ஹாய் நண்பாஸ்! நான்தான் உங்க செல்லம், வெல்லம், ஜுஜ்ஜுலிப்பா ஜாலிவாலி. நல்லா இருக்கீங்களா? இங்கே ஆபீஸ்ல எல்லாரும் 'தீபாவளி ஸ்பெஷல் அசைன்மென்ட்'னு பந்தா பண்ணிட்டு, நம்மளைக் கண்டுக்க மாட்டேங்குறாங்க. அதான், பொழுதுபோகாம சும்மா பேப்பரை மேய்ஞ்சேன். 'நிலாவில் தண்ணீர் இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் அபார சாதனை!'ன்னு எட்டுக் காலத்துக்கு செய்திகள். அந்தப் பக்கம் அமெரிக்கா காரன் 'நிலாவுக்குச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இவ்வளவு டாலர்கள் கொடுங்கள். இத்தனை நாட்கள் உங்களை அங்கே தங்கவைக்கிறேன்'னு சொல்றான். இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டவுடனேயே பிரபலங்களின் மனசாட்சி ரியாக்ஷன் என்னன்னு நான் ஒட்டுக் கேட்டேன். நீங்களும் கேட்டுக்குறீங்களா?
|