ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


ஸ்பெஷல் 1
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கோபாலபுர கிருஷ்ணன் கோயிலில் கருணாநிதியின் மகள் செல்வி வேண்டிக்கொண்டது சகோதரர்கள் அழகிரி, ஸ்டாலினால் நடந்தேவிட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்த கருணாநிதி குடும்பத்தில் டிசம்பர் 1-ம் தேதி குதூகலம். கோபாலபுரம் வீட்டில் சிண்டு சிமிழில் இருந்து சீனியர் வரை ஆப்சென்ட் ஆகாமல் அனைவரும் சந்தித்துப்பேசி, முறைசொல்லி உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டனர். 'சன்'னோடு 'சன்'களும் சேர்ந்துவிட்ட இந்த வைபவத்தில் பளிச்செனத் தெரிந்தது- கனிமொழி மிஸ்ஸிங். 'கலகல' குடும்பம்!

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் மன்னர் காலத்து கெட்-அப் என்பதால் லாங் ஹேர் ஸ்டைலில் வலம் வந்த பார்த்திபன், தான் அடுத்து இயக்கப் போகும் வித்தகனுக்காக 'மொட்டாக்' அடித்திருக்கிறார். செம அட்டாக்கா இருக்கே!

பைக், கார் என ரேஸ் பிரியராக இருந்த அஜீத், இனி ஹெலிகாப்டர் பிரியர். பெங்களூரில் ஃப்ளையிங் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். தொப்பையைக் குறைங்க தல?

இன்பாக்ஸ்

பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டில் இருக்கும் கமல் ஹாசனின் பூர்வீக வீட்டில் இப்போது மராமத்து வேலைகள் நடைபெற்று வருகின் றன. சீக்கிரமே பரமக்குடி நாயகன் சர்ப்ரைஸ் விசிட் வருவார் என்கிறார்கள். தலைவன் வருகின்றான்!

இன்பாக்ஸ்

சந்தோஷத்தில் திளைக்கிறார் அசின். ஒரு வருடமாக உலகம் முழுவதும் கஜினிக்காகப் பறந்தவர்,சொந்த மண்ணை ரொம்பவே மிஸ் செய்தார். இந்த வாரம் முச்சூடும் 'தனிஷ்க்' நகை விளம்பரத்துக்காக ஷூட்டிங் நடைபெறும் இடம் ஆலப்புழை படகு இல்லம். பிசின் மாதிரி ஒட்டிப்பாங்க!

தஞ்சாவூரில் நடந்த கவிஞர் யுகபாரதியின் திருமணத்தில், சர்ப்ரைஸ் விசிட்டர் வைரமுத்து. நேரில் வந்து சீனியர் வாழ்த்தியதில், நெகிழ்ச்சியில் இருக்கிறார் யுகபாரதி. தேனிலவுப் பாட்டு எழுதியாச்சா பாரதி?

இன்பாக்ஸ்

'நான் ஒரு வொர்க்கஹாலிக். நீங்கள் நினைப்பதுபோல ஆல்கஹாலிக் இல்லை!' என்று மீடியா நண்பர்களுக்கு லேட் நைட் எஸ்.எம்.எஸ். தட்டிவிடுகிறாராம் சிம்பு. லூஸூப் பெண்ணுக்கு அனுப்புவீங்களா பாஸூ?

இன்பாக்ஸ்

ப்ளே கேர்ள், லெஸ்பியன் என்றெல்லாம் நடித்து தாறுமாறாகத் தன் பெய ரைக் கெடுத்துக்கொண்ட இஷா கோபி கருக்கு, வருடத்தின் கடைசியில் லக் அடித் திருக்கிறது. சென்டிமென்ட் சினிமாவுக்கு பேர்போன ராஜ்

இன்பாக்ஸ்

பிக்சர்ஸின் 'ஏக் விவாஹ் எய்சா பி' என்ற சமீபத்திய ரிலீஸில் மேடத்துக்கு செம மைலேஜ் கேரக்டர். இந்த வருடத்தின் தேசிய விருது நிச்சயம் என்கிறது பாலிவுட். இஷாப் புயல்!

'ஈழப் பிரச்னை தீரும் வரை இனிப்பையே தொடப் போவதில்லை' என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார் சத்யராஜ். எப்போ வரும்... ஈழத்தில் இருந்து இனிப்பான செய்தி?

இன்பாக்ஸ்

ரஜினியின் 'எந்திரன்' படத்தில் காமெடியன் வடிவேலா... விவேக்கா? எதிர்பார்ப்பு எகிறுகிற நேரத்தில், சூப்பர் சான்ஸ் அடித்திருப்பது சந்தானத்துக்கு. பின்னிட்டீங்க ஜூனியர் சவுண்டரே!

இன்பாக்ஸ்

மும்பை டெரரிஸ்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்ட தலைகளில் சிவராஜ் பாட்டீலுடன் ராஜ்தாக்கரேவும் உண்டு. 'மும்பையைக் காப்பாற்ற பிற மாநில வீரர்கள் வந்தாங்க. நீங்க எங்கே போனீங்க?' என்ற மெசேஜ்தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக ஃபார்வர்டு ஆகிறது. தாக்கரேவுக்கே தாக்கா?

இன்பாக்ஸ்

ஜெர்மன் சூப்பர் மாடலான ஹீடி க்ளம், சிறுவயதிலிருந்து விழுந்த தன் பற்கள் அனைத்தையும் சேகரித்துவைத்திருக்கிறார். ''சிறு வயதில், ஒரு தேவதை வந்து, விழுந்த பல்லுக்குப் பதில் ஒரு பரிசு தரும்' என்று சொன்னதை நம்பி, ஆரம்பித்த பழக்கம் அப்படியே தொடர்கிறது'' என்கிறார். உங்களை மாதிரி ஃபிகர்லாம் என்ன வேணா பண்ணலாம்!

இன்பாக்ஸ்

எக்கச்சக்க செலவில் தான் கட்டி வந்த கனவு இல்லத்தின் வேலைகள் முடிந்த குஷியில் இருக்கிறார் விக்ரம். அதே ஸ்பீட்ல சினிமால வீடு கட்டி அடிங்க!

ஓய்வுநேரத்தில் ஸ்டாலினின் பொழுதுபோக்கு கருணாநிதியுடன் விளையாடுவது. ஆச்சர்யம் வேண்டாம்... வசந்தி ஸ்டான்லி எம்.பி-யின் வளர்ப்புக் குழந்தையின் பெயர்தான் கருணாநிதி. அந்த 2 வயதுச் சிறுவன் செய்யும் சேட்டைகளுக்கு ஸ்டாலின் செம ரசிகர். அதனாலேயே அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து கொஞ்சி விளையாடி மகிழ்கிறார். விளையாட்டுப் பிள்ளை!

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக யுவன்போட்டுக் கொடுத்தத பாட்டு என்னாச்சு? வைரமுத்துவின் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் வேலை நடக்கிறது. ஏற்கெனவே போட்ட 2 பாடல்களின் டியூனையும் வரிகளையும் முறைப்படி யுவன், நா.முத்துக்குமார் இருவருக்கும் கடிதம் மூலம் திருப்பிக் கொடுத்திருக்கிறார் செல்வராகவன். கூட்டணி முறிவுக் காலங்கள்!

இன்பாக்ஸ்

கோடம்பாக்கமே இலியானாவுக்காகக் கோடங்கி அடிக்க, பொண்ணு சத்தமில்லாமல் ஷாமுக்கு ஜோடியாகி, அதிர்ச்சி பெட்ஷீட் விரித்திருக்கிறது. தெலுங்கு டைரக்டர் சுரேந்தர் ரெட்டி, இரு மொழிகளில் இயக்கும் போலீஸ் கதையில் ஷாமுக்கு ஜோடியாம் இலி. என்னமோ போங்க!

இன்னும் சில வாரங்களில் பிரகாஷ் காரத் - ஜெயலலிதா சந்திப்பு நிகழும் என்று அரசியல் ஆரூடம் சொல்கிறார்கள் தோழர்கள். கூட்டணிப் பேச்சுக்கு அச்சாரம் போட்டு, சந்திப்புக்குத் தேதி குறித்தவரே தோழர் தா.பாண்டியன்தானாம். கீப் லெப்ஃட்!

இன்பாக்ஸ்

இப்போதும் கேங் கட்டித் திரியும் 'சுப்ரமணியபுரம்' ஜெய்க்கு, வண்ணாரப்பேட்டை ஏரியாவில் நட்பு வட்டம் ரொம்பப் பெருசு. நேரம் கிடைத்தால் காசிமேடு துறைமுகம் பக்கம் காத்தாட டிரைவ் போய் நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு வருகிறார். சூப்பரு அழகரு!

இன்பாக்ஸ்

சென்னை வந்த பிரியங்கா சோப்ராவிடம், 'டேனியல் கிரேக், ரஜினிகாந்த் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்டால், யாருக்குக் கொடுப்பீங்க?' என்று நம்ம ரிப்போர்ட்டர்கள் கொக்கி போட... மேடத்தின் பதில், ''ஆப்ஷனே இல்லை. ரஜினிக்குத்தான்!'' செம 'சோப்'ரா!

இத்தனை நாள் சினிமாவின் நிழல் படியவே கூடாது என்று மதுரையில் தன் குடும்பத்தை வைத்திருந்த இயக்குநர் அமீர் மனதில் இப்போது மாற்றம். புது வருடத்துக்குள் சென்னைக்கு தன் குடும்பத்தை அழைத்து வர ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். நடக்கட்டும்... நடக்கட்டும்!

இன்பாக்ஸ்

இசையமைப்பாளர்கள் இரவுக் குயில்கள் என்பது எழுதாத நியதி. ஹீரோயின் வித்யாபாலனும் 'நைட்டிங்கேர்ள்'. ஏங்க என்றால்... ''மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் விழித்திருப்பவர்கள் சாதனையாளர்கள் ஆவார்கள்'' என்று தத்துவத்தில் குத்துகிறார். தூங்கு... தூங்கவிடு!

மாயாவதியுடன் அடிக்கடி போனில் கதைக்கும் தமிழக வி.ஐ.பி. ம.நடராஜன். விரைவில் தமிழகத்துக்கு வரப் போகும் மாயாவதியை நேரில் சந்திக்கும்போது பேசுவதற்காக நிறையத் திட்டங்கள் ரெடி பண்ணிக்கொண்டு இருக் கிறாராம். சீக்கிரமே சேதி சொல்லுங்க!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்