எல்லா தொலைதொடர்புச் சாதனங்களையும் பறிச்சிட்டாங்க. எங்களைப் பத்தின முழு விவரங்களையும் எழுதி வாங்கினவங்க, துப்பாக்கி முனையில் கப்பலை அவங்க சொல்ற திசையில் ஓட்டச் சொன்னாங்க. கடலுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்தோம். திடீர்னு கப்பலை ஒரு தீவுல போய் நிறுத்தச் சொன்னாங்க.
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பிணைத் தொகையாக் கேட்டாங்க. 'ரொம்பப் பெரிய தொகை. கப்பலே உங்ககிட்டதான் இருக்கு. அதோட சரக்குக்கு ஏத்த விலையைக் கேளுங்க!'ன்னு பேரம் பேசிட்டே இருந்தாங்க. இதுக்கிடையில் கப்பல்ல இருந்த சாப்பாடும் குறைஞ்சுட்டே வந்தது. 'பாவம்! பசங்க பொழைச்சுப் போகட்டும்!'னு நினைச்சோ என்னவோ, கொள்ளைக்காரங்க அவங்களே அரிசி, ஆட்டிறைச்சியை வெச்சு ஏதோ சாப்பாடு சமைச்சாங்க. பேச்சுவார்த்தை இழு பறியிலேயே இருக்கவும், 'உங்கள் மாலுமிகளைக் கொன்னுடுவோம்!'னு கப்பல் ஓனருக்குத் தகவல் அனுப்புனாங்க. நாங்க திகிலடிச்சுப் போயிட்டோம்!'' என்றார் இன்னும் பதற்றம் விலகாமல்.
மேற்கொண்டு தொடர்ந்தார் மாலுமி ஜெராஃபின். திருச்செந்தூரைச் சேர்ந்த இவர், தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷீஜாவை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ளும் அவசரத் தில் இருக்கிறார்.
''பின்னே... சும்மாவா சார்? 'வீட்டுக்குத் திரும்பி வருவேன்'கிற நம்பிக்கையே இல்லாம இருந்தேன். இப்ப மறுபிறப்பு எடுத்தது மாதிரி மீண்டு வந்திருக்கேன்ல. டிசம்பர் 29 எங்க ளுக்குக் கல்யாணம்'' என்று உற்சாகத்தில் திளைத்தவரை, கப்பல் கதைக்குள் இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
|