மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

வாலி 1000 திரையிசைப் பாடல்கள் தொகுதி 1, தொகுதி 2.
வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, சென்னை-17.  
பக்கம்: 560+600  விலை:

விகடன் வரவேற்பறை

250+250  

விகடன் வரவேற்பறை

வாலிபக் கவிஞர் வாலியின் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்பு. கண்ணதாசன், வைரமுத்து, தாமரை என்று பல தலைமுறைக் கவிஞர்களையும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டும் கடந்த பிறகும் வாலியின் வரிகளில் இளமை மிளிர்வது வியப்பு. 'அவளுக்கும் தமிழென்று பேர் அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்’ என்று மனதை உருக்கவும் செய்வது, 'லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்று விசிலடிக்கவும் வைப்பதே வாலித்தமிழ்!

ஆமால்ல! http://simple-iq.com/

விகடன் வரவேற்பறை

நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று தெரிந்துகொள்ள இங்கு கிளிக்குங்கள். 13 நிமிடங்களில் 38 கேள்விகளுக்கு 'ஆம்’ அல்லது 'இல்லை’ என்று மட்டும் பதில் அளிக்க வேண்டும். இடது கையுறையை அப்படியே உள்பக்கமாகத் திருப்பினால் வலது கையுறையாகப் பயன்படுத்த முடியுமா என்பது ஓர் உதாரணம். உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஒரு பட்டமும் கொடுக்கிறார்கள். நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்!

பழமை.. இனிமை! www.moganaraagam.blogspot.com

விகடன் வரவேற்பறை

கிராமிய நாட்டுப்புறப் பாடல்களையும் பழைய திரை இசைப் பாடல்களையும் தொகுக்கும் வலைப்பூ. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், காசி ஆனந்தன், கானாப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சோகப் பாடல்கள், சீர்காழி கோவிந்தராஜன், கே.ஜே.யேசுதாஸ், நகைச்சுவைப் பாடல்கள், துள்ளலிசை எனத் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள். பல பாடல்களின் பின்னணியும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. பிடித்த பாடல்களைக் கேட்டால், தேடிப் பிடித்து அளிக்கவும் முயல்கிறது இந்த வலைப்பூ!

தம்பையனின் காடு  இயக்கம்: ரவி இன்பா

விகடன் வரவேற்பறை

காட்டில் இருக்கும் கனிம வளங்களைச் சுரண்ட முயல்பவர்களுக்கு எதிராகக் காட்டையே சுவாசமாகக்கொண்ட பழங்குடி சிறுவன் நடத்தும் உரிமைப் போர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பலா மரக் காடுகள் நிறைந்த கிராமம் இருளர் தொட்டி. அங்கே இறந்தவர்களுக்குக் குழி வெட்டுபவர் தம்பையன். அந்த காட்டுப் பகுதியில் கனிம வளம் இருப்பதைக் கண்டுபிடித்து, அவரிடம் இருந்து அபகரிக்க நடக்கும் போட்டியே படம். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பூதாகாரமாக வெடித்துக்கொண்டு இருக்கும் மாவோயிஸ்ட் பிரச்னையைத் தமிழில் நாசூக்காகக் கையாண்டு இருக்கிறார் இயக்குநர்!

எங்கேயும் காதல்  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ஒரே ரிதத்தில் ஒலிக்கும் 'எங்கேயும் காதல்’ பாடலில் ஆலப் ராஜுவின் குரல் ஐஸ்க்ரீம் உருகல். குபீர் உற்சாகம் கொப்பளிக்கும் ரிச்சர்ட்டின் குரல்தான் 'நங்காய்’ பாடலின் ஸ்பெஷல். கேட்டுப் பழகிய மெட்டுக்கு வாலியின் வார்த்தைகள் மட்டும் வளம். 'லோலிட்டா’ என்ற வார்த்தையில் ஒரு காந்தக் கவர்ச்சி. அதைக் குலைக்காமல் மெல்லிய பீட்களை ஒலிக்கிறது இசை. 'பெண்கள் என்றால் செடி... பற்றிக்கொள்ளும் கொடி’ என்று சிம்பிள் எதுகை மோனையில் ஈர்க்கிறது தாமரையின் வரிகள். ஜல்ஜல் இசை ஒலிக்கும் 'நெஞ்சில் நெஞ்சில்’ பாடலில் இதமாகப் பதமாகப் பொருந்தி ஒலிக்கிறது, ஹரிஸ் ராகவேந்திரா-சின்மயி குரல்கள். 'திமுதிமு’ பாடல் பல்லவி, சரணங்களை வருடுகிறது நா.முத்துக்குமாரின் மென்காதல் வார்த்தைகள். கைபிடித்து மழைப் பாதையில் அழைத்துச் செல்வதுபோல அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது கார்த்திக்கின் குரல்!
 

##~##