விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
சார்லஸ், படங்கள்: என்.விவேக்
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!

டந்த வாரம் சென்னை ஆண்கள் கொஞ்சம் அரண்டு மிரண்டுதான் போனார்கள். காரணம், சென்னை வீதிகளில் ஆறடியைத் தாண்டிய உயரங்களில் வலம் வந்த அழகுப் பெண்கள்!

ஆசிய பெண்கள் கூடைப் பந்தாட்டப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்த வருடம் சென்னைக்கு. சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து எனப் பல தேசப் பெண்கள் பங்கேற்க கலர்ஃபுல்லாகக் களைகட்டியது நேரு ஸ்டேடியம். கூடைப் பந்தாட்டத்தைப் பொறுத்தவரை ஆசிய அளவில் சீனா, கொரியாதான் டாப். இந்தியா ஆவரேஜாக அடிவாங்கும் ஒரு கத்துக்குட்டி அணி. இருந் தாலும் நம் பெண்களை உற்சாகப்படுத்த ஏகப்பட்ட சென்னைவாசிகள் ஆஜர். உயர உயரமாக வலம் வந்த சர்வதேச பிளேயர்களுக்கு இந்திய அணியில் ஈடு கொடுத்தது கீத்து அன்னா ஜோஸ். உயரம் ஆறடி இரண்டு அங்குலம்!

மற்ற இந்தியப் பெண்கள் சராசரியாக 5.6 அடி உயரத்தில் இருந்தார்கள். இதனாலேயே பல ஆட்டங்களில் இந்தியப் பெண்கள் திணறியது சோகக் கதை. இந்திய-சீன அணிகள் மோதிய ஆட்டத்தில் அவ்வளவு அனல். இந்திய அணிக்கு ஆதரவாக சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டு ரசிகர்கள் களம் இறங்க, சீன ரசிகர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளுமான ஆக்ரோஷம். இந்திய ரசிகர் களோடு சேர்ந்து 'கமான் இந்தியா' என்று உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார்கள் திபெத் ரசிகர்கள். ம்ஹ¨ம்... கடைசி வரை வெற்றிக்கனியைப் பறிக்கவில்லை இந்தியா. சீனா, கொரியா, தாய்லாந்து, ஜப்பான் என வரிசைகட்டித் தோற்ற இந்திய அணி ஆறாவதாக மலேசியாவிடம் ஆறுதல் வெற்றி பெற்றது.

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!

எதிர்பார்த்ததைப் போலவே சீனா-கொரியா அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின. கொரிய அணிக்கு ஆதரவாக ஹ¨ண்டாய், சாம்சங் எனப் பல நிறுவன ஊழியர்கள் (கொரிய நாட்டினர்) வந்துவிட்டார்கள். (சென்னையில் இவ்வளவு கொரியன்ஸா?) திபெத் ரசிகர்களும் கொரிய அணிக்கு ஆதரவளிக்கத் துவங்கி னார்கள். ஒரு கட்டத்தில் சீன, திபெத் ரசிகர்களுக்கு இடையே அடிதடி ரகளையாக... களமிறங்கியது போலீஸ். க்ளைமாக்ஸில் 91-71 புள்ளி கணக்கில் கொரியாவைத் தோற்கடித்து வென்றது சீனா. இதில் கொரிய ரசிகர்களைவிட அதிகம் வருத்தப்பட்டது திபெத் ரசிகர்கள்தான்.

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!

அரை இறுதியைக்கூட எட்டாத இந்தியாவுக்கு ஒரே ஆறுதல் இந்திய பிளேயர் ஒருவருக்கு 'டாப் ஸ்கோரர்' விருது கிடைத்ததுதான். இந்திய அணியின் கேப்டனான கீத்து 132 முறை கூடைக்குள் பந்தைப் போட்டு விருதை தட்டிச் சென்றார். '2007-ல் கொரியாவில் ஆசிய கூடைப் பந்து போட்டி நடந்தது. அதற்கடுத்து இப்போதுதான் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்கிறோம். நிறைய போட்டிகளில் ஆடும்போதுதான் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். திடீர்னு ஒரே நாள்ல பெரிய அணிகளைத் தோற்கடிக்க முடியாது!'' என்று கவலையான குரலில் காரணம் சொன்னார் கீத்து.

என்னமோ போங்க!

கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!
கத்துக்குட்டி இந்தியா... கதற வைத்த சீனா!