விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜாலிவாலி!

ஜாலிவாலி!

ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!

ஹாய் நண்பாஸ்! நான்தான் உங்க செல்லம், வெல்லம், ஜுஜ்ஜுலிப்பா ஜாலிவாலி. நல்லா இருக்கீங்களா? இங்கே ஆபீஸ்ல எல்லாரும் 'தீபாவளி ஸ்பெஷல் அசைன்மென்ட்'னு பந்தா பண்ணிட்டு, நம்மளைக் கண்டுக்க மாட்டேங்குறாங்க. அதான், பொழுதுபோகாம சும்மா பேப்பரை மேய்ஞ்சேன். 'நிலாவில் தண்ணீர் இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் அபார சாதனை!'ன்னு எட்டுக் காலத்துக்கு செய்திகள். அந்தப் பக்கம் அமெரிக்கா காரன் 'நிலாவுக்குச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இவ்வளவு டாலர்கள் கொடுங்கள். இத்தனை நாட்கள் உங்களை அங்கே தங்கவைக்கிறேன்'னு சொல்றான். இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டவுடனேயே பிரபலங்களின் மனசாட்சி ரியாக்ஷன் என்னன்னு நான் ஒட்டுக் கேட்டேன். நீங்களும் கேட்டுக்குறீங்களா?

கருணாநிதி: '' 'நிலாவில் தண்ணீர் இருப்பது கழக ஆட்சியின் சாதனை'ன்னு உடனே உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிட வேண்டியதுதான்!''

ஜெயலலிதா: ''இன்னிக்கு அறிக்கை விட ஒரு விஷயமும் கிடைக்கலையேன்னு யோசிச்சேன். 'இவ்வளவு நாள் நிலாவுல தண்ணி இருக்கிற விஷயம் தெரியாததுக்குக் காரணம், மைனாரிட்டி தி.மு.க. அரசுதான்'னு கண்டிச்சு போராட்டம் நடத்திட வேண்டியதுதான்!''

ரஜினி: ''ஹேய் பாபா! கலைஞர்ஜி அடுத்த பாராட்டு விழாவுக்குக் கூப்பிடறதுக்கு முன்னாடி நிலாவுக்குப் போய்ட வேண்டியதுதான்!''

தங்கபாலு : '' 'நிலாவுக்குச் சுற்றுப்பயணம் பண்ணப் போறேன்'னு ராகுல் காந்தி அங்கேயும் தங்கறதுக்கு குடிசை ரெடி பண்ணச் சொல்வாரோ?''

வைரமுத்து: '' 'இளையநிலா பொழிகிறது'ன்னு நாம எழுதினது சரிதான் போலிருக்கே!''

சுப்பிரமணியன் சாமி: ''நிலாவில் தண்ணி இருக்கிற விஷயம் முன்னாடியே கருணாநிதிக்குத் தெரியும். அது தெரிஞ்சுக்கிட்டுதான் ஆஸ்திரேலியாவுல ஒரு மினரல் வாட்டர் ஃபேக்டரி வாங்கிட்டாரு!''

சரத்குமார்: ''என்னாது... நிலாவுல தண்ணி இருக்கா? பழைய சொம்போடு போய் 'நாட்டாமை' ரீ-மேக் எடுக்கச் சொல்லிட வேண்டியதுதான்!''

தங்கர்பச்சான்: ''தமிழன்னா இளிச்சவாயனா? நிலாவுல இருக்குற தண்ணீரை மலையாளி திருடப் பார்க்குறான். தமிழனுக்குத் தண்ணீர் தர மாட்டேங்குறான். சந்திராயன்ல போனவன்ல மூணு பேரு மலையாளின்னு எனக்குத் தகவல் வந்தது!''

சேரன்: '' 'ஆட்டோகிராஃப் பார்ட் 2' எடுத்து, நிலாவுல அஞ்சாவது காதலி இருக்கிற மாதிரி காட்டிட வேண்டியதுதான். நிலாவுல போஸ்ட்பாக்ஸ் இல்லாமலா இருக்கும்?''

ஜே.கே.ரித்தீஷ்: ''ஏய்! யாருடா அங்கே. அடுத்த பட லொகேஷனை நிலாவுல போடு! ஏய்... நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா!''

 
ஜாலிவாலி!
ஜாலிவாலி!