விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி
டாக்டர் டி.நாராயண ரெட்டி,செக்ஸாலஜிஸ்ட்
டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி
பெண்மை... உண்மை!
டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி

ன்னைத் தேடி வந்த அந்த இளைஞருக்கு 30 வயசு. ஐ.டி. கம்பெனி ஆள். ''டாக்டர்... நான் ஆல்வேஸ் பெர்ஃபெக்ட். என் மனைவிக்கு செக்ஸ் உணர்வு ரொம்பக் கம்மியா இருக்கு. அதை அதிகப் படுத்த முடியுமா... அதுக்கு எதாவது மருந்துஇருக்கா சார்?'' என்று கேட்டார். பொதுவாகவே, 'பெண் களுக்கு ஆண்களைவிட செக்ஸ் உணர்வு குறைவாகத் தான் இருக்கும்' என்கிற நினைப்பு பலருக்கு உள்ளது. 1994-ல் அமெரிக்காவின் சிகாகோ யுனிவர் சிட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்... '54 சதவிகித ஆண்கள் ஒரு நாளில் பல தடவை செக்ஸ் பற்றி கற்பனை செய்கிறார்கள் என்றும், பெண்களில் 66.3 சதவிகிதம் பேர் பல தடவை செக்ஸ் பற்றிக் கற்பனை செய்கிறார்கள்' என்றும் குறிப்பிடுகிறது.

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி

ஒரே ஒரு காட்சிகூட ஆண்களை எளிதில்உணர்ச்சி வசப்படுத்தும். ஆனால், பெண்கள் உணர்ச்சிவசப்பட கொஞ்சம் கூடுதல் ரொமான்ஸ் தேவைப்படும் என்பது பல ஆண்களுக்குத் தெரிவது இல்லை.கணவன்-மனைவி இருவருக்கும் செக்ஸ் பற்றி ஒருமித்த எண்ணங்கள் இல்லை என்றால், இல்லறத் தில் சிறிதும் பெரிதுமாக உரசல்கள் உருவாகும். ஒருவர் கேட்டு இன்னொருவர் மறுக்கிறபோது... கேட்பவர், தான் அவமதிக்கப்படுவது போல உணர்வதும் பிரச்னைக்குத் தூபம் போடலாம்.
இயற்கை ஆண், பெண் இருவருக்கும் சமமாகவே செக்ஸ் உணர்வைப் படைத்துள்ளது. இதில் ஆணுக்குக் கூடுதல், பெண்ணுக்குக் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு செக்ஸ் உணர்ச்சிகள் குறைவதற்கு மன அழுத்தம், மதுப்பழக்கம், சில மருந்துகளின் பக்க விளைவுகள், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், பார்கின்ஸன் நோய், ரத்த சோகை, அதிக ஸ்ட்ரெஸ் போன்றவை காரணமாக இருக்கலாம்.

ஆணாதிக்கம் காரணமாகவும், கலாசார கட்டுப்பாடுகள் காரணமாகவும் நமது நாட்டில் பல பெண் கள் தங்களது செக்ஸ் உணர்வுகளைக் கணவனிடம் முழுமையாக வெளிப்படுத்துவது இல்லை. அலைஅடிக்கும் ஆசையை மனதிலேயே முடிந்துகொள்ளும் சில பெண்களின் கூச்ச சுபாவம் காரணமாகக்கூட இந்த 'அதிகம்-கம்மி' என்கிற ஒப்பீடு வந்துவிடுகிறது.

அப்படியே கல்வி அறிவு தந்த சுதந்திர மனப்பான்மை காரணமாகச் சில பெண்கள் வெளிப்படையாகப் பேசினால்கூட 'அந்தப் பெண்ணுக்குக் காம உணர்வு அதிகம்' என்று கெட்ட அர்ச்சனைதான். இதுபோன்ற நிலை ஆரோக்கியமானது அல்ல.

'ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி ஹார்மோன்கள் செக்ஸ் உணர்வைத் தூண்டுகின்றன' என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆண், பெண் இருவருக்கும் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன்தான் இந்த வேலையைச் செய்கிறது. ஆணுக்கு விதையிலும், பெண்ணுக்கு அட்ரினல் சுரப்பியில் இருந்தும் கருமுட்டைப் பையிலிருந்தும் இந்த ஹார்மோன் சுரக்கிறது.

செக்ஸ் லைஃப் என்பது ஒரு வழிப் பாதை அல்ல என்பதைக் கணவன்-மனைவி இருவரும் புரிந்துகொண்டால்தான் இதுபோன்ற பிரச்னைகளில்இருந்து தப்பிக்கலாம்!

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி

டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக் -பெண்மை... உண்மை! :டாக்டர் டி.நாராயண ரெட்டி