7. சோட்டா ஷகீல்
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் இப்ராஹிமின் தளபதியாகச் செயல்பட்டவன். பாகிஸ்தானில் உள்ள இவன், 2006-ல் பிரியங்கா சோப்ராவின் மேனேஜரை மிரட்டியதாகச் செய்தி வெளியானது. பாகிஸ்தானில் இருந்தபடியே இந்தியாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து, ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கும் முக்கிய நபர். சிவசேனா தலைவர், பாலிவுட் பிரபலங்களைக் கொல்ல முயற்சி செய்ததாக, பல வழக்குகள் இவன் மீது உண்டு!
8. மிஷ்டி ஜஹூர் இப்ராஹிம்
இந்திய விமானத்தை காந்தகாருக்குக் கடத்திய தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். ஹர்கத் உல் அன்சார் என்ற அமைப்பைச் சேர்ந்த இவன், தற்போது வசிப்பது கராச்சியில் உள்ள டிஃபென்ஸ் காலனியில்!
9. அத்தர் இப்ராஹிம்
காந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவன். விடுதலை செய்யப்பட்ட மசூத் அசாரின் சகோதரன். காந்தகாரில் வசித்துவந்த இவன், அங்கு தலிபான் ஆட்சி அகன்றதும் பாகிஸ்தானில் குடியேறியதாக உளவுத் துறையினர் கூறுகின்றனர். இவன் மீது இன்டர்போலின் ரெட் கார்னர் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது!
10. ஆசிப் முகமது சையீத்
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பிதாமகன். பாகிஸ்தானில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவது ஆசிப்பின் இன்னொரு முகம். ஜம்மு காஷ்மீரில் நேரடித் தாக்குதல்களில் தொடர்புடையவன். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்களை மேற்பார்வை செய்து வருகிறான்!
இதுதவிர, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொட்புடைய சலிம் ஹாஜி இப்ராஹிம், ஜிகாதியை பரப்புவதில் நம்பர் ஒன்னாக விளங்கும் லஷ்கர்-இ-தொய்பா ராணுவ கமாண்டர் அசிம் ச்சீமா, பஞ்சாப்பைப் பிரித்து 'தனி காலிஸ்தான்' வேண்டும் என்று போராடிய தீவிரவாதிகள் வாத்வான் சிங் பப்பர், ரஞ்சித் சிங் நீட்டா, சீக்கிய இளைஞர் கூட்டமைப்பைத் தொடங்கிய லாக்பீர் சிங் ரோட் ஆகியோரும் பாகிஸ்தானில் பத்திரமாக வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டியதை அளித்து பத்திரமாகப் பார்த்து பராமரிக்கிறது ஐ.எஸ்.ஐ. காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடத்தல், கொலை, ஆயுதங்களைவைத்து கலவரத்தை தூண்டியது உள்பட பல வழக்குகள் உள்ளன!
|