ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!

ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!


ஸ்பெஷல் 1
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
 
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!

யங்கரவாதிகளுடன் நடந்த வேள்வியில் தங்கள் உடலையே விறகாக்கி மடிந்த இந்திய வீரர்களுக்கு முதலில் வீர வணக்கம்!

12 பேர் சேர்ந்து மொத்த நாட்டையே ஸ்தம்பிக்கவைக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறார்கள் தீவிரவாதிகள். ஆட்களைச் சுடுவார்கள், இடத்தைத் தரைமட்டமாக்குவார்கள், டைம் பாம்கள் வைப்பார்கள் அல்லது விமானத்தை ஹைஜாக் பண்ணுவார்கள். ஆனால், ஒரே நேரத்தில் நான்கைந்து கட்டடங்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு அரசாங்கத்தை அச்சுறுத்துவது இந்தியாவுக்குப் புதிது!

26-ம் தேதி இரவு மும்பை கொலாபா துறைமுகத்துக்கு ஆயுதங்களுடன் வந்த 12 பேர் - இரண்டிரண்டு பேர்களாகக் கொண்ட குழுவாகப் பிரிந்து தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், மற்றும் சி.எஸ்.டி-க்குப் போனார்கள். போன வேகத்தில் நினைத்ததைவிட எளிதாக அந்த இடங்களை வசப்படுத்தினார்கள். ஆளுக்கு ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 8 கையெறி குண்டுகள், 50 துப்பாக்கிக் குண்டுகள். இவை மட்டுமே கையிருப்பு.

இரவு நேரம் என்பதால், நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டாரன்ட்டில்தான் அதிகமான ஆட்கள் இருந்திருக்கிறார்கள். அங்கே நுழைந்து வெறித்தனமாகச் சுட்டு ரத்தப் பலியை ஆரம்பித்திருக்கிறார்கள் தீவிரவாதிகள்.

ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!

காப்பாற்றப்பட்டவர்கள், தப்பி வந்தவர்கள் என இந்த ரத்த நிமிடங்களின் 'ஐ விட்னஸ்' வாக்குமூலம் நம்மை உறையவைப்பவை...

''எனக்கு மறுஜென்மம் கிடைத்தது போல் உள்ளது. நான் உயிருடன் இருப்பதை இன்னும்கூட என்னால் நம்ப முடியவில்லை'' என்கிற சுதர்சனுக்குக் கண்களில் நீர் முட்டுகிறது.

தமிழ் இளைஞரான சுதர்சன், 'தாஜ்மகால் பேலஸ் அண்ட் டவர்ஸ்' ஓட்டலில் ஃபுட் அண்ட் பிவரேஜ் அசிஸ்டென்ட் பணியில் பணியாற்றுகிறார். ''26-ம் தேதி இரவு, நான் என் சீனியர்களுடன் மூன்றாவது மாடியில் இருந்தேன். 9.45-க்கு, 'டமார் டமார்'னு பயங்கரச் சத்தம். என்ன பிரச்னைன்னு பார்க்கக் கீழே இறங்கினோம்.

இரண்டாவது மாடியில் ஓர் இளைஞன் சின்னத் துப்பாக்கியுடன் இருந்தான். பக்கத்திலேயே இன்னொருவன் கையில் ஏ.கே.47 மாதிரி பெரிய துப்பாக்கி. எங்களுக்கு உதறலாகி, ஓடிப் போய் ரிசப்ஷனுக்கு போன் போட்டேன். தொடர்ச்சியான சத்தத்தைக் கேட்டு பல கெஸ்ட்கள் ரூமைவிட்டு வெளியே வந்தனர். ஆறாவது மாடியில ரூம் நம்பர் 627-ல் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு கெஸ்ட் அந்தோணியா க்ருப்ட் ரொம்ப வயதானவர். தட்டுத் தடுமாறி என்னிடம் வந்து விசாரிச்சார். அவரைப் பயமுறுத்த வேணாம்னு நினைச்சு, 'ஒண்ணுமில்ல சார்! ஏதோ பொருள் கீழே விழுந்திருச்சு'ன்னு சொல்லி, அவரது ரூம் வரை போய்விட்டு விட்டுத் திரும்பும்போது, 6-வது மாடியின் இன்னொரு முனையில் துப்பாக்கிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. நான் கீழே பார்த்த இரண்டு பேர் வெளிநாட்டினரைப் பார்த்துச் சுடுவதையும், அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிவதையும் பார்த்து அதிர்ச்சியில் அப்படியேநின்றுவிட் டேன். என்னைத் தீவிரவாதிகள் பார்க்கவில்லை.எனக்குப் பின்னால் நின்ற அந்தோணியா க்ருப்ட், என் கையைப் பிடித்து அவர் அறைக்குள் இழுத்து கதவைச் சாத்திவிட்டார். எனது செல்போனில் 'ரூமைவிட்டு யாரும் வெளிய வர வேண் டாம்'னு தகவல் சொன்னாங்க. அறையின் விளக்குகளை அணைத்துவிட்டோம். அந்த ரூமில் இருந்த லக்கேஜ், டேபிள் மற்றும் ஃபிரிஜ்ஜை இழுத்துவந்து கதவுக்கு அருகில் சாத்திவைத்தேன். ஒருவேளை, தீவிரவாதிகள் கதவை உடைக்க நினைத்தால், அதைத் தடுக்கத்தான் நப்பாசையில் இதைச் செய்தோம். வெளியில் என்ன நடக்கிறது என்பதைக் கதவின் வியூ பாயின்ட் வழியே பார்த்துட்டே இருந்தோம். எந்தெந்த ரூம்ல லைட் எரிஞ்சுதோ, அந்த ரூம்களைத்தான் முதல்ல சுட ஆரம்பிச்சாங்க. பதற்றத்துல கதவைத் திறந்த வங்களைச் சுட்டுக் கொன்னாங்க. கொஞ்ச நேரமாகியும் கதவு திறக்கலைன்னா, கதவுகளின் லாக்குகளில் துப் பாக்கியால் சுட்டு உடைத்தனர். வெடிகுண்டுச் சத் தமும், துப்பாக்கி சுடும் சத்தமும், மக்கள் அலறுவதும் கேட்டுட்டே இருந்தது.

திடீர்னு தீ எரியுற நாற்றம். வராண்டாவில் இருந்த கார்ப்பெட் தீப்பிடித்து எரிஞ்சு, எதிர்ப் பக்கமா இருந்த ரூம் கதவும் தீப்பிடிக்க, எங்க ரூமுக்குள்ளும் புகை வர ஆரம்பிச்சது. இருமினா, சத்தம் கேட்டா எங்க ரூமைக் குறிவெச்சிருவாங்க. மெதுவா வாய், மூக்கைப் பொத்திக்கிட்டு இருமிட்டே இருந்தோம். இதுக்கு மேல உயிரோட வாழ முடியும்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஜன்னல் வழியா கீழே குதிச்சா என்னன்னு யோசனை வந்தது.

ஒவ்வொரு மாடிக்கும் இடையில ஸ்லாப் இருக்கும். அதுக்குப் போயிடலாம்னு முடிவுபண்ணி, அங்கிருந்த ஸ்கிரீன்களை அவிழ்த்து மூணு பேரும் கட்டிக்கிட்டோம். ஜன்னல் வழியா இறங்கி, அந்த ஸ்லாப்பில் நின்று பார்த்தால், கீழே இருந்த நீச்சல் குளமே ரத்தச் சிவப்பா இருந்தது. நீச்சல் குளத்தைச் சுற்றிலும் பிணக் குவியல். இதை நாங்க எதிர்பார்க்கலை. அடுத்தது நாமதான்னு நினைப்போட தொங்கிட்டு இருந்தோம்.

நாங்க எந்த ஸ்லாப்ல நின்னுட்டு இருந்தோமோ, அந்த ஐந்தாவது மாடியில்தான் தீவிரவாதிங்க சுட்டுட்டு இருந்தாங்க. எங்களுக்குக் கீழே இருந்த ஸ்லாப்பிலும் சில கெஸ்ட்டுகள் பயந்து நின்னுட்டு இருந்தாங்க. ஓர் அமெரிக்கர் கீழே பார்த்து 'ஹெல்ப் ஹெல்ப்'னு கத்திட்டு இருந்தார். 'அவரைக் கத்தாதீங்க'ன்னு சொன்னேன். அதைத் தீவிரவாதி ஒருத்தன் கேட்டுட்டான். உடனே அவரைச் சுட்டான். என் கண் முன்னாலஅவர் நீச்சல் குளத்துக்குள் விழுந்து இறந்துபோனார்.

அவரு விழுந்ததும் அந்த ஸ்லாப்புக்கு ரெண்டு தீவிர வாதிகள் வந்து வேற யாரும் இருக்காங்களான்னுதேடிப் பார்த்தாங்க. நாங்க அவங்களுக்கு மேலே இருந்ததால், எங்களைப் பார்க்க முடியலை. இல்லைன்னா, மொத் தமா எங்களை முடிச்சிருப்பாங்க. ஸ்லாப்பிலேயே ராத் திரி முழுக்க நின்னுகிட்டு இருந்தோம். மறுநாள் காலை 10 மணிக்கு தீயணைப்புப் படை வீரர்கள், ஏணியை மேலே அனுப்பிக் காப்பாத்தினாங்க'' என்று பேசி முடிக்கும்போது சுதர்சனின் முகத்தில் அத்தனை நிம்மதி!

 
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!
ஐ விட்னஸின் திக் திக் நொடிகள்!