''படத் தயாரிப்பு வேலைகளில் தாத்தா, அப்பா எதுவும் தலையிடுவாங்களா?''
'' 'பொலிடிக்கலா எடுத்துடாதீங்க... ரொம்ப வயலென்ஸ் வேண்டாம்'னு மட்டும் அப்பா சொல்வார். பட பூஜை, கேசட் ரிலீஸ் விழாக்களுக்குக்கூட வர மாட்டார். ரவிக்குமார் சார் அப்பாவுக்கே நல்ல க்ளோஸ். 'நீங்க வந்தே ஆகணும்'னு 'ஆதவன்' பூஜைக்கு அப்பாவைக் கூப்பிட்டார். 'நான் வந்தா படத்துக்குத் தேவை இல்லாம பொலிடிக்கல் கலர் வந்துடும். நீங்களே பார்த்துக்கங்க'ன்னு சொல்லிட்டார்.
முதல் படம் எடுத்தப்போ தாத்தா, 'என்னடா டைட்டில்?'னு கேட்டாரு.'குருவி'ன் னேன். 'என்னடா அது குருவி? ஹீரோயின் சப்ஜெக்ட்டா?'ன்னு கேட்டாரு. 'விஜய் ஹீரோ'ன்னேன். 'ஏன்டா, பெரிய ஹீரோவை வெச்சுக்கிட்டு 'குருவி'ன்னு பேர் வெச்சிருக்கியேடா?'ன்னார். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, 'டைட்டில் 'ஆதவன்' தாத்தா'ன் னேன். 'நல்லா இருக்குடா'ன்னு சந்தோஷப்பட்டார். எப்பவாவது திடீர்னு 'முரசொலியில் இன்னிக்கு என்ன வந்துச்சு?'ன்னு கேட்ருவாரோன்னு பயந்து தாத்தாவோட கடிதம், கட்டுரைன்னு முரசொலியை முழுக்கப் படிச் சிடுவேன். தலைவர், 'முரசொலி' மாறன், அப்பா, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் |