ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

பல்கலைக்கலகம் பராக் பராக்!

பல்கலைக்கலகம் பராக் பராக்!

பல்கலைக்கலகம் பராக் பராக்!
ஜாலிவாலி
பல்கலைக்கலகம் பராக் பராக்!
பல்கலைக்கலகம் பராக் பராக்!
பல்கலைக்கலகம் பராக் பராக்!
பல்கலைக்கலகம் பராக் பராக்!
பல்கலைக்கலகம் பராக் பராக்!

ந்த நியூஸைப் பார்த்ததுமே எனக்கு ஜெர்க் ஆயிடுச்சு. 'உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியப் பல்கலைக்கழகம் இல்லை' என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு. உடனே, இந்தியாவின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமே என்று துடித்துப்போய் பிரபலங்களின் யோசனைகளை நாடினால் அவர்கள் சொன்ன ஐடியாக்கள்...

ஜெயலலிதா: ''நான்சென்ஸ், முதலில் இந்த ரெண்டு மாசம்தான் ஸ்டூடன்ட்சுக்கு லீவுங்கிறதை மாத்தணும். போதிய ரெஸ்ட் இல்லைன்னா மாணவர்கள் எப்படி நல்லாப் படிப்பாங்க? நாலரை மாசத்துக்குக் குறையாம சம்மர் ஹாலிடேஸ் விடணும். லீவு முடிஞ்சு ஸ்டூடன்ட்ஸ் கிளாஸ் வர்றப்ப மேளதாளத்தோடு வரவேற்பு கொடுக்கணும்!''

கருணாநிதி: ''அந்நிய நாட்டார் ஆய்வில் மூழ்கலாமா அருமைத் தமிழா! கல்லூரியில் வழங்கப்படும் எல்லாப் பட்டங்களையும் டாக்டர் பட்டங்களாக மாற்றி மாணவக் கண்மணிகளுக்கு வழங்க வேண்டும். பிறகென்ன, இந்தியாவில்தான் டாக்டர்கள் அதிகம் என்று உலகளவில் முதலிடம் நமக்குத்தானடா உடன்பிறப்பே! அப்புறம் பாருங்கள், மன்மோகனுக்கு ஒபாமா விருதும் பிரணாப்முகர்ஜிக்கு பில்கேட்ஸ் விருதும் கிடைக்குமே தமிழா!''

டி.ஆர்.பாலு: ''உடனடியா என்னோட தலைமையில எம்.பி-க்கள் எல்லாம் கொலம்பியா யுனிவர்சிட்டி, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டின்னு ஆறு மாசம் டூர் போயிட்டு வந்தா அதுக்குள்ள பை-எலெக்ஷன் வந்துடுமே!''

ராமதாஸ்: ''முதல்ல மாணவர்கள் எல்லாம் மூணு வருஷம் ஒரே கல்லூரியில படிக்கணும்னு எவன் சட்டம் கொண்டுவந்தான்? அதனாலதான் நம்ம கல்வியோட தரமே உயரலை. ஆறு மாசம் இன்ஜினீ யரிங் காலேஜ் படிக்கட்டும். அப்புறம் ஆறு மாசம் மருத்துவம் படிக்கட்டும். அப்பதானே கல்வித் தரம் உயரும்? தமிழ்நாட்டிலேயே தரமான கட்சி பா.ம.க-தானே!''

விஜயகாந்த்: ''இப்பத் தெரியுதா சார், இந்த ரெண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செஞ்சு எப்படிச் சீரழிச்சிருக்காங்கன்னு. நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டிலேயே கறவை மாடு கொடுப்போம். அதுல பால் கறந்து டீ போட்டு ஸ்டூடன்ட்ஸ் படிக்கலாம். அப்புறம் வீட்டுக்கே வந்து எக்ஸாம் நடத்தி, வீட்டுக்கே வந்து பேப்பர் திருத்தி, வீட்டுக்கே வந்து பட்டம் கொடுப்போம். ஆங்!''

வைகோ:''என்ன பண்றது தம்பி? காலேஜ் ஆரம்பிச்சா முதல்ல நம்மகிட்டதான் எல்லாம் அட்மிஷன் போடுறான். ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தா ஒவ்வொருத்தனா டிஸ்கன்டினியூ ஆகி அடுத்த காலேஜ்ல சேர்ந்துடறான். அப்புறம் காலையிலே காலேஜ் திறந்து காலி கிரவுண்ட்ல வாக்கிங் போக வேண்டியதாயிருக்கு. அப்புறம் எப்படி கல்வித் தரம் உயரும்? ஆனால் கிரேக்கத்திலே, ரோமாபுரியிலே, இளைஞர்கள் வாழ்ந்த ஏதென்ஸிலே இப்படி இருந்ததா என்று உங்களைப் பார்த்துக் கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன்!''

சுப்பிரமணியன் சாமி: ''இந்த ரிசர்ச்சைப் பண்ணினதே சோனியா காந்தி சித்தப்பா பையன்தான். அவாள்லாம் சேர்ந்து சதி பண்ணிட்டா. அந்தப் பட்டியலை விடுங்க, ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைக்கிற துக்காக கருணாநிதி, ப.சிதம்பரம்லாம் கமிஷன் வாங்கியிருக்கார்னு என்கிட்ட ஒரு பட்டியல் இருக்கு. பார்க்கறீங்களா?''

அப்புறம் நான் அங்கே நிற்பேனா? ஜூட்!

 
பல்கலைக்கலகம் பராக் பராக்!
பல்கலைக்கலகம் பராக் பராக்!