அரியலூர்... தமிழ்நாட்டின் ஜுராஸிக் பார்க்!
செந்துறைப் பகுதி காவிரி ஆற்றுப்படுகையில் கொத்துக் கொத்தாகக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் டைனோசர் முட்டைகள், உலக உயிரின ஆராய்ச்சியாளர்களின் கவனம் ஈர்த்திருக்கின்றன. இன்னொரு பக்கம், தங்கள் ஊருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பெருமையை அறியாமல் டைனோசர் முட்டைகளை வீட்டுக்கு லவட்டிக்கொண்டு போகத் துவங்கியுள்ளனர் மக்கள்.
ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான முட்டைகள் கிடைத்திருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை. இந்த முட்டைகள் அனைத்தும் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் ராம்குமார் தலைமையிலான ஆய்வுக் குழுவினர்தான் இதைக் கண்டுபிடித்தவர்கள்.
''அரியலூர் ஒரு காலத்தில் கடல் பிரதேசமாக இருந்திருக்கிறது. கடலோரத்தை ஒட்டியிருந்த காடுகளில் கார்னோசர், சௌரபோட் என்ற இரண்டு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. இதில் சௌரபோட் என்பது இலைகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் சைவ வகை. 5 ஆப்பிரிக்க யானைகளை வரிசையாக நிறுத்தினால், எவ்வளவு நீளமும் உயரமும் இருக்குமோ அந்த அளவுக்கு இவை பெரியவை. இந்த வகை டைனோசருக்கு முட்டை போட்டு அடைகாக்கும் பழக்கம் இல்லை. பூமியின் சூட்டில் தானாகவே இனப்பெருக்கம் நடக்கும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் சீற்றமோ, இயற்கைப் பேரழிவோ நடந்து |