிறார் சங்கவி.

'கந்தசாமி' படத்தில் படகு ஓட்டும் காட்சிகளில் நடிப்பதற்கு இங்குதான் பயிற்சி பெற்றாராம் விக்ரம்.
நதியில் படகில் மிதப்பவர்களை கரையில் நின்றபடியே 'ஸ்பீட்', 'ரொட்டேட்' என்று வழிமுறைகள் மூலம் செலுத்திக்கொண்டு இருந்தார் கோச் கஜேந்திரன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றவர். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவரை மெட்ராஸ் போட் கிளப் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அழைத்து வந்திருக்கிறது.

கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!

''ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கணும், அது ஒரு தமிழன் மூலமாச் சாத்தியப்படணும்னுதான் இங்கே வந்திருக்கேன். 'மெட்ராஸ் போட் கிளப்' ரொம்ப வசதியானவர்களுக்கு மட்டும்னு நினைக்காதீங்க. தகுதி உள்ளவர்களுக்கு இங்கே பயிற்சிக் கட்டணம் மாசம் 150 ரூபாய்தான். 12 வயசுக்கு மேல 100 சதவிகிதம் நீச்சல் தெரிந்த யாருக்கும் இங்கே பயிற்சி நிச்சயம்'' என்கிறார் கஜேந்திரன்!

 
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!
கூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்!