மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

திசையெங்கும் சுவர்கள்கொண்ட கிராமம்  (குறுநாவல்கள்) - அழகியபெரியவன்
வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5. பக்கங்கள்: 142 விலை:

விகடன் வரவேற்பறை

120

விகடன் வரவேற்பறை

டுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு. தொழிற்சாலை வேலை இழந்து கள் விற்கப்போகும் ஒருவன், போலீஸால் அந்தத் தொழிலையும் இழந்து, செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்யும்போது இறந்துபோகும் அவலம் சொல்லும் 'கானலில் தவித்திடும் குரல்’, பாலியல் தொழிலுக்கு வந்து சேர நேரும் பெண்ணின் வாழ்வைச் சொல்லும் 'தீட்டு’ என ஒவ்வொரு குறுநாவலும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை, கையறுநிலையை, நெருக்கடிகளுக்கு இடையிலான சக மனிதர் மீதான கரிசனத்தைப் பதிவு செய்கின்றன!

அரிதினும் அரிது கேள்! http://www.iucnredlist.org/

விகடன் வரவேற்பறை

ழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள்பற்றி அக்கறை காட்டும் தளம். கங்காரு, முயலில் ஆரம்பித்து ஆழ்கடலில் வசிக்கும் பன்றி உருவ மீன் வரை விநோதமான உயிரினங்களைப் படங்களோடு அறிமுகப்படுத்துகிறார்கள். உயிரினங்களின் வாழ்க்கை முறை, அவை அழியும் காரணங்கள், அந்த அழிவைத் தடுக்கும் வழிகள் என்று விரிவான விளக்கங்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவசியம் க்ளிக்க வேண்டிய தளம்!  

குழந்தை நலம்! http://doctorrajmohan.blogspot.com/

விகடன் வரவேற்பறை

குழந்தைகள் வளர்ப்பவர்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுமோ அவற்றுக்கு எல்லாம் தீர்வு சொல்லும் வலைப்பூ. 'குழந்தைக்கு எப்போது, எப்படிப் புரத மாவு தர வேண்டும்?’, 'ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வெட்டர் போடலாமா?’, 'கால் சட்டை ஜிப்பில் குழந்தையின் ஆண்குறி மாட்டிக்கொண்டால் அதை எப்படி விடுவிப்பது?’, 'தொண்டைச் சதை என்பது தேவையற்ற கட்டியா?’, 'பிறவிப் பற்களை எப்போது நீக்க வேண்டும்?’ -இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு விஞ்ஞான பூர்வமான பதில்கள். இளம் தாய்மார்களுக்கு உபயோகமான வலைப்பூ!

ஒருவழிப் பாதை - இயக்கம்: சி.உதயசூரியன்

விகடன் வரவேற்பறை

லங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்ப நினைக்கும் ஈழத் தமிழர்களின் கதியே கதை.  மனநிலை பிறழ்ந்த ஒரு பெரியவர், இயக்கப் பொடியன் ஆக நினைக்கும் இளைஞன், 'கடவுள் காப்பாத்துவார்’ என்று நம்பும் குடும்பத் தலைவி என விதவித மனநிலைகொண்டவர்கள் படகில் இந்தியாவுக்குத் தப்பி வருகிறார்கள். வரும் வழியில் சிங்கள ராணுவப் படகைப் பார்த்து பதற்றமாகும் படகோட்டி, 'இதுதான் இந்தியா’ என்று பாம்புத் தீவில் அவர்களை இறக்கிவிட்டுச் செல்கிறார். ஆள் இல்லாத் தீவில் இருந்து அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பது க்ளைமாக்ஸ். ஈழத் தமிழர்களின் வலி நிறைந்த வாழ்வைச் சொல்லும் வசனங்கள் கவனம் கவர்கின்றன!

அழகர்சாமியின் குதிரை  இசை: இளையராஜா 
விலை:

விகடன் வரவேற்பறை

99 - வெளியீடு: சோனி மியூஸிக்

விகடன் வரவேற்பறை

னதை ஊடுருவி மென்தென்றல் சுகமளிக்கும் ராஜா மேஜிக் மெலடி 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி’ பாடல். அழகிய மனைவி கிடைக்கவிருக்கும் குஷியில் குதித்தாடும் குதிரைக்காரனின் கொண்டாட்டத்தை 'பால் போல பனி போல நிறந்தானே’, 'நிலத்துல நடக்குது நிலவுக் கட்டி’ என்று எளிமை ரசனையாகப் பிரதிபலிக்கிறது ஃப்ரான்சிஸ் கிருபாவின் வரிகள். 'இளையராஜா குரலா?’ என்று ஆச்சர்யப்படுத்தி... வெட்கம், உற்சாகம் புதைத்து ஒலிக்கிறது குரல். 'முகம் பார்த்துத் தடுமாறிப் போனேனே... ம்க்கும்... ம்க்கும்... ம்க்கும்!’ என்று கவிதைக் குறும்பும் இசைக் குற்றாலமுமாகக் குதூகலப் பாடல். திருவிழா சாட்டலில் துவங்குகிறது 'அடியே இவளே’ பாடல். தஞ்சை செல்வியின் குரலும் மெல்லிய மேளமுமாகப் பயணிக்கும் பாடலின் இடையிடையே சுதியுடன் வெடிக்கும் அதிர்வேட்டு இசை, உச்சகட்டத்தில் அழகர்சாமி கோயில் திருவிழாவின் நடுவில் அருளேற நிற்கும் பக்தனின் மன நிலைக்குக் கொண்டுசெல்கிறது. மலைப் பாதை பேருந்து ஜன்னல் பயண சுகம் 'பூவக் கேளு காத்தைக் கேளு’ பாடலில். ராஜாவின் ரசனை ஆல்பம்!