உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்!
1. A எனது கருத்துக்களைத் தயங்காமல் மேலதிகாரிகளிடம் முன்வைப்பேன்.
B எனது மேலதிகாரிகள் கேட்க விரும்பு வதை மட்டுமே எனது கருத்தாக வெளிப்படுத் துவேன்.
2. A நிறுவனத்தின் சக ஊழியர்கள் புகார்களை அடுக்கினால், பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடுவேன்.
B அந்தச் சமயம் நானும் அவர்களோடு இணைந்துகொள்வேன்.
3. A எனது தவறுகளை ஒப்புக்கொண்டு, அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பேன்.
B தவறு நேர்ந்துவிட்டது என்று தெரிந்தவுடன், எவர் மீது பழி போடலாம் என்று கவனம் திசை திரும்பும்.
4. A கடினமான சவால்களை வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்வேன். அவை என்னைத் தூண்டிச் சாதிக்கச் செய்யும்.
B ஒதுங்கி ஓரம் போவேன். அவை என்னை சோர்ந்து நொந்துபோகச் செய்யும்.
5). A எனது உணர்வுகளை மற்றவர்கள் தீர்மானிக்கவிட மாட்டேன்.
B பலர் என்னைச் சீண்டி உணர்ச்சிவசப்படச் செய்வதுண்டு.
6. A செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டால், அதைச் சாத்தியப்படுத் துவதற்கான வேலைகளில் இறங்கிவிடுவேன்.
B செயல்திட்டங்களின் குற்றம் குறைகளைப் பட்டியலிடத் தொடங்குவேன்.
7. A நிலைமை சிக்கலாகி பொருளாதாரங்கள் பற்றாக்குறையாகும்போது, இருப்பதைக்கொண்டு என்ன சாத்தியம் என்று பார்ப்பேன்.
B எவையெல்லாம் சாத்தியம் இல்லை என்று பார்ப்பேன்.
8. A நேரத்தையும் சக்தியையும் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் செலவழிப்பேன்.
B எனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பேன்.
9. A நிறுவனத்தில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 'எனது வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்க எனது தகுதியை அதிகரித்துக்கொள்வது எப்படி?' என்ற கேள்விக்குப் பதில் தேடத் தொடங்குவேன்.
B அந்தச் சமயம் நிறுவனத்தின் மீது வெறுப்பு, கோபம், விரக்தி தோன்றும்.
10. A எனது வேலையைக் காதலிக்கிறேன்.
B அது ஒரு வேலை... அவ்வளவுதான்!
ஒவ்வொரு ஙி பாயிண்ட்டுக்கும் ஒரு மார்க், கி பாயின்ட்டுக்கு ஜீரோ மார்க் கொடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பரீட்சையின் முடிவை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் மட்டுமே கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். அதனால் 'நேர்மையான மதிப்பெண்களுடன் இறுதிப் பகுதிக்கு வாருங்கள்.
வெற்றி Vs தோல்வியைத் தவிர்ப்பது:
வாழ்க்கை என்பது எந்த அலுங்கலும் குலுங்கலும் இல்லாத, கல்லறையை நோக்கிய பயணமாக இருக்கக் கூடாது. பத்திரமாக, பாதுகாப்பாக, அலங்கரிக்கப்பட்ட சடலமாக சுடுகாடு வந்து சேர்வதில் என்ன சாதனை இருக்கிறது. சறுக்கு மரத்தில் சறுக்கிய தழும்புகள், ஒரு கையில் சாக்லேட், ஒரு கையில் ஒயின், உடலின் ஒவ்வொரு பாகமும் முழுமையாக உபயோகிக்கப்பட்ட திருப்தி, அதற்கு மேல் கொண்டாட தருணங்கள் மிச்சமில்லாத உணர்வுடன், 'வாரே வாவ்! என்ன ஒருபயணம்!' என்று ஆச்சர்யம் தெரிவிப்பதில் இருக்கிறது சாகச சந்தோஷம்!
ரிசல்ட்:
(0-2) இந்த மதிப்பெண்களுக்கு உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் மிகவும் உபயோகமான, உங்களுக்கு நீங்களே ஒரு ரோல்மாடலாக இருப்பீர்கள். ஆனால், இந்த மெச்சூரிட்டிக்கு மற்றவர்களைவிட அதிகக் கடினமான தருணங்களை நீங்களும் கடந்து செல்ல வேண்டியிருக்கும். தயங்காமல் எதிர்கொள்ளுங்கள்!
(3-5) பல சமயங்களில் நீங்களாகவே வலிந்து எடுத்துக்கொள்ளும் பொறுப்புகள் காரணமாக, மற்ற ஊழியர்கள் உங்களை மதிக் கும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால், சின்னச் சின்ன சறுக்கல்களின்போதுகூட, உங்களைப் பின்னால் பிடித்து இழுக்கக் காத்திருப்பார்கள். உஷார்!
(6-7) உள்ளுக்குள் ஏகப்பட்ட ஐடியாக்கள் தோன்றினாலும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாததால் உங்களுக்குத்தான் சிக்கல். உங்களைப்பற்றி உசத்தியாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அந்தத் தகுதி இருந்தும்,தயங்கிக் கொண்டு இருப்பவர்கள் நீங்கள்!
(8-10) எச்சரிக்கை, 'சடலங்கள் வேலை செய்கின்றன!' ஆம், நிறுவனத்தின் வேலையில் நீடித்திருப்பதற்கான குறைந்தபட்சத் தகுதி மட்டுமே உங்களிடம் மிச்சம் இருக்கிறது. உங்களுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்!
|